24 டிச., 2013

ஆன்மீக சிந்தனை-44:

இரண்டு மரக்கட்டைகளைக் கடையும் போது அக்னி உண்டாகிறது.  தயிரைக் கடைய வெண்ணெய் திரள்கிறது. அதைப் போலவே இறைவன் பெயரை இடைவிடாமல் தியானிக்கும் போது, உள்ளிருக்கும் தெய்வீகம் வெளிப்படுகிறது ஸ்ரீ சத்ய சாய் பாபா 

இன்றைய சிந்தனைக்கு-172:

உள்ளத்தொன்றி, உயிரிற் கலந்து, உடலிரண்டெனினும் உள்ளன்பொன்றாய், இன்பத்தின் கண் இன்பமுற்று, வெய்துயரிடையே கைபோலுதவி, வளர்பிறை போலத் தளர்வறவோங்கி, சிறுமையகற்றிப் பெருநெறிபற்றி, தற்புகழின்றிச் சமயத்துதவி, கோள்பொய்யின்றி வாழ்வை உயர்த்தி, நீரிலே தாமரை, வானிலே நீலம், கதிரிடை வெப்பம், மதியிடைத் தண் போல் இணைபிரியாதோர் குணமுறு நண்பரே.  -  யோகி சுத்தானந்த பாரதியார்

21 டிச., 2013

ஆன்மீக சிந்தனை-43:

அனைவரிடமும் அன்பு செலுத்து.  அனைவரிடமும் தெய்வம் இருக்கிறது.  இறைவன் இல்லாத இடமே இல்லை.  இறைவன் உறையாத உடலே இல்லை.  இறைவன் இல்லாத பிராணியும் கூடக் கிடையாது ஸ்ரீ சத்ய சாய் பாபா

இன்றைய சிந்தனைக்கு-171:

நிழலைப் போலே வினைப்பயன் தொடரும்.  இதமே வேண்டின் அதமே செய்யேல் யோகி சுத்தானந்த பாரதியார்

11 டிச., 2013

ஆன்மீக சிந்தனை-42:

அனைவரும் தெய்வ வடிவம் கொண்டவரே!  அனைவரிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும்.  மற்றவர் உன்னை விரும்புகிறார்களோ இல்லையோ, அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீ மட்டும் அனைவரிடமும் அன்பு செலுத்து.  காரணம் என்ன?  அனைவரிடமும் தெய்வம் இருக்கிறது.  இறைவன் இல்லாத இடமே இல்லை.  இறைவன் உறையாத உடலே இல்லை.  இறைவன் இல்லாத பிராணியும் கூடக் கிடையாது. 


ஸ்ரீ சத்ய சாய்பாபா

இன்றைய சிந்தனைக்கு-170:

மனத்தை நிறைப்பதிலும் மனத்தை திறப்பதே நல்லது.  உயர்ந்த அருணூல்களையே பயில்க. ப்யின்றதைச் சிந்தித்திடுக.  அதன்படி வாழ்ந்து பயன் பெறுக.  உளந்திறக்கப் பயில்க.  உள்ளமே அறிவின் ஊற்று.  உள்ள நூலைத் தியானத்தால் ஓதுக.  அருட்புலவர் மொழிகளை உன்னியுன்னி உள்ளத்தை மலர்ப்பிக்க வேண்டும்.  மலர்ந்த உள்ளம் அருண்மனமும், அறிவுத்தேனும் அன்பழகுந் தரும்.  உள்ளத்துணர்வே உண்மையை விளக்கும்.


-யோகி சுத்தானந்த பாரதியார்

10 டிச., 2013

ஆன்மீக சிந்தனை-41:

இறைவன் அருள்வடிவாக உள்ளான். அருளை நாடி, அருளைத் தேடி, அருளைப் பாடி, அருளைக் கூடி, அருளால் இறைவனை அறிவதே இன்பம். 

அருளை நேசி. அருளைப் பேசு.  அருள்வழி காட்டும் அறிவு நூலைப் பயில்.  அருள் வழி நில்.  வாழ்வு அருளாடலாம்.  அருளைப் பயில்க.  அருள்வழி வாழ்க.


- யோகி சுத்தானந்த பாரதியார்


இன்றைய சிந்தனைக்கு-169:

உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும், அதைப் பின்பற்றுங்கள்.  நேர்மையின் பாதையில் செல்லுங்கள் சுவாமி விவேகானந்தர்

9 டிச., 2013

ஆன்மீக சிந்தனை-40:

உலகில் கடவுளின் பார்வைக்கு அற்பமானது என்று எதுவுமில்லை.  அதுபோல, உன் பார்வையிலும் அற்பமானது என்று எதுவும் இருக்கக் கூடாது அரவிந்தர்

நன்றி ஆன்மிகமலர், தினமலர் இணைப்பு, டிசம்பர் 3, 2013

இன்றைய சிந்தனைக்கு-168:

ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

8 டிச., 2013

இன்றைய சிந்தனைக்கு-167:

அன்பு மனம் கரும்பு.  அன்பு கூழையும் அமுதாக்கும்.  குடிலையும் மாளிகையாக்கும்.  இடர்களையும் வெற்றிப் படிகளாக்கும்.  இருளிலும் ஒளி காட்டும். கவலை ஓட்டும். கடவுளைக் காட்டும்  யோகி சுத்தானந்த பாரதியார்.