15 நவ., 2021

நூல் நயம் : யவன ராணி - சாண்டில்யன்


RM 322 
சத்யா
நூலின் பெயர் : யவன ராணி 
பக்கம் : 1280
கல்கியின் கற்பனையை விட சாண்டில்யனின் கற்பனையும், அவர்கள் எழுத்தும் அலாதியாக இருக்கும் என்று கேள்வியுற்றேன். எனவே யவனராணி படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நானும் வாசிக்க தொடங்கினேன், ஆரம்பத்தில் சில வரிகள் மிக நீண்டதாக இருந்ததனால் படிக்க சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் வாசிக்கத் தொடங்கி சிறிது தூரம் சென்ற பிறகு மிகவும் இனிமையாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் படிக்க கூட எளிமையாகவும் தான் இருந்தது. கல்கியும் சாண்டில்யனும் ஒப்பிட்டுப் பார்க்க என் அனுபவ அறிவு போதாது என்று நான் நினைக்கிறேன். ஆனால் கல்கியை காட்டிலும் சாண்டில்யனின் பாத்திர வடிவமைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. எப்போதும் ஒரு படைப்பின் கதாநாயகனை தான் எல்லோருக்கும் பிடிக்கும் (பெரும்பாலும்) ஆனால் இங்கு கதையை மாற்றி அமைக்க வந்த யவன ராணியை தான் எனக்கு பிடித்தது. ஆரம்பத்தில் ராணியையும் கூட நான் வெறுத்தேன், ஆனால்  கதை நகர நகர யவன ராணியை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன் எனவே எனக்கு அவளை மிகவும் பிடித்தது. தன்னுடைய குருமார்கள் சொன்னது போலவும், அவள் நம்பிய விதியின் படியும், அவன் எதிர்பார்த்த ஒரு தமிழ் ஆடவன் அவளுக்கு கிடைத்தான். அவனை அவள் எந்த நிலையிலும் காதலித்தாள் ஏற்க நினைத்தாள். தன்னுடைய மனதில் ஏற்பட்ட எண்ணம் காரணமாக, தன்னுடைய நாட்டையே பணயம் வைக்கவும் துணிந்தாள். இந்தக் காரியம் சரியோ தவறோ என்று பாராமல் அவள் காதல் என்ற ஒன்றை மட்டும் நாம் பார்த்தோமேயானால், உண்மையில் யவனராணி இளஞ்செழியனை எவ்வளவு நேசித்தால் என்பது நமக்கு தெரியும்.
 ஆரம்பத்தில் இளஞ்செழியன் ஐ எனக்கு பிடித்தாலும், போகப் போக அவன் மீது ஏற்பட்ட ஈர்ப்பு குறைந்து போனது என்பதே உண்மை. பூவழகியிடம் மனதை கொடுத்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டாலும், அவன் பார்க்கும் எல்லா பெண்களின் மீதும் அவனுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு கொண்டே இருந்தது. அதனை இயற்கை என்று கூட சொல்லலாம், என்னால் தான் என்னவோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கூடவே இருந்து உறுதுணையாக இருந்த துணை பாத்திரமான ஹிப்பலாஸ், என்னை மிகவும் ஈர்த்தான். நான் உண்ட உணவுக்காகவும் பழகிய பழக்கத்திற்கும் படைத்தலைவன் ஓடு எந்த நிலையிலும் தான் உயிர் துறக்கவும் தயாராக இருந்த ஒருவன். அவனுடைய தியாகமும் கணக்கில் கொள்ளக் கூடியதே. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இளஞ்செழியனின் உயிரை காப்பாற்றி கொடுத்தவன் ஹிப்பலாஸ்தான். இலி-அசு என்ற பாத்திரமும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு கொடூர குணம் உடையவனாக இருந்தான். அவனிடமிருந்து அலீமாவின் உதவியோடு அவளையும் தன்னோடு அழைத்து வந்தவன் இளஞ்செழியன் எனவே எப்போதும் அவனுடைய வீரத்தையும் சமயோசித புத்தியையும் நான் வியக்கவே செய்கிறேன். பிரும்மனந்தரும், சமணத்துறவியும்,இவர்களை எல்லாம் தாண்டி, எல்லாவற்றிற்கும் மேலாக டைபீரியஸ் ஒரு  உச்சத்திலேயே நின்று கொண்டிருந்தான். வெண்ணிப் போர் இன்னும் மனக்கண் முன் இருக்கிறது.
 அவ்வப்போது வந்து போகும் நிகழ்வுகளின் நினைவுகளோடு....

நன்றி :

Ms சத்யா தங்கம், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: