30 நவ., 2017

சிரிக்கவும் சிந்திக்கவும்,-5: மனைவி போன்

Call from Wife:
கணவன் : சொல்லுடா தங்கம், என்ன

மனைவி:  ஏங்க இன்னைக்கு ​தேதி என்னங்க ⁉​

கணவன்:  இன்னைக்கு தேதி 12 ஏன்மா⁉

மனைவி: ​ஒன்னும் இல்ல,​ வைய்ங்க.

கணவன்:  பதற்றம் அடைந்தவனாக  *அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே என்ன ஆச்சோ, என்ன தேதியோ தெரியலயே,

Eb பில் கட்டியாச்சு
பால் பணமும் கொடுத்தாச்சு
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு
கேபிள் பணமும் கொடுத்தாச்சு

தன் அம்மாவுக்கு போன் பண்றான்♂
அம்மா எங்க கல்யாண நாள் எப்போ‼⁉

அடுத்த மாசம் டா. ஏன்⁉

ஒன்னும் இல்ல. வை

🙎மாமியாருக்கு போன் பண்றான்

அத்தை.. மாலாவுக்கு  பிறந்தநாள் எப்போ⁉

12வது மாசம்தான் மாப்ள. ஏன்.‼⁉❓

சும்மாதான் கேட்டேன். நான் அப்புறம் பேசுரேன்.

தன்👱மகனுக்கு போன் பண்றான்

அம்மா ஏதும் பாத்திரத்த ஒடைச்சாளா⁉
இல்லப்பா

கோபமா இருக்காளா❓

இல்லப்பா

என்ன பண்றாள்⁉❓

டீவீ பாக்குறாங்கப்பா.

சரி வை

மனைவிக்கு போன் பண்றான்♂

தங்க புள்ள... ஏன்டா தேதி கேட்ட⁉

ஒன்னும் இல்லங்க காலண்டர்ல ரெண்டு நாளா தேதி கிளிக்கல அதான் கேட்டேன்

சரிடா வைச்சிட்றேன்


பயபுள்ள கொஞ்ச நேரத்ல பதறவெச்சிருச்சே‍♂.. லூஸ்

Posted as received in WhatsApp

கருத்துகள் இல்லை: