13 செப்., 2012

வரலாற்றில் சில மைல் கற்கள்-2: செப்டம்பர் பதின்மூன்றாம் நாள்

 
வரலாற்றில் சில மைல் கற்கள்-2: செப்டம்பர் பதின்மூன்றாம் நாள்

செப்டம்பர் பதின்மூன்றாம் நாள் வருடத்தின் 256வது நாள் (லீப் வருடமாயின் 257வது நாள்). இந்த ஆண்டில் இன்னும் 109 நாட்கள் மீதி உள்ளன.

§                    1213 மூரட் யுத்தம் முடிவுக்கு வந்த நாள் இது பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/Battle_of_Muret
                     
§                    1923 இந்த நாளில் ஸ்பெயினில் இராணுவப் புரட்சி மூலம் மிகுயல் ப்ரைமோ டிரிவேரா ஆட்சியைக் கைப்பற்றுதல்
                    சர்வாதிகாரி டிரிவேரா பற்றி மேலும் அறிய:

§                    1953ல் இந்த நாளில் குருஷ்சேவ் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப் படுதல்.  குருஷ்சேவ் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/Nikita_Khrushchev

§                    1956ல் இந்த நாளில் அமெரிக்க மல்டி நேஷனல் கணினி நிறுவனமான முதல் கம்ப்யூட்டர் தகவல் சேமிப்புத் தட்டை அறிமுகப்படுத்தியது (RAMAC 305).
                    ஐபிஎம் நிறுவனம் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/IBM

§                    1968ல் இந்த நாளில் அல்பேனியா வார்சா உடன்படிக்கை நாடுகளின் குழுவில் இருந்து வெளியேறல்.  வார்சா உடன்படிக்கை பற்றி அறிய:
                   http://en.wikipedia.org/wiki/Warsaw_Pact

§                    1971ல் இந்த நாளில் சீன மக்கள் குடியரசின் இரண்டாவது தலைவரும், மாவோவிற்குப் பிறகு அவருடைய இடத்திற்கு வாரிசாகக் கருதப்பட்ட லின் பியாவ் மாவோவிற்கு எதிரான திடீர்ப் புரட்சியில் தோல்வியுற்று, தப்பிச் செல்ல முயல்கையில், அவரது விமானம் விபத்திற்குள்ளாகி அவரும், அவருடன் சென்ற மற்றவர்களும் மரணம். லின் பியாவ் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/Lin_Biao

§                    2001ல் இந்த நாளில் செப்டம்பர் பதினோராம் நாள் பயங்க்கரவாத தாக்குதலுக்குப்பின் நிறுத்திவைக்கப் பட்டிருந்த, சிவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாதல்.

§                    2008ல் இந்த நாளில் டில்லியில் தொடர் குண்டுவெடிப்பால் முப்பது பேர் மரணம். நூற்று முப்பது பேர் காயம்.
                    டில்லி தொடர்குண்டுவெடிப்பு பற்றி மேலும் அறிய:

§                    1876ல் இந்த நாளில் அமெரிக்க எழுத்தாளர் ஷெர்வுட் அன்டர்சன் பிறந்தார்.
                    ஷெர்வுட் அன்டர்சன் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/Sherwood_Anderson
               அவரது புகழ் பெற்ற வைன்ஸ்பெர்க், ஒஹயோ நாவலை முழுமையாகப் படிக்க:
                    
§            1894ல் இந்த நாளில் பிரபல ஆங்கில நாவலாசிரியரும், நாடக ஆசிரியருமான ஜே.பி.பிரீஸ்ட்லி பிறந்தநாள். அவரைப் பற்றி மேலும் அறிய:
                    http://en.wikipedia.org/wiki/J._B._Priestley
                   
§            1916ல் ஆங்கில எழுத்தாளர் ரோல்ட் டால் பிறந்த நாள். (இவருடைய சிறுகதைகள் மிகச் சிறப்பாக இருக்கும்.  அவற்றில் ஒரிரு கதைகளை நான் படித்திருக்கிறேன்.)  அவரைப் பற்றி மேலும் அறிய:
                
§            1969ல் இந்த நாளில் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுருள் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் பிறந்த நாள்.

§             1971ல் இந்த நாளில் குரொசியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் ஆட்டக்காரர் கோரன் இவானிசெவிச் பிறந்த நாள்.

§                    1976ல் இந்த நாளில் பிரபல நியூஸிலாந்து கிரிக்கெட் ஆட்டக்காரர் கிரெய்க் மாக்மில்லன் பிறந்த நாள்.

§                    1987ல் இந்த நாளில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் பிறந்த நாள்.

§                    0081ல் ரோமானியச் சக்கரவர்த்தி டைட்டஸ் மறைவு.  அவரைப் பற்றி மேலும் அறிய:
§                    http://en.wikipedia.org/wiki/Titus

§                    1592ல் உலகப் புகழ் பெற்ற பிரஞ்சு கட்டுரையாளர் மீஷல் டி மொன்டைன் மறைவு.
§                    http://en.wikipedia.org/wiki/Michel_de_Montaigne
§                    மொன்டைனின் கட்டுரைகளை முழுமையாகப் படிக்க:
§                    http://www.gutenberg.org/files/3600/3600-h/3600-h.htm

§                    1598ல் இந்த நாளில் ஸ்பெயின் நாட்டு மன்னர் இரண்டாம் பிலிப் மறைவு.       அவரைப் பற்றி அறிய:   http://en.wikipedia.org/wiki/Philip_II_of_Spain

§ இந்த நாள் சர்வதேச சாக்லேட் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நன்றி:  ப்ராஜெக்ட் கூட்டன்பர்க் மற்றும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: