1 ஜூலை, 2023

நூல்நயம்

இன்றைய வாசிப்பு "வழுக்குப்பாறை".  கவிதை தொகுப்பு .நாஞ்சில்நாடன் அவர்கள் எழுதியது .விஜயா பதிப்பகம் முதல் பதிப்பு டிசம்பர் 2014.
விலை ரூபாய் 130 /-
மொத்த பக்கங்கள் 208.

      
நாஞ்சில் நாடன் , வீர நாராயண மங்கலம் ,கன்னியாகுமரி மாவட்டம் பிறந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். என்று விக்கிப்பீடியா அறிமுகம் செய்கிறது.

           நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும்.
            கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.

          இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. "தலைகீழ் விகிதங்கள் "நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் "சொல்ல மறந்த கதை "என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

        2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
          நாட்டு மொழியில் வாட்டசாட்டமாக அவர் வார்த்தைகளை வடிப்பதை கண்டு மனம் பேதலித்து கொண்டிருக்கிறேன்.       அவரின் சில வரிகள் என்னை அவர் வசமாக்கிவிடும் .காதல் வயப்பட்ட ஒரு பதின்ம வயதுப் பெண் போல் என் மனம் அவரையே சுற்றி சுற்றி வந்துவிடும் அவர்களின் வார்த்தை வசியத்தால்.
 எத்தனையோ முறை வட்டார மொழிகளில் வார்த்தை சிக்கெடுத்து விவாதிப்பதில் சித்தர் அவர் .

          
    நாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் .அவரின் வற்றாத ஜீவநதி தமிழ் சொற்களுக்காகவே .
   இந்த வழுக்குப்பாறை கவிதை புத்தகத்தில் 3 தொகுப்பாக உள்ளது முதலில் எழுதிய ஒரு கவிதை தொகுப்பு இரண்டாவது எழுதிய ஒரு கவிதை தொகுப்பு இப்போது மூன்றாவதாக எழுதிய கவிதை தொகுப்பு ஆக மொத்தமாக சேர்ந்து ஒரு புத்தகமாக வழுக்குப்பாறை அச்சிடப்பட்டுள்ளது .அழகான அச்சிடப்பட்டு, பார்க்கும்போதே படிக்கத் தூண்டும் என்ற அளவிலேயே இந்த புத்தகம் கண்ணை கவர்கிறது.
       நாஞ்சில்நாடன் அடித்துச் சொல்வார் தமிழில் இல்லாத வார்த்தைகளை இல்லை என்று .யாரோ ஒரு அயல்நாட்டு பித்தன் தமிழில் அவ்வளவு போதிய வார்த்தை இல்லை என்று சொன்னதையே பொறுக்கமாட்டாமல் ,பொங்கி எழுந்தவர் நாஞ்சில்நாடன் .அவர்களே ஒரு கவிதையில் இப்படி சொல்வார்:
" சோத்துக்கு செத்தாலும்
சொல்லுக்குச் சாகா தே,
தொண்மைத்  தமிழ்க் குடியே !"
என்று தனது ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்துவார்.
    நாஞ்சில் நாடன் தனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
அடிப்படையில்தான் ஒரு கவிதையை வாசகன் என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறார்.
பத்து வயதில் செவிப்பட்ட இசை , நாப்பட்ட ஏழாம் சுவை கவிதை அனுபவம் ,கேட்ட முதல் பாடல் ,பள்ளித் தமிழாசிரியர் மூலம் மனப்பாட செய்யுள் நூல்கள் வாயிலாக இருக்கக்கூடும் என்கிறார்.
   சத்திமுத்தப் புலவரின் ஒரு பாட்டுக்கு இணையாக எழுதினால் போதும் என்று முயற்சி செய்து கவிதை செய்து பார்க்கிறேன் என்கிறார் ஆசிரியர். போகிறபோக்கில் நானும் கவிதை என்றும் சிறுகதை என்றும் நாவல் என்றும் கட்டுரை என்றும் சில எழுதிப் பார்த்தேன் என்கிறார் ஆசிரியர்.
   தமிழ் கவிதையுடன் எனக்கு 55 காலம் உறவு உள்ளது .எனக்கு சித்தியாயிருப்பதே கவிதைகளை தேர்ந்து வாசிப்பதும், உணர்ந்து கொள்வதும் ,மெய் மறப்பதும் எனக்கு கிட்டியிருக்கும் தெளிவு ,கவிதை என்பது ஞானத்துக்கும் ,ஞானம் என்பது இறைக்கும் சமீபத்தில் இருப்பது என்பது. இறை என்பதை யார் எப்படி புரிந்து கொண்டாலும் அது குறித்து எனக்கு கவலையில்லை என்கிறார் .ஒருமுறை திருவண்ணாமலை சென்று ரமண முனிவரை சந்தித்து அளவளாவிய உ.வே. சாமிநாதய்யர் சொன்னாராம் தமக்கு ஈஸ்வர பக்தியை விட தமிழ்பக்தி தான் பெரிதாக இருக்கிறது என்று .ரமணர் பதில் சொன்னாராம் தமிழ் பக்தி என்பதே ஈஸ்வர பக்தி தானே என்று .ஈஸ்வரன் என்பதை நான் இறை என்றே புரிந்து கொள்கிறேன். பெயரில் என்ன இருக்கிறது! " என்கிறார் ஆசிரியர்.
"             "சிறந்த உரைநடைக்கும் நல்ல கவிதைக்கும் உள்ள வேறுபாடு என்ன கவிதைக்கான கூர்மை சரிவு இசைத் தன்மை என்பது என் புரிதல்("ஒழுங்கு அமைதி ஒத்திசைவு சொற்கள் தமக்குள் புணரும் நுட்பம் )என்கிறார் ஆசிரியர்.
           " 50 ஆண்டு காலமாக கவிதை எழுதி எழுதி அழித்து அழித்து ஆற்ற மாட்டாமல் அலைகிறவன் நான் "என்கிறார் .
" ஆனால் கவிதை நிலைக்கும். எழுதியதெல்லாம் நிலைக்காது என்பதும், நிலைக்கும் கவிதைகளை எழுத வேண்டும் என்பது் பாலபாடம் "என்கிறார் ஆசிரியர்.
   
    " மண்ணுளி பாம்பு "என்கிற தலைப்பில் 47 கவிதைகளை 2001ம் ஆண்டு வெளியானது, "பச்சைநாயகி "என்ற தொகுப்பில் 46 கவிதைகளை 2010 ஆண்டு வெளியானது, இப்பொழுது 2014 ஆம் ஆண்டு,32 கவிதைகளை சேர்த்து,மொத்தமாக "வழுக்குப்பாறை" என்ற தலைப்பிலும் இந்த புத்தகம் வெளியாகி உள்ளது.
  வழுக்குப் பாறை என்று ஏன் தலைப்பு வைத்தீர்கள் என்று கேட்டால,் கவிதை எனக்கு என்றுமே "வழுக்கம்பாறை தான் என்பதால் அந்த தலைப்பை வைத்தேன்" என்கிறார் ஆசிரியர்.
  கவிதைகளை சுவைக்க வேண்டுமென்றால் கவிதை எழுதிய கவிஞனின் உள்ளம் நமக்கு வேண்டும். அவன் எந்த மனநிலையில் எப்படி எழுதினானோ அந்த மனநிலையில் நாம் படித்தால் மட்டுமே அதன் சுவையை முழுமையாக உணர முடியும் என்பது எனது கருத்து.
      
" poetry  is in between the words"என்றான் ஷெல்லி......
"poetry is spontaneous over flow of powerful feelings "என்றான் வோர்ட் வொர்த்.....

       இவரின் கவிதைகளை இப்போதுதான் முதல்முறையாக வாசிக்கிறேன் .இவரின் கதைகளில் ,நாவல்களில் கட்டுரைகளில் ஏராளமான கவிதைகள் வாசித்து இருக்கிறேன் .ஆனால் கவிதை புத்தகத்தில் அவரின்  கவிதைகளை  இப்போதுதான் முதன்முதலாக வாசிக்கிறேன்.

எனக்கு பிடித்த அவரின் சில கவிதைகள்; என்னை உச்சத்தில் கொண்டு வைத்த; மெய்சிலிர்க்க வைத்த ;சில கவிதைகள்:

"ஊர்தி "கவிதை 
அங்கமாய் ஒலிக்கிறது.

முதலில் பள்ளி செல்ல பள்ளி ஊர்தி, கடைசியில் செல்ல அமரர் ஊர்தி ,இடையில் பல ஊர்தி என பயணப்பட்ட எனக்கு இறைவா உனக்கு இருப்பது போல் எனக்கு ஏன் ஒரு நிரந்தரமான மயில் ஊர்தியோ,பருந்து ஊர்த்தியோ  தரவில்லை என்று அங்கதமாக கேட்கிறார் கவிஞர்.

"ஓநாய் ."
மனதில் 
வெறும்
மு லை ஆட்சி 
நாறப் பிணம் 
தின்னும் 
நானும் 
ஓ நாய் தான்.

"அபாயம் !"
உன்னால் 
முடியாது 
விலகி நில் 
முடியுமானால் 
இரண்டு நீயும் போடு 
அடிவாங்குபவன்  சார்பில் 
நிற்பது அபாயம் .(என்று இன்றைய சமூக கண்ணோட்டத்தை இதில் காணலாம்)

"வேர்கள் ."
சீமைக்கருவை போல் 
அடர்ந்தும் படர்ந்தும்
ஈரம் உறிஞ்சும் 
வேர்கள் எங்கும் .(என்று  ஆசிரியரின் சமுதாயப் பார்வையை காணலாம்).

"வாரச் சுதந்திரம்...."
விடியும் முன் பால் வாங்கி 
விடிந்தபின் மீன் வாங்கி 
சாணக்யா முடிந்தபின் 
முடிவெட்டி
 மூத்திரத்தில் சர்க்கரை சோதித்து
 மலைப் பாம்பாய் இரைஎடுத்து 
வார புணர்ச்சியில் 
வலுவிழந்து"
(என்று ஒரு சாதாரண மனிதனின் அலுவலக போவோனின் ஞாயிறு தினத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார்.)

"  கவிதை "
...அது 
செந்தமிழும் அறியாத 
சித்திரமும் தெரியாத 
செவிட் டு ஊமையின்
 கனவு  (என்று கவிதைக்கு வடம் பிடிக்கிறார்).

"எவர் எழுதக் காத்திருக் கிறீர்."
என்ற கவிதை,ஒருமுறை எனது நண்பன் "எந்த கண்ணன் எங்கு பிறந்தால் "என்று ஒரு வினா எழுப்பி சமுதாயத்தை பார்த்து யாரெல்லாம் சமுதாயத்தை திருத்த முன்வர போகின்றீர்கள் என்று ,அது போல இந்த கவிதை அமைந்திருக்கிறது.

"அறம் பாடுதல் "
கவிதையில் 
"காற்றில் கரைந்து காணா ப்போகும் 
ஆயுள் காலம் ஆய்ந்தது போதும் 
மேயும் காலம் மேய்ந்ததும் போதும் 
தேயும் காலம் தீர்ந்து அம் போகும் 
திறமாய்ச் சிலவே செய்துதான் பாரும். (என்று அறம் பாடுகிறார் கவிஞர்).

"தினப் பாடு !"
பனை இள நுங்கு போல் 
தனுப்பாய் இனித்தது உன் நாக்கு 
புது க்குருத்து வியர்வை 
இளநீரின் பதநீரின்,பருவத்து மதநீரின்
வாச மென நீங்காது அலைந்தது நெஞ்சில்!

 இருப்புக்கும் இருப் பற்று போவதற்குமான இடைவெளி தினப்பாடு.. !!

"தேடுவதில் தொலைகிறது என் காலம்.!"
 ஒவ்வொரு பருவமாக பள்ளிப் பருவம் முதல் கிழப்பருவம் வரை ஒவ்வொரு பருவமாக ஒவ்வொன்றாகத் தேடி தேடி தொலைகிறது என் பருவம் காலம் என்கிற அளவில் கவிஞர் சொல்கிறார் :
வெம்பிய உடலும் கூம்பிய மனமுமாய் 
அச்சு முறிந்து ஐயோ என்றானபின் தியானம் யோகம் நியமம் குண்டலினி தேரோட்ட முனைந்ததோர் காலம்.!

"மாற்றிச் சூடு"
 ஆத்திச்சூடி கவிதையை 
மாற்றிச் சூடு என்று ஆசிரியர் அங்கதமாக எழுது கிறார்.

 இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
     நெஞ்சில் என்றும் 
மஞ்சமிட்டு ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் நாஞ்சில்நாடன் வரிகள்.
 "படித்தால் அன்றி
சுவைத்தல் அரிது 
படித்துப்பாருங்கள்"

நன்றி:

கருத்துகள் இல்லை: