9 டிச., 2018

நலக்குறிப்புகள்-133: பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு
மருத்துவ குணங்கள்:-

மருத்துவக்குணம் நிறைந்த பொருட்களில் ஒன்றான பனங்கற்கண்டு, நிறைய சர்க்கரை படிகக்கற்கள் கலந்த, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஆகும்.

🍖
கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பனங்கற்கண்டில் அதிகளவு வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.

#பனங்கற்கண்டில்
#உள்ள
#அற்புதமான
#மருத்துவக் 
#குணங்கள்:-

🍖
தினமும் பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்க வேண்டும். இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி பலன் கிடைக்கும்.

🍖
சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

🍖
1 டேபிள்ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

🍖
4 பாதாம் பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு, 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் ஆகியவற்றை பொடி செய்து, அதை பாலுடன் கலந்து குடித்து வந்தால், தீராத சளி பிரச்சனைகள் உடனே குணமாகும்.

🍖
தொண்டை வலி இருந்தால்
1 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்,
1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும்
1 டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.

🍖
தினமும் சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மற்றும் கண்பார்வை அதிகரிக்கும்.

🍖
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 3 முறை சாப்பிட வேண்டும். இதனால் நோய்களின் தாக்கத்தையும் தடுக்கலாம்.

🍖
சிறுநீரகக் கற்கள் பிரச்சனை விரைவில் குணமாக,
3 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும்
2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட வேண்டும்.

நன்றி: RRV

கருத்துகள் இல்லை: