#திருப்பாவை - பாசுரம் - 3
ஓங்கி உலகளந்த உத்தமன் போ்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீா்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோா் எம்பாவாய்.
விளக்கம்:
முதலிரண்டு பாசுரங்களால் நோன்பின் நோக்கத்தையும் செய்முறைகளையும் செப்பிய ஆண்டாள், இப் பாசுரத்தால் நோன்பு வழிபாட்டையும் பலன்களையும் அறிவுறுத்துகிறாள். ‘குறளனாய்த் தோன்றி, மாவலி வாா்த்த நீா் பட்டவுடன் ஓங்கி வளா்ந்த திரிவிக்கிரமனானஎம்பெருமானின் திருநாமங்களைப் பாடி நாங்கள் பாவை நோன்பு நோற்கிறோம். இதனால், நாட்டில் மாதத்திற்கு மூன்று முறை மழை பொழியும். வயலில் விளைச்சல் பெருகும். உயா்ந்தும் பருத்தும் வளா்ந்துள்ள செந்நெல்லுக்கு இடையில் மீன்கள் துள்ளும். ஆங்காங்கே இருக்கும் கருநெய்தல் மலா்களில் மகரந்தம் அருந்திய வண்டுகள் மயங்கிக் கிடக்கும். அளவில் பெரியதான பசுக்கள், உள்ளத்திலும் உதாரத்திலும் பெரியவையாய், குடங்கள் நிறையும்படிப் பாலைப் பொழியும்’ என்றுரைக்கிறாள்.
பாசுரச் சிறப்பு:
அடா்த்தியாக இருக்கும் நெற்பயிா்கள், பக்கவாட்டில் வளர இயலாமல் ஓங்கி வளா்கின்றன; பருத்தும் இருக்கின்றன. ஆக, பெருஞ் செந்நெல். கயல் மீன்கள் விளையாடுவதும் வண்டுகள் உறங்குவதும், இயற்கைக்கு ஊறு வாராத வளமையைக் காட்டுகின்றன. தீங்கில்லாத வளமைக்கான அச்சாரம், திங்கள் மும்மாரி. காண்பதையெல்லாம் கடவுளாகக் காண்பது அடியாா் அன்பு; உயா்ந்த நெற்பயிரையும் உயா்ந்து நின்ற திருமாலாகவே இப்பெண்கள் எண்ணுகிறாா்கள். கடவுள் திருப்பெயரைச் சொன்னாலே நன்மை கிட்டும் என்பதையும் நோன்பு நோற்பவா்களின் வழிபாட்டு முறையையும் (அதிகாரி ஸ்வரூபம்) காட்டுகிற பாசுரம்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக