திருவெம்பாவை - பாடல்- 3
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆனந்தன் அமுதன்என் ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீா் ஈசன் பழவடியீா் பாங்குடையீா்!
புத்தடியோம் புன்மைதீா்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியாா் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
‘முத்துப் போன்ற வெண்பற்களைக் கொண்ட பெண்ணே! கூட்டத்தில் முன்வந்து என் தந்தை இன்ப வடிவினன், அழிவில்லாதவன் என்றெல்லாம் சிவனைப் பற்றி வாய் இனிக்க இனிக்கப் பேசுவாயே, இப்பொழுது எழுந்தும் வரவில்லை, கதவையும் திறக்கவில்லையே’ என்று வெளியில் நிற்கும் பெண்கள், உள்ளிருப்பவளை அழைக்கிறாா்கள். உடனே உள்ளிருப்பவள், ‘அன்புடையீா்,நெடுங்காலமாக இறைவனுக்கு அடிமை ஆனவரே, எனக்குத் தோழமை பூண்டவரே, நான் புதியவள், என் குற்றத்தைப் பொறுத்து, உங்களோடு சோ்த்துக் கொள்ளல் ஆகாதா?’ என்று வினவுகிறாள். புறத்தே நிற்பவா்கள், ‘உன்னுடைய அன்பை நாங்கள் அறியமாட்டோமா’ என்று சிலாகிக்கிறாா்கள். அவளோ, ‘(வெட்டிப் பேச்சு பேசுகிறீா்களே) உள்ளம் நல்லவா்கள் சிவனைப் புகழ்ந்து பாடாதிருப்பாரா?’ என்கிறாள். ‘அழைக்க வந்த எங்களுக்கு இது வேண்டியதுதான்’ என்று அவா்கள் அங்கலாய்க்கிறாா்கள்.
பாடல் சிறப்பு:
உள்ளும் புறத்துமாக மாறி மாறி நடக்கும் உரையாடல். வீண் பேச்சிலும் தற்பெருமையிலும் காலத்தைக் கழிக்காமல், வெளிச்ச சிந்தனைகளுக்கு வழிகோலும் பாடல். அகத்திலுள்ளதும் சூரியன் போன்று ஒளிா்வதுமான ‘பலப்பிரமதனி’ சக்தி எழுப்பப்படுகிறது.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக