*🍇பழனி ஆயர்பாடியில் இயன்ற அளவு இயற்கை வாழ்வியல் பயிற்சி📞9965042543,*
*👩🎤பெண்களே உங்களுக்காக (நிச்சயமாக ஆண்களுக்கும்) நூல் பதிவு-10*
😀😃😄😁😆😅😂🤣😍
*டாக்டர் பஸ்லூர் ரஹ்மான் MBBS DV MRSH MD PhD (Acu)*
*சக்கரை-ஒரு விஷம்*
*நாக்கை அடக்குங்கள்! மண்ணீரலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்*
*வயிறும், மண்ணீரலும் உடல், உள்ளத்தின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதைத் தெரிந்துகொள்ள ஆயத்தமானோம்.*
*அதாவது, வயிறும், மண்ணீரலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய உறுப்புக்கள். வயிறோ, மண்ணீரலோ, இவற்றுள் ஏதேனும் ஒன்று பாதிப்புக் குள்ளாகுமேயானால் மற்றதன் இயங்கும் திறன் கண்டிப்பாகக் குறைவுபடும்.*
*வயிறு கெடுவதற்குக் காரணம், மண்ணீரலின் இயங்காமையே, மண்ணீரல், தான் இயக்கம் பெறும் சக்தியை நாக்கிலிருந்து கிரகிக்கிறது. நாக்கில் அல்லது வாயில் எவ்வளவு நேரம் உணவு இதமாகக் கரைகிறதோ, அந்த அளவுக்கு மண்ணீரல் சுறுசுறுப்படைகிறது.*
*மண்ணீரல் தெம்புடன் சுறுசுறுப்புடன் இயங்கக் கூடிய சக்தியைப் பெற்றிருக்கும் போது அதாவது நாக்கிலிருந்து உணவானது வயிற்றுக்குள் இறங்குவதற்கு முன்பாகவே உமிழ்நீரின் ஜீரணத்தின் வாயிலாக மண்ணீரலானது அவ்வுணவின் சாரம் முழுமையையும் கிரகித்துவிட்ட நிலையிலிருக்கும் போது வயிற்றுக்குள் விழுங்கப்படும் எந்த உணவும் முறையாக ஜீரணிக்கப்பட்டுவிடும். வயிறு பாதிப்புக்குள்ளாகாது.*
*ஒரு உணவின் சாரம் என்பது என்ன?*
*ஒவ்வொரு உணவு பதார்த்தமும் ஐந்து ருசிகளின்*சாரத்தை குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் தன்னகத்தே கொண்டு இருக்கிறது.அதாவது,இனிப்பு, கசப்பு, துவர்ப்பு,காரம், உப்பு என்ற இந்த ஐந்து வகை ருசிகளைக் கொண்டதாகும்.ஒவ்வொரு உணவுப் பொருளும் பஞ்ச பூதங்களின் படைப்பாகும். எனவே பஞ்ச பூதங்களின் சாரம்(ருசித்தன்மை; சக்தி) ஒருங்கே இணையப்பெறாத உணவு வகைகளே கிடையாது.*
*ஒரு அரிசி மணியை எடுத்துச் சுவையுங்கள். அதாவது பஞ்ச பூதங்களின் சாரத்தின் சேர்க்கையை கொண்டுள்ள அந்த அரிசியனது உமிழ்நீரில் மென்மைப்பட, பற்களால் கடிபட்டு நொறுங்கி,உதிர்ந்து கூழாகும் வரையிலான ஒவ்வொரு படித்தரத்திலும் ஐம்பூதங்களின் சாரம் ருசித்தன்மை வெளிப்படுகிறது. அரிசி மணியானது சுவைக்க ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து உப்பு,லேசனா இனிப்பு, துவர்ப்பு, கசப்பு போன்ற சுவைகள் இந்த பதர்த்தத்தில் கலந்துள்ள சேர்க்கையின் விகிதாச்சாரப்பபடி வெளியேறுகின்றன.*
*இந்த விகிதாசசாரச் சேர்க்கையின் அடிப்படையில் தான் ஓவ்வொரு உணவுப் பொருளின் உருவமைப்பும்,தன்மையும் அமைகிறது.*
*ஒரு திராட்சைப்பழம், நாவல்பழம், நெல்லிக்காய், எழுமிச்சை என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றுள் இனிப்பு, உப்பு, துவர்ப்பு, புளிப்பு, கசப்பு போன்ற ஐம்பூதங்களின் சேர்க்கை வெவ்வேறு விகிதாசசாரத்தில் அமையப்பெற்றே விளங்குகிறது.*
*இருப்பினும் இந்த ஐந்து ருசிகளில் ஏதேனும் ஒரு ருசி ஒவ்வோரு உணவுப் பொருளிலும் பிரதானமாக அமைகிறது.*
*ஒரு திராட்சைக் கனி என்று எடுத்துக் கொண்டால்,ஒன்று இனிக்கும், மற்றொன்று புளிக்கும், வேறொன்று :சப்பென்று இருக்கும். அவ்வாறே வேர்க்கடலைகளில் ஒன்று இனிக்கும்,மற்றொன்று துவர்க்கும், வேறொன்று கசக்கும்.*
*இவ்வாறாக, ஒவ்வோரு உணவுப்பொருளும் பஞ்சப்பூங்களின் சாரத்தை ருசியாகக் கொண்டு அமையப் பெற்றிருக்க,அவற்றுள் ஒரு ருசி பிரதானமாக வெளிப்படையாகத் தெரிகிறது.மற்ற ருசிகள் உள்ளுக்குள்ளே அமுங்கப்பெற்றிருக்கும்.*
*எந்த ஒரு உணவுப் பொருளையும் நாம் உண்ணும் போது,அதன் பிரதானமாக ருசியைத் தவிர்த்து அதனுள் அமுங்கப் பெற்றுள்ள மற்ற ருசிகளையும் பிரித்து நாக்கால் உணர வேண்டும். சிலர் ருசிகளின் சேர்க்கை மிகக் குறைந்த விகிதாச்சாரத்திலும் அதேசமயம் பிரதான ருசியின் விகிதாச்சாரம் கூடுதலாகவும் இருக்குமேயானால் ஐம்பூதங்களின் சாரத்தையும் நாக்கால் முழுமையாக உணர முடியாது.*
*இந்த வகையான சூழ்நிலையில் எந்த ஒரு உணவுப் பொருளும் அதிகமான ருசியைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அந்த உணவைச் சிறுக சிறுக வாயில் மென்று நன்றாக நீண்ட நேரம் சுவைத்துப் பின் அந்த உணவின் பிரதான சுவை நன்றாக அடங்கிய பின்னரே விழுங்க வேண்டும்.*
*உணவின் சுவை, நாக்கில் சுவைக்கும் போது,அந்தச் சுவை படிப்படியாகக் குறைந்து வருவது எதைக் குறிக்கிறதென்றால் மண்ணீரலானது, அந்த உணவின் சுவையை, அல்லது அவ்வுணவின் சாரத்தை படிப்படியாகக் கிரகித்துக் கொண்டிருக்கிறது என்பதேயாகும். ஒரு உணவின் சுவையை முழுமையாகக் கிரகிப்ப்பதில் மண்ணீரலுக்கு நாம் எவ்வளவு உதவுகிறோமோ(சீக்கிரம் விழுந்து விடாமல் நாக்கிலேயே ஜீரணிக்கிறோமோ) அந்த அளவுக்கு நம்முடைய உடல் சுகாதாரம் பேணப்படுகிறது. வாசகர்களே! மண்ணில் விளையும் அத்தனை உணவுப் பொருட்களும் நமது உடலுக்கு(மண்ணீரலுக்கு) ஊட்டமளிக்கும் உணவாக அமைகிறது. ஆம்! உடலின் விளை நிலம், மண்ணீரலே! இந்த மண்ணீரலை, விளைநிலத்தை கெடுப்பதும், பாதுகாப்பதும் நாக்கின் பொறுமையைப் பொறுத்ததாகும்.*
*நாக்கைப் பாதுகாக்க...*
*உணவில் ருசியானது அதிகரிக்கப்படுமேயானால் நாக்கின் பொறுமைக்கு அது சவாலாக அமையும். கண்டிப்பாக நாக்கின் பொறுமை, உணவின் ருசிக்கு முன் படுபயங்கர மாகத் தோற்றுப்போகும்.*
*எனவே, தாய்மார்களே! உங்கள் குழந்தைகள் பச்சிளந்தளிர்கள் அவர்களின் நாக்கை பாழடிக்காதீர்கள், உடலின் விளை நிலமான மண்ணீரலை, ருசியான உணவு வகைகளைச் சாப்பிடக் கொடுப்பதன் மூலம் சாகடித்து விடாதீர்கள். ஆரம்ப காலத்திலேயே ருசியான உணவு வகைகளைக் கொடுத்து நாக்கின், பொறுமையான அசைபோடும் குணத்தைப் பாழக்கி விடுவதால் குழந்தைகளிடத்தே என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.*
*உமிழ்நீர் அதிகமாக வழிந்தால்....*
*குழந்தைகள் தூங்கும் போது வாயில் உமிழ்நீர் வடிதல், காலையில் எழும்போது உமிழ்நீர் வடிந்ததின் சுவடு காணப்படுதல், மண்ணீரல் கெட ஆரம்பித்து விட்டது என்பதை உணர்த்துகிறது.*
*புரிந்து கொள்ளுங்கள்! இனிமேல்தான் நோய்கள் ஆரம்பமாக போகின்றன.*
*தூங்கும் போது எச்சில் வழிய ஆரம்பிக்கிற தென்றால் அடுத்து பற்கள் கெட ஆரம்பிக்கும்.*
*குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முறையாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் வரையில் எந்தக் குழந்தைக்கும் தூங்கும்போது எச்சில் வடியாது.ஆனால் மூன்று மாதத்திற்குப் பிறகு தாய்ப்பாலுடன் மற்ற உணவு வகைகளைக் கொடுக்க ஆரம்பித்த பிறகே, பொதுவாக எல்லா குழந்தைகளுக்குமே எச்சில் வடிய ஆரம்பிக்கிறது.*
*உடல் உறுப்புகளும், பஞ்சபூதங்களும்!*
*இப்போது உணவு வகைகளில் உள்ள பஞ்ச பூதங்களின் சாரங்கள் (சுவைகள்) மண்ணீரலால் நாக்கிலேயே சுவைக்கப்படாமல் போகும் போது எந்த வகையான கெடுதல்களை உடலின் பல உறுப்புகளிலும் உருவாக்குகிறது என்பதை தெரிந்து கொள்வது, குழந்தைகளிடத்தில் பிற்காலத்தில் உருவாகப்போகும் நோய்களை வருமுன் அறிய உதவும். இதற்கான அடிப்படையை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம்*
*நெருப்பு, நிலம், காற்று, நீர், மரம் என்பவை சீன சித்தாந்தத்தின் படி பஞ்சபூதங்களாகும்.இவை ஒவ்வொன்றும் நமது உடலில் உள்ள உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது. இப்போது ஒவ்வொரு மூலப் பொருளையும், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்புகளையும் பார்ப்போம்.*
*நெருப்பு*
*இருதயம், பெரிகார்டியம் (இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு போன்ற மேலுறை) சிறுகுடல், தேக வெப்பத்தைக் கடத்தும் உறுப்பு ஆகியவற்றுடன் நெருப்பு மூலப்பொருள் தொடர்பு கொண்டுள்ளது.*
*இந்த' நெருப்பு'மூலப் பொருளை முதலாவதாக எடுத்துக் கொண்டதற்கான காரணம், இவ்வுலகம் பூமியாக (நிலமாக) மாறுவதற்கு முன்னர் நெருப்புக் கோளமாகவே இருந்தது. பின்னரே படிப்படியாகக் குளிர்ந்து நிலமாக மாறியது.*
*இவ்வாறாக, நெருப்பு மூலப் பொருளைத் தொடர்ந்து நிலம் மூலப்பொருள் உருவாகியது.*
*நிலம்*
*வயிறும், மண்ணீரலும் (stomach and spleen) ஆகிய இவ்விரண்டும்' நிலம்'மூலப்பொருளுடன் தொடர்பு கொண்டுள்ளது.*
*நிலத்திலிருந்து வெளியேறும் வாயுக்கள், வாயு மண்டலத்தைக் தோற்றுவிக்கிறது. அதாவது நிலம் மூலப்பொருள் வாயு அல்லது, ஆகாயம் அல்லது காற்று மூலப் பொருளை உருவாக்குகிறது.*
*காற்று*
*காற்று மூலப்பொருள் தொடர்புடைய முக்கியமான இரண்டு உறுப்புகள்: நுரையீரலும் பெருங்குடலும் (Lungs and Large intestine) ஆகும். நுரையீரல் சுவாசித்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. மலக்குடலும் பெருங்குடலும் அவ்வாறு உணவிலிருந்து கெட்ட வாயுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. பெருங்குடலின் உறுதியான இயக்கத்திற்கு நுரையீரலின் சுகாதாரமான இயக்கம் இன்றியமையாதது.*
*காற்று மூலப்பொருளின் வாயுக்கள் சேர்க்கை கொண்டு மழை மேகங்களாக மாறி' நீர்'மூலப் பொருளை உருவாக்குகிறது.*
*நீர்*
*சிறுநீரகங்களும், சிறுநீர்ப்பையும் (kidneys &urinary bladder)' நீர்'மூலப் பொருளின் தொடர்புடய உறுப்புகளாகும். சிறுநீர்ப்பை தன் இயக்கத்திற்குத் தேவையான சத்தியை சிறுநீரகங்களிலிருந்தே பெறுகின்றன.சிறுநீரகங்களின் சக்தி குறையும்போதுதான் சிறுநீர்ப்பை வலுவிழந்து சிறுநீர் சம்பந்தமான தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது.*
*நமது உடலிலுள்ள தண்ணீரை, நீர்ச்சத்தை, நீர் சக்தியாக மாற்றக்கூடிய வலிமை படைத்தது, நீர் முழுப்பொருளுடன் தொடர்பு கொண்டுள்ள சிறுநீரகங்களும், சிறுநீர்ப்பையுமாகும்*
*நிலத்தில் விழும் நீரானது, தாவரம், செடி, கொடிகள், மரங்கள் என்ற' மரம்'மூலப் பொருளை உருவாக்குகிறது.*
*நாம் நமது செயல்களினாளும தட்பவெப்ப நிலை மாறுபாட்டாலும் இழந்த உயிர்சக்தியை மீண்டும் பெற்று இன்பமாக வாழலாம் ஆயர்பாடி இயற்கை துணை உணவுகளால்*
*மரம்*
*நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சுற்றுப்புறத் தூய்மைக்கு மரம், செடி,கொடிகள்,முக்கிய பங்கு ஆற்றுகின்றன. நீர்க்கழிவுகள்,நிலத்தின் அசுத்தங்கள்,வாயு மண்டலத்தின் அசுத்தங்கள் ஆகியவை யாவும் சுத்தமாக்கப்படுவது இந்த இயற்கை சூழலுக்கே அழகு சேர்க்கும் மரம் மூலப்பொருள் தான்.*
*நமது உடலில் இந்த வேலைகளை செய்யும் அதாவது நமது உடலிலுள்ள வாயு மூலப்பொருளின் அசுத்தைத்(நுரையீரல், பெருங்குடல்) அகற்றி, நிலம் மூலப்பொருளின் அழுக்கை (சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை) சுத்திகரித்து நமது உடலை பழுதற்ற நிலையில் இயங்கச் செய்யும். மரம் மூலப்பொருளைச் சார்ந்த உறுப்புகள் கல்லீரலும், பித்தப்பையுமாகும்.*
*மரம் காய்ந்து சருகுகளாகி,பின்னர் நெருப்பை(நெருப்பு மூலப்பொருளை) வளர்க்கக் கூடியதாக உள்ளது.*
*நெருப்பு*
*நெருப்பு மூலப்பொருள் இருதயம், பெரிகார்ட்டியம்,சிறுகுடல்,தேக உஷ்ணக் கட்டுப்பாட்டு உறுப்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது.*
*இப்போது,பஞ்ச பூதங்களின் மூலப்பொருட்ள்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு ஒரு மூலப்பொருள் மற்றதை உருவாக்குகிறது என்பதை ஒரு சுற்று படத்தின் மூலம் தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொள்வோம்.*
*அடுத்த படியாக, ஒவ்வொரு மூலப்பொருளையும், அதனைச் சார்ந்த உறுப்புகளையும் ஒரு குறிப்பிட்ட சுவை வாழ வைக்கிறது; அவற்றிற்குத் தேவையான இயக்க சக்தியைக் கொடுக்கிறது.*
*நிலம் (வயிறு ,மண்ணீரல்)*
*' இனிப்பு'சுவை நிறம் சார்ந்த உறுப்புகளான வயிறு, மண்ணீரல் ஆகியவற்றிற்கு சக்தியை அளிக்கிறது.*
*நமது ஆகாரம் வயிற்றுக்குள் சென்றதும் ஜீரணமாவதற்கு உடனடியாக சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி Glucose எனப்படும். இனிப்பிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது.' க்ளுகோஸ்'அல்லது இனிப்பு பதார்த்தங்களாகச் சாப்பிடுவது வயிற்றிலும், மண்ணீரலிலும் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தி பின்னாளில் உஷ்ணம் அதிகமாகத் தேங்கி வயிற்றில் எரிச்சலையும், அல்சர் போன்ற வலியையும் ஏற்படுத்தி நிலம் மூலப் பொருளை பாழாக்குகிறது.*
*நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். நிலம் மூலப் பொருளிலிருந்து தான்' காற்று'மூலப்பொருள் உருவாகிறது. அதாவது நுரையீரலும், பெருங்குடலும் நல்ல நிலையில் இயங்க பெற வேண்டுமானால் நிலம் (வயிறு, மண்ணீரலும்) கெடக் கூடாது. அதிகப்படியான இனிப்பு பதார்த்தங்கள் சக்கரை முதலியன நிலத்தை நிர்மூலமாக்கும்.*
*நாம் உண்ணும் ஒவ்வொரு இயற்கை உணவிலும், இனிப்புச் சுவையானது பஞ்சபூதங்களின் சக்தி திரட்சிகளில் ஒரு பகுதியாக அமையப் பெற்றே இருக்கிறது. உணவானது நாக்கினால் முழுமையாக ருசிக்கப்படும் போது இந்தச் சுவையை நாம் உணர முடியும். நாக்கில் உணவின் சுவைகளை பிடிக்கப்பட்ட மாத்திரத்திலேயே, இந்த சக்தியானது மண்ணீரலால் கிரகிக்க படுகிறது. இந்த சக்திதான் மண்ணீரலுக்குத் தேவையான இயக்க சக்தியை கொடுக்கிறது. வயிற்றின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, மண்ணீரலின் உறுதியான இயற்கைச் சக்தியே.*
*எந்த ஒரு உணவும் நாக்கால் ஜீரணிக்க படும்போது அதன் சுவைச்சக்திகள் உணவிலிருந்து பிரிந்து மண்ணீரலை இயக்க வைக்கிறது.*
*இவ்விதம் நாக்கிலிருந்து உணவு, வயிற்றுக்குள் இறங்கும் முன்பாகவே, மண்ணீரல் வயிற்றை முறையாக இயக்கம் கொள்ளவைக்கும்.இது எப்படிபட்ட உணவானலும் சரியே!*
*இதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு புட்டிப்பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெளில்,*
*பால் குழந்தைகளின் மென்மையான, வயிற்றுக்கு ஏற்ற ஆகாரம்.இந்த பாலில் பிரதானமாக இருக்கும் சுவைகள் இரண்டு. முதலாவது மிதமான இனிப்புச் சுவை இரண்டாவது, இலேசான துவர்ப்புச் சுவை.*
*இவற்றுள் இனிப்புச் சுவையைப் பற்றி சற்று முன்னர் தெரிந்து கொண்டோம். மண்ணீரலை இயக்கி,வயிற்றின் உறுதித் தன்மையைப் பாதுகாப்பது. அதாவது,உணவுப் பொருளில் அடங்கப்பெற்றுள்ள இயற்கையான,மிதமான இனிப்புச் சுவைதான் மண்ணீரலுக்கும், வயிற்றுக்கும் உறுதியளிக்குமே தவிர, தனியாகப் பாலில் கலக்கும் சர்க்கரை அல்ல.*
*சர்க்கரை' நெருப்பு'*
*சர்க்கரையின், இனிப்பானது, உணவல்ல என்பதை தாய்மார்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். கருப்புச் சாற்றிலிருந்து(இயற்கையான உணவிலிருந்து) இனிப்பை மாத்திரம் வெள்ளைச் சர்க்கரையாகப் பிரிந்து எடுத்தும்,இந்தச் சர்க்கரையில் உணவின் மொத்த அம்சமும் நீங்கிவிடுகின்றது.*
*இந்த சர்க்கரை இனிப்பானது உஷ்ணத்தை அதிக அளவில் வெளியாக்கக் கூடியது.இந்த வெப்பத்தை ஜீரணித்திற்கு உபயோகபடுத்த அந்த சர்க்கரையுடன் சார்ந்த உணவுப் பொருள்(கரும்புச் சக்கை) வயிற்றுக்குள் செல்வதில்லை. எனவே,இந்த வெப்பமானது மண்ணீரலும், வயிற்றிலும் உபயோகப்படுத்தப் படாமலும்,எங்கும் ஓட்டம் பெற வழியில்லாமலும் அளவுக்கு அதிகமாக நாளடைவில் தேங்க ஆரம்பிக்கிறது.*
*வெப்பம் - ஜுரம்*
*இப்போது, உடலில் உஷ்ணம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைத் தீர்மானமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்திலிருக்கிறோம்.*
*நமது உடல் இயங்கத் தேவையான உஷ்ணம் 98.4°F என்பது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த உஷ்ணம் உடல் இயக்கம் பெறவைக்கக்க்கூடிய வெப்பம்.உடல் உறுப்புகள் இந்த உஷ்ணத்தில் தான் மிகவும் நேர்த்தியாக இயக்கும். ஆனால் இந்த உஷ்ணம் 99°F அல்லது 100°F,101°F, என்று அதிகமானால் நமது உடலை இந்த உஷ்ணம் அசதியடையச் செய்துவிடும்.இதை நாம் காய்ச்சல் அல்லது ஜூரமாக உணருகிறோம்.*
*ஜுரம் - அசதியைத் தோற்றுவிக்கிறது*
*உடல் முழுவதும் உஷ்ணம் பரவும் போது உடல் அசதியையும், இயலாமையையும் ஏற்படுத்துகிறது. நம்மால் எந்த வேலையும் செய்யமுடியாமல் படுக்கையில் சாய்ந்து விடுகிறோம்.*
*இவ்வாறே நமது உடலில் பல சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு குறிப்பிட்ட உடலின் பாகத்தில் அல்லது குறிப்பிட்ட உடலுறுப்பு ஒன்றில் உஷ்ணம் தேங்கி அந்த பாகத்தில் அல்லது உறுப்பினுள் ஜுரத்தைத் தோற்றுவித்து அவ்வுறுப்பினை அசதியுறச் செய்கிறது. ஜுரத்தால் அவ்வுறுப்பு களைப்படைந்து செயலிழக்கிறது. இதுவே அவ்வுறுப்பு அல்லது எந்த ஒரு உறுப்பிலும் உருவாகும் நோயின் ஆரம்பமாகும்.*
*'சர்க்கரை ' - விஷம்*
*தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலில் சர்க்கரையைக் கலக்கும் போது இதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும்!*
*1. நீங்கள் பாலில் விஷத்தை கலக்குகிறீர்கள்.*
*2. சர்க்கரையிலிருந்து உருவாகும் அதிகப்படியான உஷ்ணம் உணவை ஜீரணிப்பதற்குப் பதிலாக மண்ணீரலிலும், வயிற்றில் மட்டுமே முதலில் ஜுரம் என்ற நிலையைத் தோற்றுவிக்கிறது.*
*3. சர்க்கரை, காலை, மாலை என்று மாறி பால், டீ, காபி போன்றவற்றில் கலந்து குடிக்கக் கொடுக்கும் போது நிரந்தரமாக 6-7 வயதிற்குள் மண்ணீரலும், வயிறும் தங்களது இயக்க சக்தியை இழந்து பலவீனமடைகின்றன. நிரந்தரமான அசதியையும் சோர்வையும் அடைகின்றன.*
*4. தூங்கும் போது, வாயில் எச்சில் வடிகிறதென்றால் அப்போதே உணர்ந்து கொள்ளுங்கள். வயிறும், மண்ணீரலும் ஜுரத்தின் நிலையில் உள்ளன. வயிற்றில் அமிலங்கள் முறையாகச் சிறுகுடலுக்குள் செல்லாமல் வயிற்றில் தேங்கிவிட்டன.*
*5. வயிற்றிலிருந்து உணவு ஜீரணமாகாமல் வயிற்றிலேயே தேக்கம் கொண்டுள்ளன.*
*6. சிறுகுடலுக்குள் உணவு செல்லாததால் சிறுகுடலுக்குள் செல்லவேண்டிய பித்த நீர் முறைகேடாக வயிற்றுக்குள் நுழைகிறது.*
*7. ஏழு வயதிற்குப் பிறகு விழ வேண்டிய பற்கள் 6 வயதிலேயே விழும்.*
*8. குழந்தைகளின் கடைவாய்ப் பற்களில் பற்றும் பூச்சிகள், பற்களில் படியும்,' காரை'பித்தநீர் வயிற்றுக்குள் பரவிவருகிறது என்பதை உணருங்கள்.*
*9. பித்த நீரை வயிறானது தாங்க முடியாது. வயிற்றை அரிக்க ஆரம்பிக்கும். இது பொய்யான பசியை ஏற்படுத்தும்.*
*10. பித்த நீரின் எரிச்சல் கலந்த பசியுணர்வு மிகவும் காரமான, புளிப்பான உணவு வகைகளின் மீதே அதிக ஆசை கொள்ளவைக்கும்.*
*11. இந்த அமிலத்தை ஈடுசெய்ய வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரக்க ஆரம்பிக்கும்.*
*12. இது பற்களின் ஈறுகளை ஒட்டி மஞ்சள் நிறத்தில் காரைகளைப் படிய வைக்கும்.*
*தாய்மார்களே! எக்காரணத்தைக் கொண்டும் பாலில் சர்க்கரையைக் கலக்காதீர்கள்!*
*உங்கள் குழந்தைகளுக்கு இனியேனும் விஷத்தை ஊட்டாதீர்கள். சர்க்கரையைக் கனவிலும் தொடாதீர்கள்.*
*🙏ஆயர்பாடி இயற்கை துணை உணவுகள் & வாசி யோகா ஆராய்ச்சி மையம், (தேவஸ்தான பெண்கள் கல்லூரி அருகில்) பழனி📞,9965042543, 877810 2307 வாட்ஸ்அப் 9585436122*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக