30 நவ., 2020

இன்று கணினி பாதுகாப்பு தினம்

இனிய இரவு வணக்கம்!

அமைதியான,  ஆழ்ந்த, இனிய நித்திரை அமையட்டும்! 

நாளை நல்ல,  இனிய செய்திகளுடன் சந்திப்போம்!! 

சிரித்து வாழவேண்டும் !

இன்று சில தகவல்கள் : வெற்றிலை

இலக்கிய இன்பம் : ஹெமிங்வேயின், "கிழவனும் கடலும்"

27/11/2020

கிழவனும் கடலும்
-------------------------------

இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான நோபல் பரிசையும், புலிட்சர் விருதையும் வென்ற "The old man and the sea" நாவல் உலகப்புகழ்பெற்றது. 1958, 1990 மற்றும் 1999ல் அனிமேஷன் திரைப்படம் என மும்முறை திரைக்கதையாக வெள்ளித்திரை கண்டுள்ளது இந்நூல்.

எண்பத்து நான்கு நாட்களும் வெறுங்கையுடன் திரும்பும் முதிய மீனவர் சாந்தியாகோ, தனது எண்பத்தைந்தாவது நாள் பயணத்தில் கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான மார்லினை(பெரிய மீன்வகை) கரைக்கு பிடித்துவர எண்ணுகிறார், அதனுடன் போர் புரிந்து கடற்கரை குடியலை நோக்கி செல்ல எத்தனிக்கும் மூத்தோரின் தடங்கல்களும் அசுர போராட்டமுமே கதை.

பொதுவாகவே சமூகத்தில் சிறார்களுக்கும் மூப்பு எய்தியவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆதலால் தான் சிறுவர்கள் தாம் உடனே வளர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கின்றனர். அம்மா அப்பா அணியும் ஆடைகள், பேச்சுவழக்கு, உடல்மொழி, வழக்காடல்கள் என்று அனைத்தையும் நகலெடுத்து நடைமுறையில் பிரதிபலிப்பது அவர்களின் இயல்பு. ஏனென்றால் அடிப்படையாக இவ்வுலகம் பணம் படைத்தவர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் குடும்பத்தலைவர்களுக்கும்  உண்டானது. ஆகையால் தங்கள் உலகத்திலிருந்து ராக்கெட் வேகத்தில் வயதைக் கடந்திடவே ஆசைப்படுகின்றனர். அதேசமயம் வயோதிகர்கள் வாழ்வில் துணையையிழந்து, வெறுமையோடு நாட்களைக் கழிக்கின்றனர். அவர்களுக்கு இச்சமுதாயம் அளிக்கும் நிரந்தர பரிசு தனிமை. அதிலும் அன்றாடங்காய்ச்சிகளாக நாட்களைக் கடத்துகின்ற வயதானவர்களின் நிலை கொடுமையிலும் கொடுமை. 

 இவ்வாறிருக்க, வயதான நம் கதை நாயகன் சாந்தியாகோ தனிமையில் வாழ்வை ஓட்டி வருகிறார். தன்னை அதிர்ஷ்டமில்லாதவனாக எண்ணி வருந்துகிறார். எண்பத்து நான்கு நாட்களும் மீனேதும் கிடைக்காத விரக்தியில் தோய்கிறார். முன் சிலநாட்கள் சிறுவன் மனோலினுடன் மீன்பிடிக்க சென்று ஒன்றுமே பிடிபடாமல் வந்ததையொட்டி, சிறுவனின் பெற்றோர்கள் அவனை வேறொரு படகிற்கு வேலைக்கு அனுப்பி விடுகின்றனர். தனிமையின் துயரம், தோல்வியின் முகம் என நொந்துகொண்டிருக்கும் கிழவர் தன்னம்பிக்கை ஒன்றையே துணைகொண்டு மற்றுமொரு நாள் கடற்பயணத்தைத் துவங்குகிறார். தனது புது நாளில் பயணிக்கும் கிழவருக்கு படகைவிட நீளமுடைய 'மார்லின்' என்கிற மீனொன்று தூண்டினில் அகப்படுகிறது. தூண்டிலில் மாட்டிக்கொண்ட மீனைத் தக்கவைத்துக்கொள்ள தன் பலம் மட்டும் பிரயோகித்துப் பார்க்கிறார். இயன்றவரை தோள், கை, கால்களை உபயோகப்படுத்தி இதுவரை தன் வாழ்நாலில்  கண்டிராத அரிய பொக்கிஷமான அம்மீனை நிலைநிறுத்த முயல்கிறார். ஒவ்வொருமுறையும் உளச்சோர்வடையும் போதும், ஒருவேளை தற்சமயம் சிறுவன் தம்முடன் இருந்திருந்தால் இன்னும் சற்று சுலபமாக இருந்திருக்குமே என்று தொடர்ந்து எண்ணிக்கொண்டே மீனுடன் போராடுகிறார். 

பொதுவாக, கப்பலில் பயணம் செய்கையில் நிலப்பரப்பை நாம் மெல்ல மெல்ல இழக்கத் தொடங்குகிறோம். அகன்ற முடிவில்லா நீர்ப்பரப்பு நம்மை முழுவதுமாக விழுங்கிவிடுகிறது. தற்போதெல்லாம் தொலைதொடர்பு வசதிகள் ஏராளமாக உள்ளன. எழுபது எண்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் கடலுக்குச் செல்லும் ஒருவருக்கு துணையெல்லாம் தனிமை மட்டுமே. வானத்து நட்சத்திரங்கள், நாள்தோறும் உதயமாகி அஸ்தமிக்கும் சந்திரன், சுட்டெரிக்கும் கதிரவன், எங்கோ இருந்து திடீரென கடல்கடந்து வரும் ஒன்று இரண்டு பறவைகள், தூண்டிலில் மாட்ட காத்துக்கொண்டு படகைச் சுற்றும் மீன்கள், ஏற்கனவே பிடிபட்ட இறால்கள் நண்டுகள் இவை மட்டும்தான் வீட்டை விட்டு விலகி தனித்து கடலில் பயணிக்கும் மீனவன் ஒருவனின் உற்ற துணைகள்.  சாதாரண மனிதர்களுக்கே உண்டான மனக்கசப்புகள், நம்பிக்கையின்மை, விரக்தி, ஒவ்வாமை எல்லாமே அந்த நாளை வீணடிக்க அவரைச் சூழ்ந்துகொண்டே இருந்தது.  இருந்தும், அவர் ஒருபோதும் கடலை அவமதிப்பதில்லை. உறவாக எண்ணி வழிபடுகிறார். இயற்கையை தோழனாக சிநேகம் கொள்கிறார்.

கிழவர் அல்லும் பகலும் பயணிக்கையில், பல்வேறு வித அகப்போராட்டங்களுக்கு உடன்படுகிறார். அவநம்பிக்கையும், தனிமையின் துயரமும் மேலோங்கி இருக்கிறது. உதவிக்கு சிறுவன் இருந்திருந்தால் எவ்வளவு எளிமையாக வேலை முடியும் என அடிக்கடி நினைத்துப்பார்க்கிறார். பெரிய மார்லின் தூண்டிலில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், தனது மனத்துடன் தத்துவ உரையாடலை மேற்கொள்கிறார். மனக் குழப்பங்களுக்கு ஆளாகின்றார். அகப்போராட்டமும், புறத்தில் மீனுடனான வெற்றிக்கான போராட்டமும் நித்தமும்  அலைக்கழிக்கிறது. தனது கடந்தகால வாழ்க்கையையும், முந்தைய கால வீர தீர சாகசங்களையும், பிடித்தமான பேஸ்பால் நாயகர்களையும் குறித்து எண்ணிக்கொண்டே நேரத்தை நகர்த்துகிறார். நாமும் அவ்வாறுதானே தனிமையில் கடந்த காலத்தைய கொண்டாட்டங்களை நினைத்து மகிழ்கிறோம், பிரிவை நோக்கி வருந்துகிறோம், கசப்பான நிகழ்வுகள் குறித்து கவலையடைகிறோம். கடந்தகாலம் என்பது அசைபோட மனிதர்களுக்கு வாய்த்த பொக்கிஷம். 

என்ன தான், மார்லினுடனான போராட்டம் சோர்வை அளித்தாலும், தன் உடலை வலுப்படுத்தி, மனதை ஒன்றுபடுத்தி இயற்கையுடனான போரில் வெற்றி பெற தொடந்து முயற்சிக்கிறார் அவர். ஒரு கட்டத்தில் ஒருவழியாக மார்லினை வீழ்த்தி, படகோடு பிணைத்து கடற்கரைக்குச் செல்ல தயாராகிறார்.

இடைஞ்சல்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆரம்பிக்கிறது. கூர்மையான பற்களுடைய சுறாக்கள் சூழ்ந்து, அக்கிழவரின் அரிதான பரிசுப்பொருளை பங்குபோட துவங்குகிறது. தடைகளை துடுப்புகொண்டு துரத்த முயன்று, ஒரு கட்டத்திற்குப் பின் தோல்வியே கிழவருக்கு பரிசாகக் கிடைக்கிறது. எண்பத்தைந்து நாட்களுக்குப் பின் கிடைத்த மிகப்பெரிய சொத்தும் கைவிட்டு விலகியதை அவரால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. கடந்த நாட்களில் உண்டான உடல் மற்றும் மனச்சோர்வும் சமகால இழப்பும், தான் அதிர்ஷமில்லாதவன் என்பதனை மீண்டும் உறுதிபடுத்தியது போலவே தோன்றுகிறது. பின் குடிலுக்கு சென்றதும் சிறுவன் கடலில் நடந்ததையெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட்டு போய், இனி தானும் அவருடன் மீன்பிடிக்கச் சென்று நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக கூறுகிறான். தாத்தா பாட்டிகளை பேரன்பேத்திகள் உணர்ந்துகொண்டு பரஸ்பரம் அன்பு செலுத்துவது போல் வேறெந்த உறவிலும் உண்டோ?

படகுடன் சதைப்பற்று முற்றிலும் நீங்கி இணைத்து கட்டப்பட்டிருக்கும்  மார்லின் ஒரு "படிமமாகவே" என்னுள் பதிந்துவிட்டது. படகு மானுட உடலென்றால் மார்லின் காலம் - கூரிய பற்கள் கொண்ட கொடூர  சுறாக்கள் காலத்தை  விழுங்கும் சமூக ஊடகங்கள், பொழுதுபோக்குகள், வீண் சச்சரவுகள், மோதல்கள், வறுமை, கல்வி, குடும்பம். இறுதியில் சாந்தியாகோ மாதிரியே தோல் சுருங்கி மூப்பெய்தி அனைத்தையும் இழந்து பின்னர் எஞ்சியிருப்பது, சொற்ப சதையும், எலும்பும். இது வாழ்க்கையின் எவ்வளவு பெரிய தரிசனம். 

இன்னுமொரு பார்வையில், படகு தான் பொதுத்திட்டம் என்றால், அரசியல்வாதிகள் - சுறாக்கள், அவற்றின் வாய்களுக்கு கிடைத்தது போக, மிஞ்சியிருக்கும் பணமுடிப்பு மட்டுமே திட்டமாக நிறைவேறுகிறது. பாமர மக்கள்  தான் இங்கு ஏமாந்து களைப்படைந்த சாந்தியோகா கிழவன்.

தனிமனிதனுக்கும் இயற்கைக்கும் இடையாயான மோதல்கள்,  வாழ்க்கையின் தாண்டவங்கள், தனிமை ஏற்படுத்தும் உளச்சிக்கல்கள், தத்துவார்த்த உரையாடல்கள் என பல்வேறு தளங்களில் ஊடுருவி நகர்ந்துகொண்டே செல்கிறது குறுநாவல். மீனவனொருவனின் கடல்பயணத்தை சகபயணியாய் கூடவே பயணித்து கவனிக்க வைத்ததில் இது ஒரு சிறந்த புத்தகம். பல்வேறு திசைகளிலிருந்து வாசித்து ஆழ புரிந்துகொள்ள வேண்டிய புத்தகம்.

என்றும் பேரன்புடன்,
தி.ராம் குமார்❤
 (ramkumartrk2@gmail. Com)

#RM096 #RM96 #ReadingMarathon_2020 20/25

நன்றி :

புத்தகங்களின் நிழலில் - எஸ்ரா

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து :
நூலக மனிதர்கள் 23 - புத்தகங்களின் நிழலில்

நூலகத்தின் அருகிலே அவரது மெக்கானிக் ஷாப் இருந்தது. மணி என்ற அந்த மெக்கானிக் அடிக்கடி நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அவர் புத்தகம் எடுத்துப் போவதைப் பார்க்கவில்லை. நூலகத்திலும் நாளிதழ் படிப்பதோ, வார இதழ்களைப் புரட்டுவதோ கிடையாது. பெரும்பாலும் மூலையில் உள்ள மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பார்.

மாலை நேரமாக இருந்தால் பேப்பர் படிக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பார். படிக்காமல் எதற்காக இப்படி நின்று கொண்டேயிருக்கிறார் என்று யோசித்திருக்கிறேன். ஒரு நாள் மணியிடம் எனது நண்பனின் பைக்கை ரிப்பேர் செய்யச் சென்றிருந்த போது அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தார்

“உங்களை லைப்ரரியிலே பாத்துருக்கேன். அடிக்கடி வருவீங்க“ என்றார்

“உங்களையும் பார்த்திருக்கேன். ஏன் ஒரு புக் கூட நீங்க எடுத்துட்டு போறதில்லை. நேரமில்லையா“ என்று கேட்டேன்

“எனக்குப் படிக்கத் தெரியாது சார். கைநாட்டு. ஆனா படிக்கணும்னு ரொம்ப ஆசை. அதான் படிச்சவங்க இருக்கிற இடத்தில் போய் நின்னா நாலு வார்த்தை காதுல விழுமே. அதுக்குத் தான் லைப்ரரிக்கு வர்றேன்“ என்றார்.

“பள்ளிக்கூடமே போனதில்லையா“

“போனேன் சார். ஆனா படிப்பு மண்டையில ஏறலை. மூணாம் வகுப்பு படிக்கிறப்போ எங்கம்மா செத்துப் போச்சு. என்னையும் என் தங்கச்சியையும் பாட்டி கூட்டிகிட்டுப் போயிருச்சி. கடலாடி கிட்ட மூக்கையூர்னு சின்னக் கிராமம். அங்கே போய்ப் படிக்கலை. ஆடு மேய்ச்சிகிட்டு இருந்தேன். பதினைந்து வயசு வரைக்கும் மூக்கையூர்ல தான் இருந்தேன். அப்போ முத்து அண்ணன்னு தெரிஞ்சவர். அவர் தான் என்னை அருப்புக் கோட்டையில் ஒரு மெக்கானிக் கிட்ட வேலைக்குச் சேர்த்துவிட்டார். அப்படியே தொழில் பழகி நானும் ஒரு மெக்கானிக் ஆகிட்டேன். என் பொண்டாட்டி இந்த ஊர். அதான் இங்கே வந்து மெக்கானிக் ஷாப் போட்டுட்டேன். ஏதோ பிழைப்பு ஒடுது.“

“லைப்ரரியில் வந்து என்ன செய்வீங்க “

“சாயங்காலம் வந்தா பேப்பர்ல போட்டு இருக்க விஷயத்தைப் பற்றி  பேசிகிடுறதை கேட்பேன். கோபாலகிருஷ்ணன்னு ஒரு சார் அங்கே வந்து பழக்கம் ஆகிட்டாரு. அவரு நம்ம வொர்க் ஷாப்புக்கு வருவார். படிச்ச புத்தகம் பற்றிச் சொல்வார். வேலை செய்துகிட்டே கேட்டுகிட்டு இருப்பேன். புத்தகம் படிக்கிறவங்களைக் கண்டால் எனக்குப் பெரிய மரியாதை சார். படிச்சவங்களை மாதிரி நம்மாலே பேச முடியுமா. யோசிக்க முடியுமா. என் மகள் திவ்யா நாலாம் வகுப்பு படிக்கிறா. அவளை நிறையப் படிக்க வைச்சி பெரிய வேலைக்கு அனுப்பணும்னு ஆசைப்படுறேன்“

படிக்கத் தெரியாத ஒருவர் இப்படி நூலகத்திற்குத் தினமும் வந்து நாலு நல்ல வார்த்தைகளைத் தெரிந்து கொண்டு போக நினைப்பது எவ்வளவு உயர்வான விஷயம். இந்த மனது யாருக்கு வரும்.

மணி ஆதங்கமாகச் சொன்னார்.

“என்னை மாதிரி படிக்கத் தெரியாத ஆட்களுக்கு தினம் ஒருமணி நேரம் லைப்ரரியிலே யாராவது புத்தகம் படிச்சி சொன்னா கேட்டுகிடுவோம். நாம தெரிஞ்சிகிட வேண்டியது எவ்வளவோ இருக்கு. அன்னைக்குக் காமராஜரை பற்றி ஒரு புத்தகம் கொண்டு வந்து கோபாலகிருஷ்ணன் சார் காட்டுனார். அதுல போட்டு இருந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இந்த விருதுநகர்ல எத்தனை பேருக்கு அந்த விஷயம் தெரியும். படிச்சா தானே தெரிஞ்சிகிட முடியும்“

“உங்களுக்கு இருக்கிற ஆர்வம் பலருக்கும் இல்லையே “என்றேன்

“படிக்காமல் போயிட்டமேனு தினந்தினம் வருத்தப்படுகிறேன். என்னால முடிஞ்சது இப்படி ஒரமா நின்னு நாலு பேரு பேசுறதை கேட்டுத் தெரிஞ்சிகிடுறது தான்“

மணியைப் போலப் படிப்பின், புத்தகங்களின் அருமை தெரிந்த பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் படிக்க இயலவில்லை. வறுமையும் குடும்ப நெருக்கடிகளும் வாழ்க்கையைத் திசைமாற்றியிருக்கிறது. ஆனால் அந்த விருப்பத்தை அவர்கள் கைவிடவில்லை.

அதன் பிறகு நூலகத்தில் மணியைப் பார்த்தால் அவர் ஆசையாக என் கையிலுள்ள புத்தகங்களின் பெயர்களைக் கேட்பார். அது எதைப்பற்றிய புத்தகம் என்று தெரிந்து கொள்வார். புத்தகங்களின் மீதான அவரது ஆசை கண்ணில் ஒளிர்ந்து கொண்டிருப்பதை உணர்வேன். படித்த பலரையும் விடவும் மணியின் மீது எனக்குப் பெருமதிப்பு உருவாகியிருந்தது.

ஒராயிரம் மனிதர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி தங்கள் அனுபவங்களை. ஞானத்தை, புதிய சிந்தனைகளை, அறிந்த உண்மைகளை, கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து தர முன்வருகிறார்கள் என்றால் அந்தச் சபை எப்படியிருக்கும். அதை யாராவது வேண்டாம் என்று ஒதுக்குவார்களா.

பொதுநூலகம் என்பது அது போன்ற சபை தான். அங்கே மனிதர்கள் புத்தக வடிவில் இருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒரு வழிகாட்டுதலை மேற்கொள்கிறது. தேடிச் செலவு செய்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனுபவத்தை எளிதாகத் தந்துவிடுகிறது.

புயலிலும் மழையிலும் போராடிக் கடல் கடந்து சீனாவிற்குப் போய் வந்த மார்க்கோ போலோ தன்னுடைய பயணத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய புத்தகம் எந்தச் சிரமமும் இல்லாமல் ஒரு வாசகனுக்கு உட்கார்ந்த இடத்திலிருந்தே சீனாவினைப் புரிய வைத்துவிடுகிறது. இது தானே உண்மையான வழிகாட்டுதல்.

சூரியனின் வெளிச்சம் போல ஒவ்வொரு புத்தகம் திறக்கப்படும் போதும் அதனுள்ளிருந்து மாயவெளிச்சம் ஒன்று வெளிப்படவே செய்கிறது. அந்த வெளிச்சம் உங்கள் மனதை தூய்மைப்படுத்துகிறது. உங்கள் அறிவை விசாலமாக்குகிறது. உங்கள் வாழ்க்கையைப் புதிய பாதையில் பயணிக்கச் செய்கிறது.

என்னோடு கல்லூரியில் படித்த நண்பன் ஒருவனின் அழைப்பில் வேப்பங்குளம் என்ற அவனது ஊருக்குப் போயிருந்தேன். வீட்டில் அவனது அம்மா மட்டும் தானிருந்தார். சிறிய குடிசை வீடு. அவனது அக்கா கல்யாணம் ஆகி புதுக்கோட்டையில் வசித்துவந்தார். அப்பா இறந்துவிட்டார். அம்மா விவசாயக் கூலி வேலை செய்து நண்பனைப் படிக்க வைத்தார். மிகவும் கஷ்டப்படுகிற குடும்பம். அவர்கள் வீட்டைப் பார்க்கும் வரை இந்த உண்மைகள் எதுவும் எனக்குத் தெரியாது.

நாங்கள் ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் அவனது அம்மா மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பார். சாப்பாடு பரிமாறும் போது அவரது கைககள் நடுங்குவதைக் கண்டேன்.

நண்பன் வேடிக்கையான குரலில் சொன்னான்

“எங்கம்மாவுக்குப் படிச்ச ஆட்களைக் கண்டா கைநடுங்க ஆரம்பிச்சிரும். ஒரு வார்த்தை பேசாது. உன் கூட என்னமோ நாலு வார்த்தை பேசி இருக்கு“

“நானும் உங்க பிள்ளை மாதிரி தான்மா“. என்றேன்

“காலேஜ்ல படிக்கிற புள்ளைக்கு நம்மவீட்டு சாப்பாடு பிடிக்குமா“ என்று கேட்டார்

“ருசியா இருக்கு“ என்றேன்

“படிக்கிற புள்ளைகள் நிறையச் சாப்பிடணும். அப்போ தான் படிச்சது புத்தியில் ஏறும்“ என்று சொன்னார் நண்பனின் அம்மா

நண்பன் சிரித்தபடியே என்னிடம் சொன்னான்

“இப்படி தான் வீட்டுக்கு வந்துட்டா. எந்நேரமும் எதையாவது சாப்பிடக் குடுத்துகிட்டே இருக்கும். இதை விட நான் புத்தகம் படிச்சிகிட்டு இருந்தா. அதைக் கண்ணு இமைக்காமல் பார்த்துகிட்டே இருக்கும். சில நாள் எங்கம்மா கண்ணுல தானா கண்ணீர் வந்துரும். எங்க தலைமுறையில் நான் தான் முதல்ல காலேஜ்ல படிக்கிறேன். வீட்ல ஒரு ஆள் படிச்சது கிடையாது. “

மகன் புத்தகம் படிப்பதை கண்டு அம்மாவின் கண்கள் கசிவது நிஜமானது. அது படிப்பு தான் அவர்களைக் கரையேற்றப் போகிறது என்ற நம்பிக்கையில் பீறிடும் கண்ணீர்.

நண்பன் சொன்னான்

“நான் காலேஜ்க்கு போயிட்ட பிறகு வீட்ல எங்க அம்மா ஒரு ஆளை என் பொஸ்தகத்தைத் தொட விடாது. அடிக்கடி அந்தப் புத்தகங்களைக் கண்ல தொட்டு ஒத்துகிடும். நமக்கெல்லாம் புத்தகம் வெறும் அச்சடிச்ச காகிதம். ஆனால் எங்க அம்மாவுக்கு அது தான் சாமி. “

நண்பனின் அம்மாவைப் போல எங்கோ கிராமத்தில் ஒடியோடி உழைத்து தன் பிள்ளைகளைப் படிக்க வைத்த தாயிற்குப் புத்தகத்தின் மதிப்புத் தெரிந்திருக்கிறது. ஆனால் கைநிறைய சம்பளம் வாங்குகின்ற, பெரிய வேலை பார்க்கிற மனிதர்களுக்குத் தான் புத்தகம் வேண்டாத பொருளாகத் தெரிகிறது.

பொதுநூலகம் எத்தனையோ எளிய மனிதர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. பொது நூலகத்திற்குத் தினமும் வந்து படித்துக் குறிப்பெடுத்து போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றிபெற்றவர்களுக்குத் தெரியும் அதன் முக்கியத்துவம்.

நூலகத்தின் கதவுகள் திறந்திருந்தாலும் அதற்குள் நுழைவதற்கும் பயன்படுத்துவதற்கும் எத்தனையே பேர் தயங்கித் தயங்கியே காத்திருக்கிறார்கள்.

ஒருவர் நூலகத்தின் படிக்கட்டுகளைக் கடந்து உள்ளே போகிறார் என்றால் அவர் வாழ்வின் மாற்றத்தை நோக்கி ஒரு படி முன்னெடுத்து வைக்கிறார் என்றே நினைப்பேன். காரணம் நான் அப்படித் தானே உருவானேன்.

நன்றி :

நூல் நயம் : நாகம்மாள் - ஆர்.சண்முகசுந்தரம்

வாசிப்பு மாரத்தான் 2020
25+/83
RM023
நாகம்மாள்   -                          ஆர்.சண்முகசுந்தரம்

சின்னப்பன், அவன் மனைவி ராமாயி. சின்னப்பனோட அண்ணன், பத்து வருடத்துக்கு முன் நடந்த ஊர்திருவிழாவின் போது, வெடி விபத்தில் இறந்துவிட்டான். அவனது விதவை மனைவி தான் நாகம்மாள். அவளோட குழந்தை முத்தாயி.

கொஞ்ச நாளாகவே, நாகம்மாளோட நடத்தை, சின்னப்பனுக்கும், ராமாயிக்கும் சங்கடத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. ஊரிலும் ஏதேதோ பேச்சுகள். நாகம்மாள் பல சமயம் ரகசியமாகவும், சில சமயம் சிலர் கண்ணில் பட்டும், கெட்டியப்பனைச் சந்தித்து கொண்டிருக்கிறாள். 

ராமாயியின் அம்மாவுக்கு, இங்கே இருக்கிற காடு-கரையெல்லாம் விற்றுவிட்டு, மகள்-மருமகன் தங்களோடு வந்துவிட்டால் நலமென்று இருக்கிறது. 

நாகம்மாளுக்கு, கெட்டியப்பனால் ஒரு காரியம் நடக்கவேண்டும். கெட்டியப்பன் கூட இதில் ஒரு பகடைக்காய் தான். 

என்ன அது..முடிவு என்ன ஆயிற்று என்பது தான் கதை.

இயல்பான கிராமத்தை கண்முன்னால் நிறுத்துகிறது வர்ணனையும், கதை நடையும். நாகம்மாளைக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அறிமுகம் செய்கையில், நாம் அவளுக்கு ஒரு உருவம் கொடுத்துவிடுவோம். அவ்வளவு நுட்பம். நாகம்மாள் மட்டுமில்லை, அந்த கிராமம், மக்கள் எல்லாமும். 

முன்னுரையில், கு.ப.ரா எழுதியிருப்பது தான் அட்டையில் இருக்கிறது - " குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நவீனம் இது தான்" 

முடிவு, மூச்சை ஒரு நொடி நிறுத்திவிடும்.

நன்றி :

கருத்து மேடை : தடுப்பூசி ஒரு பித்தலாட்ட அரசியல்! - Dr. கோ. பிரேமா MD(Hom)

தடுப்பூசி ஒரு பித்தலாட்ட அரசியல்! -
Dr. கோ. பிரேமா MD(Hom),

அநேகமாக அனைத்து தடுப்பூசிகளும் மூளை மற்றும் நரம்பியல் மண்டலத்தை பாதிக்கக்கூடியதே. இதை ஆங்கிலத்தில் neurotoxic எனலாம். இவை தடுப்பூசிக்குப்பின் ஏமவினை(autoimmune) நோய்களாகவும் வரும். 

Encephalitis, Encephalopathy, Epilepsy, Transverse Myelitis, Gullien Barre syndrome, brain damage, AUTISM(YES, it's time we acknowledge this issue!) , etc etc. 

இதுவரை இக்குறுகிய காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசியில் சில ஆயிரம் நபர்களிடம் நடத்தும் பரிசோதனையில் மட்டும் பாதகமாக Tranverse Myelitis மற்றும் Encephalopathy என இரண்டு பாதகங்கள் வெளியே தெரியவந்துள்ளது. 

அனைவருக்கும் தடுப்பூசி எனும்போது மேலும் பல பாதகங்கள் கிளம்பும். 

யாருக்கு இப்பாதகங்கள் வரும், யாருக்கு வராது என்று முன்னரே அறிதல் முடியாது. 

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த ஆபத்தை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். 

இந்த எளிய உண்மையை முறையாக வெளிப்படையாக பேச வேண்டியதும், இழப்பீடு தருவதும், ஒவ்வொரு தனிநபரின் விருப்பத்தேர்வுக்கு மதிப்பளிப்பதும் மருத்துவ அறம் ஆகும். 

இதுவரை இந்தியாவில் எந்த தடுப்பூசியும் மருத்துவ அறத்துடன் போடப்பட்டது இல்லை. 

கண்மூடித்தனமான 'தடுப்பூசி நல்லது, பாதுகாப்பானது' என்ற மாயபிம்பத்தில்தான் இதுவரை தடுப்பூசி அநேக மருத்துவர்களால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு "தடுப்பூசியும், தடுப்பூசி நல்லது என்ற பொய்யும்" விற்கப்பட்டு வருகிறது. 

தடுப்பூசி ஒரு பித்தலாட்ட அரசியல்.
இதில் மருத்துவர்கள் பலர் கைப்பாவைகள். 
சிலர் கைக்கூலிகள். 
மொத்தத்தில் அறிவியல் அறிவிலிகள். 

வெகு சிலரே அறிவியல் அறத்தின் பக்கம். 

இனி மனநிலை சிறப்பு சிகிச்சை மருத்துவர் Dr. Mathi Vanan MD, அவர்களது பதிவு. 

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ஆஸ்ட்ரா ஜெனகா தயாரிப்பில் பூனாவாலாவின் சீரம் கம்பெனியின் கொரானா ஊசி பரிசோதனை நடக்கிறது.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது நபர்  பக்க விளைவுகள் பெரிதாக இருக்காது என உறுதி தரப்பட்டதால் தன்னார்வலராக கொரானா ஊசி போட்டு கொண்டார். 

அக்டோபர் 1 போடப்பட்டது. அதிலிருந்து 14 நாள்கள் கடும் தலைவலி, மன குழப்பம், எதையும் புரிந்து கொள்ளாத நிலை ஏற்பட்டது. அக்டோபர் 26 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆயினும் இன்னும் தினசரி வேலைகளை தானே செய்ய முடியாதபடியும், சாதாரண உரையாடல்களை கூட புரிந்து கொள்ள முடியாதபடியும், அதீத கோபம் வருத்தம் என குழப்பமாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தீவிர மூளை பாதிப்பு என்னும் பாதிப்பு உருவாகி உள்ளது.  கொரானா மரபணு ஊசி இந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், தன் வாழ்தாரத்துக்கு 5 கோடி நட்ட ஈடு கேட்டும், இத்தகைய ஆபத்தான கொரானா ஊசியை பொது மக்களுக்கு போடாதபடியும், இப்பரிசோதனைகளை நிறுத்தும்படியும் கோரிக்கை வைத்துள்ளார். 

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம், ஆஸ்ட்ரா ஜெனகா, சீரம் கம்பெனி, இந்திய மருத்துவ ஆய்வு கழகம், மருந்து கட்டுப்பாடு துறைக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். அவருக்கு பதிலோ மருத்துவ கண்காணிப்போ இல்லை என்றும் சொல்கிறார். அடுத்த வாரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளார்.  

இதே போன்ற விளைவுகளுக்கு வெளிநாட்டில் ஆய்வு நிறுத்தப்படும். மக்களுக்கு தெரிவிக்கப்படும். ஆனால் இங்கு வெளியில் எதுவும் சொல்லப்படவில்லை.

https://www.google.com/amp/s/m.economictimes.com/industry/healthcare/biotech/healthcare/participant-in-serum-trial-seeks-5cr-compensation/amp_articleshow/79456375.cms?

https://youtu.be/PH3dQzjqRDI

நன்றி :

இன்றைய குறள்

இன்றைய சிந்தனைக்கு

இனிய காலை வணக்கம்!

29 நவ., 2020

இனிய இரவு வணக்கம்!


அமைதியான,  ஆழ்ந்த நித்திரை அமையட்டும்! 

நாளை நல்ல,  இனிய செய்திகளுடன் சந்திப்போம்!! 

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #994: நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆறெழுத் தாவது வாறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

விளக்கம்:

'ஓம் நமசிவாய' என்னும் ஆறு எழுத்து இறைவனை அடையும் ஆறுவித வழிகளின் விரிவாகும். சமஸ்கிருத எழுத்தில் காயத்திரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை (புள்ளி வைத்த மூன்று எழுத்துக்கள் தவிர்த்து) நான்கு முறை செபிப்பது 'ஓம் நமசிவாய' எனும் ஆறு எழுத்துக்களை ஒரு முறை செபிப்பதற்கு சமமாகும். காயத்ரி மந்திரத்திலுள்ள முதல் எழுத்தாகிய 'ஓம்' எனும் மூல மந்திரத்தையும் காயத்ரி மந்திரத்தையும் பிரித்து அறிந்து உணர வல்லவர்கள் பிறவி இல்லாத நிலையை அடைவார்கள்.

குறிப்பு: சமயங்கள் என்பதன் பொருள் இறைவனை அடைவதற்கு முறைப்படி கடைபிடித்து செல்லும் வழிகளாகும்.

இறைவனை அடையும் ஆறுவித வழிகள்:

1. தியானம் - மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்
2. செபம் - அக வழிபாடு மூலம் செபித்தல்
3. பூஜை - புற வழிபாடு மூலம் செபித்தல்
4. சக்கரம் - சக்கரங்கள் அமைத்து செபித்தல்
5. ஞானம் - மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
6. புத்தி - மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்

நன்றி :

இலக்கிய இன்பம்

             லார்ட்​ பைரன்                              காதல் கவி​தை

 இது​பைரன்​கேம்ப்பிரிட்ஜ்
பல்க​லைக்கழகத்தில்படித்த​போதுஎழிதியதாகஇருக்ககூடும்
என்பதுவிமர்சகர்களின்
அபிப்பிராயம்... இதுஅவரு​டைய  வாழ்க்​கையில் நடந்த காதல் ​தோல்வி,,  ஒரு​வே​ளை  இப்படிஅழகியகவி​தையாக
வடி​வெடுப்பதற்​கேகூடஅது​தோல்வியில்முடிந்திருக்கலாம் என்றுகூட​தோன்றுகிறது)

(கவி​தையின்கரு)

காதலர்கள்  இருவரும்  கண்ணீருடன் பிரிகிறார்கள் சூழ்நி​லை​யே  காரணம் ..கால​மோ  பறக்கிறது ​ ,இறக்​கைகட்டிக்​கொண்டு... ஆனால்இதயங்கள்மட்டும்காதலின் இரணங்க​ளைச் சுமந்து​கொண்டு  எங்​கோ உயிர்த்திருக்கின்றன 
நிI​னைவுகளினால்  மட்டு​​மே...

.கால​மே மீண்டும் ஒருசந்திப்​பை  தருகிறது...அ​தை அது கொடுக்காம​லேகூடஇருந்திருக்கலாம்   அவன் உறவுக​ளோ  ​வேறுஉறவுகளுடன் காலத்தால்..... அவள் உற​வுக​ளோ விதியுடன் ​வேறு ​கோலத்தில்..ஊ​ரெல்லாம் உலக​மெல்லாம் அவ​ளை​ அ​டையாளம் காணும் அளவுக்கு
அவள் வளர்ந்திருக்கிறாள் ஆனால் விதியின் பா​தையில்  அவ்வளவுதான்அவ​ளைப்பற்றி ​சொல்வதற்கு ....

மீதி​யை நீங்க​ளே புரிந்து​கொள்ளுங்கள்....அ​​நேக  நாக்குகள் அவ​ளைப்பற்றி நன்கறிந்ததாய்அவரிட​மே​சொல்ல , அவ​​ளைப்பற்றி நன்கறிந்த அவ​ருக்​கோ​மெளனித்திருப்ப​தைதவிர​வேறுவழியில்​லை ..
க​டைசிசந்திப்பும் இந்த புதியசந்திப்பும் மாறி மாறி​கொண்டுவந்து​சேர்க்கிறது
இந்தகவி​தை​யை...

நாம்   இருவரும்  பிரிந்த ​போது

 (WHEN WE  TWO PARTED)

பிரிவதற்காக​வே அ​மைந்தத​தோ
 நம்க​டைசி  சந்திப்பு
அந்தசந்திப்புக்கு நம்முறிந்த இதயங்க​ளே​சாட்சியாகஇருந்தன
அப்​போது.....

உன்முக​ம்  ​வெளுத்து  
தா​டை​  குளிர்ந்து
உன்க​டைசி முத்த​மோ
உ​றைந்து ​போயிருந்தது
மரித்தஅ​மைதியில்....

உன்விழகளில்அன்று வழிந்​தோடியகண்ணீரில்
அப்​பொழு​தே  எழுதப்பட்டிருந்திருக்கிறது
எனது இந்நா​ளைய விதி​அதைஎவ்விதம்நான்வாசிக்காமல்தவறவிட்​டேன்அன்று?

ஒரு  நாள்  ​காலைஎன்கண்களில்
துளிர்த்திருந்தது
ஒரு ஒற்​றைப்பனித்துளி

அ​தை என்விரல்கள்உணர்ந்த​போது ஏற்கன​வே
அது உ​றைந்து​போயிருந்தது

நான் காணும் இந்தவீதி​யெங்கும்
உன்​பெய​ரே உச்சரிக்கப்படுகிறது...

இ​தேவீதிதான்
உன்அத்த​னைஉறுதிகளும்
காற்றில்பறக்கவிடப்பட்ட
இ​தேவீதிதான்....

உன்​​பெய​ரை​யேஒவ்​வொருவரும்
என்முன்உச்சரிக்கிறார்கள்
உன்​னைஎனக்குஎன்று​மே​தெரியா​​தென.
அவர்கள் நி​னைக்கிறார்கள்....

நான்​சொல்லநி​னைக்கி​றேன்
என்​னைவிடஉன்​னை
உன்​மேலானஉன்​னை
உன்முழுஉன்​னை
யார்நன்கறிவார்கள்என்று

ஆனாலும் உதட்டி​லே​யே
நீர்க்குமிழிகளாய்
என்​மெளனங்க​ளைஉ​டைத்துக்​கொண்டு.....
அ​மைதியில் துடிக்கி​றேன்

மனதுக​ளை  அவிழ்ப்பது
உயிர்ப்பற​வை​யை  நிரந்தரமாய்
வானில் பறக்கவிடுவது
என்ப​​தையும் கூடநானறி​வேன்....

உன் இதய​மோ
நம் காதலின் ஆத்மா​வை
மறந்திருக்ககூடும்
உன்விருப்பப்படி​யேகூட
ஆனால் என் இதய​மோ?.....

முன்​பெல்லாம்
இரகசியமாய் நாமிருவரும் சந்தித்​தோம்
காதல்வளர்ப்பதற்கு

இன்​றோ நா​னொருவ​னே
தனி​மையில் மரிக்கி​றேன்
அந்தகாதல் இரணங்க​ளை எனக்குள்​ளே​யே
​ க​ரைப்பதற்கு
எனக்குள்​ளே​யே  !...

         தங்​கேஸ்

நன்றி :

சிறப்புக் கட்டுரை : மக்கள் மறந்த இரு மகாத்மாக்கள் !

மக்கள் மறந்த இரு மகாத்மாக்கள் :
எழுத்தாளர் இராஜேஷ் லிங்கதுரை

துரத்தியடிக்கப்பட்ட மகாத்மா :-

அந்த வாலிபன் தனது நண்பனின் திருமண விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் பகட்டான ஆடைகள் கிடையாது, ஆனால் மனம் நிறைய அன்பு மட்டும் இருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவன் போவது அவன் தந்தைக்கு சற்றுப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை. திருமணத்திற்குக் கட்டாயம் போகவேண்டுமா என்று கேட்டார். நண்பன் விருப்பப்பட்டு அழைத்ததாகவும், போகவில்லையென்றால் அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி விட்டு அவன் திருமணத்துக்குக் கிளம்பி விட்டான்.
திருமண வீட்டு வாசலில் அவன் காலடி பட்டதுதான் தாமதம், உள்ளேயிருந்த சிலர் அவனைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் தொடுத்த முதல் கேள்வி, நீ என்ன சாதி. அவன் துணிவாக சொன்னான், நான் மாலி சாதியைச் சார்ந்தவன். மறுகணமே அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டான். அவனது நண்பன் கூட உதவி செய்ய முன்வரவில்லை. நெஞ்சம் கனத்தது. அழுவதைத் தவிர வேறு எந்தவிதப் புரட்சியும் செய்யமுடியாத நிலை. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் தந்தை இதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல் அவனை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்.
துரத்தியடிக்கப்பட்ட அந்த 21 வயது வாலிபனின் பெயர் ஜோதிராவ் பூலே. இந்தியாவில் மகாத்மா என்று அழைக்கப்பட்ட முதல் மனிதர். காந்திக்கு முன்னரே மகாத்மா என்று அறியப்பட்டவர். கல்வி என்பது கனவு என்று நம்பிக்கொண்டிருந்த காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களிடையே கல்வியைக் கொண்டுபோய் சேர்த்தவர். சராசரி மனிதனாகக் கூட மதிக்காமல் துரத்தி விடப்பட்ட அந்த சிறுவன் ஜோதிராவ் பின்னாளில் மகாத்மா என்று போற்றப்பட்டான். துரத்தியடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மகாத்மாவைக் குறித்துப் பார்க்கலாம்.

பூர்வீகம்:-

ஜோதிராவ் பூலேயின் தாத்தா ஷெட்டிபா (Shetiba) பேஷ்வாக்களுக்கு (Peshwa) பூச்செண்டுகள் கட்டிக்கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மூன்று மகன்கள். ரானோஜி, கிருஷ்ணா மற்றும் கோவிந்த். இவர்களின் பூ கட்டும் திறமையைப் பார்த்து இவர்கள் பெயரே பூலே என்று மாறிப்போனது. பூலே என்றால் தமிழில் பூக்காரன் என்று அர்த்தம். தங்கள் ஜாதிப் பெயர் தொலைந்து போய், பெயருக்குப் பின்னால் பூலே என்ற பெயரையே சேர்த்துக் கொண்டார்கள். இவர்கள் பூச்செண்டுகளில் மயங்கிப் போன பேஷ்வாக்கள் ஷெட்டிபாவுக்கு சன்மானமாக 32 ஏக்கர் நிலம் கொடுத்தார்கள். பின்னாளில் 32 ஏக்கர் நிலத்தையும் மூத்தப் பையன் ரானோஜியே எடுத்துக் கொண்டு மற்றவர்களைத் தெருவில் விட்டுவிட்டார். அவர்கள் கடைசிவரை ஏழ்மை நிலையிலேயே அவதிப்பட்டு வந்தனர்.

இளையவர் கோவிந்தின் மனைவி பெயர் சிம்னாபாய். அவர்களுக்கு இரண்டு மகன்கள். ராஜாராம்ராவ் மற்றும் ஜோதிராவ். ஜோதிராவ் பிறந்தது 11 ஏப்ரல் 1827, புனேயில் பிவானி என்னும் நகரத்தில் உள்ள கட்கன் கிராமம். ஜோதிராவுக்கு ஒரு வயதாகும்போதே அவர் அன்னை சிம்னாபாய் காலமானார். ஜோதிராவ் நன்றாகப் படித்தார். ஆனால் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக அவர் கல்வி பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால் அவரது அறிவாற்றலைக் கண்ட அண்டை வீட்டுக்காரர் அவரை பள்ளிக்கு அனுப்புமாறு ஜோதிராவின் தந்தையைக் கேட்டுக்கொண்டார். பக்கத்து வீட்டுக்காரர் புண்ணியத்தில் ஜோதிராவின் கல்வி தொடர்ந்தது. ஜோதிராவுக்கு13 வயதில் சாவித்ரிபாய் என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. அன்றைய காலங்களில் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். திருமணத்தின்போது சாவித்ரிபாய்க்கு 9 வயதுதான்.

இரண்டாவது வழி:-

கல்யாண வீட்டில் அவமானப்பட்டு வந்து நிற்கும் ஜோதிராவை நாம் மீண்டும் சந்திக்க வேண்டிய தருணம். அப்பா, மனைவி எல்லோரும் ஆறுதல் கூறினாலும், அவரை ஏதோ ஒன்று தூங்கவிடாமல் செய்தது. அவமானத்தின் உச்சத்தில் முளைத்த எண்ணம் இரண்டு விதமாக செயல்படக்கூடியது. ஒன்று, தன்னைப் புறக்கணித்த சமுதாயத்தின் மீது வெறுப்புணர்வை உண்டாக்கி, சமுதாயத்தைப் பழி வாங்க வேண்டும் என்ற வெறியை உருவாக்கவல்லது. இரண்டு, தனக்கு நேர்ந்த அவமானம் பிறருக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று சமுதாயத்தை சீர்திருத்த முனைவது. ஜோதிராவ் மகாத்மா, அதனால் அவர் கட்டாயம் முதல் வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் பின்பற்றியது இரண்டாவது வழி. அது சமுதாயத்தை சீர்திருத்தும் பணி.
1848 ஜோதிராவ் வாழ்வில் பல திருப்புமுனைகளைக் கொண்டுவந்த ஆண்டு. அந்த ஆண்டில்தான் அவர் திருமண வீட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார். அவர் கண்ணீரைத் துடைக்க உதவியது தாமஸ் பெயின் (Thomas Paine) எழுதிய “மனிதனின் உரிமைகள் (The Rights of Man)” என்ற புத்தகம். 1848ம் ஆண்டுதான் இந்த புத்தகத்தை அவர் படித்தார். நம்மில் பலரது கண்ணீர் கைக்குட்டையில் கரைந்து போகும், ஆனால் ஜோதிராவின் கண்ணீர் ஒரு புத்தகத்தில் முடிந்தது. ஒரு அவமானமும், ஒரு புத்தகமும்தான் இந்தியாவின் முதல் மகாத்மாவை உருவாக்கின. அதே ஆண்டு மற்றொரு வரலாற்று சாதனையை அவர் செய்தார். அவர் மனைவிக்கு கல்வி கற்றுக்கொடுத்தார். மனைவிக்குக் கல்வி பயிற்றுவிப்பதில் என்ன வரலாற்று சாதனை என்ற எண்ணம் இயல்பாகவே எழும். சாவித்ரிபாய்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரை உருவாக்கியது வரலாற்று சாதனைதானே. ஆசிரியரை உருவாக்கியதோடு மட்டுமல்ல, அதே ஆண்டில் ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு பள்ளி ஒன்றையும் துவங்கினார்.

கல்விப்பணியும், சமுதாயப்பணியும்:-

உஸ்மான் ஷேக் மற்றும் அவரது தங்கை ஃபாத்திமா ஷேக் இருவரும் ஜோதிராவின் நண்பர்கள். ஜோதிராவ், ஒதுக்கப்பட்ட பெண்களுக்கான பள்ளியைத் துவங்க இடமளித்தது உஸ்மான் ஷேக்தான். ஜோதிராவின் பள்ளியில் ஃபாத்திமா ஷேக்கும் ஒரு ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. 1851ம் ஆண்டில் பெண்களுக்காக மேலும் 3 பள்ளிகளைத் திறந்தார் ஜோதிராவ். 1852ம் ஆண்டு, அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று கருதப்பட்ட மகர், மாங் சாதிகளை சார்ந்த மக்களுக்கென ஒரு பள்ளியைத் திறந்தார். ஜோதிராவின் கல்விப்பணி மேல்தட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஜோதிராவின் தந்தை கோவிந்த்ராவை மிரட்டினார்கள். கோவிந்த்ராவ் எவ்வளவோ சொல்லியும் ஜோதிராவும் அவர் மனைவியும் கல்விப்பணியில் இருந்து பின்வாங்க ஆயத்தமாக இல்லை. அதனால் அவர்கள் இருவரையும் வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறிவிட்டார் கோவிந்த்ராவ். வீட்டைவிட்டு வெளியேறிய பின்னும் அவர்கள் கல்விப்பணி தொடர்ந்தது. அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒட்டுமொத்தமாக 18 பள்ளிகளை நடத்தியிருக்கிறார்கள் என்பது வரலாறு.
அக்காலத்தில் பெண்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டனர். சிறுவயதில் கணவனை இழக்க நேரிட்டால் அந்த பெண் வாழ்நாள் முழுவதும் விதவையாகவே வாழவேண்டும். மேலும், கணவன் இறந்தபின், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் ஆதரவளிக்க அந்த பெண்களின் தாய் தந்தையர் கூட ஆயத்தமாக இல்லை. 1863ம் ஆண்டு ஜோதிராவ், விதவைப்பெண்களுக்கும் , கணவனை இழந்து கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஒரு அனாதை இல்லத்தைத் துவங்கி நடத்தினார். இதனால் விதவைப்பெண்கள் தற்கொலை மற்றும் சிசுக்கொலைகள் தடுக்கப்பட்டன. குடும்பத்தால் கைவிடப்பட்ட ஒரு பிராமண விதவைப் பெண்ணின் குழந்தையைத் தத்தெடுத்துதான் ஜோதிராவ், சாவித்ரிபாய் தம்பதிகள் வளர்த்தனர். யஸ்வந்த்ராவ் என்ற அந்த குழந்தை பின்னாளில் மருத்துவராக விளங்கினான்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதே பாவம் என்று கருதிய காலம் அது. அந்நாட்களில், ஜோதிராவ் தன் வீட்டிலிருக்கும் கிணற்றில் நீர் எடுத்துக்கொள்ளும்படி தாழ்த்தப்பட்ட மக்களைக் கேட்டுக்கொண்டார். புரோகிதர் இல்லாமல் திருமணம் என்பது இன்றைய காலத்தில் கூட கடினமான ஒன்று, அதனை அன்றே நிகழ்த்திக்காட்டியவர் ஜோதிராவ். புரோகிதர் இல்லாமல் கூட சில திருமணங்கள் நடக்கும், ஆனால் வரதட்சணை இல்லாமல் திருமணங்கள் சாத்தியமில்லை. ஆனால் அதையும் அப்போதே சாதித்துக்காட்டியவர் பூலே. அதுமட்டுமல்லாமல், சாதி மறுப்புத் திருமணங்களும் செய்து வைத்தார். பின்னாளில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஜோதிராவ் பூலே அவர்களைத்தான் தனது முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்:-

ஜோதிராவுக்கும், சாவித்ரிபாய்க்கும் திருமணம் ஆனபோது சாவித்ரிபாய் கல்வி கற்றவரில்லை. ஜோதிராவ்தான், சாவித்ரிபாய்க்கு எழுத்தறிவித்தவர். பின்னர் அவர் ஆசிரியர் பயிற்சி வரை சென்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்று போற்றுமளவுக்கு உயர்ந்தார். ஜோதிராவின் கல்விப்பணிகளுக்கும், சமுதாயப்பணிகளுக்கும் கடைசிவரை அயராத பங்களிப்பை அளித்த பெருமை அவர் மனைவி சாவித்ரிபாயை சேரும். இன்று நாம், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்று புகழ்ந்தாலும் அன்று இகழ்ச்சியைத் தவிர வேறொன்றும் பரிசாகக் கிடைக்கவில்லை அவருக்கு.

சாவித்ரிபாய் தனது பள்ளிக்கு செல்லும்போது, தான் அணிந்திருக்கும் புடவை போக இன்னொரு புடவையைக் கைவசம் வைத்திருப்பார். காரணம் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் முன் அவர் புடவை மேல் சாணி, மண் போன்றவை நிறைந்திருக்கும். உண்மைதான். அவர் பள்ளிக்கு செல்லும் வழியில் மேல் சாதி என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கீழ்த்தரமானவர்கள் சாவித்ரிபாய் மீது சாணியையும், மண்ணையும் வாரி வீசுவார்கள். பல நேரங்களில் கல்லடியும் உண்டு. எப்போதும் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்ப்பார்கள். இவர்கள் வாரி இறைக்கும் சாணியோடும், மண்ணோடும் பாடமெடுக்க முடியாதல்லவா, அதனால் கைவசம் இன்னொரு புடவை வைத்துக்கொள்வார். பள்ளிக்கு சென்றதும் வேறு புடவையை மாற்றிக்கொண்டு பாடமெடுக்கத் துவங்குவார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருதாக சாணியும், மண்ணும், கல்லும்தான் கிடைத்தன.
1890ல் கணவர் ஜோதிராவ் இறந்தபின்னும் சாவித்ரிபாயின் சமூகசேவை தொடர்ந்தது. அக்காலத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவி மொட்டையடித்துக்கொள்ள வேண்டும். சாவித்ரிபாய், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடிக்கக் கூடாதென்று போராட்டம் நடத்தியிருக்கிறார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சாவித்ரிபாயும், அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஸ்வந்த்ராவும் நோயாளிகள் பலருக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்தனர். இதில் சாவித்ரிபாயும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இறக்கும் தருவாய் வரை சமூக சேவையிலே அவர் காலம் கழிந்தது.

இரு மகாத்மாக்கள்:-

தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட மக்களின் நிழல்கூட தங்கள் மேல் விழுந்தால் தீட்டு என்று சாதிவெறி பிடித்த ஆதிக்க சாதிகளுக்கு மத்தியில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியளிக்க வேண்டும் எண்ணிய ஜோதிராவ் பூலே நிச்சயம் மகாத்மாதான். ஆதிக்க சாதிகளை எதிர்த்துப் போரிடுவது என்பது இன்றே எவ்வளவு கடினம் என்பதை நம்மால் உணர முடியும், ஆனால் அதை அன்றே சாத்திமாக்கியவர் பூலே. தனக்கு நேர்ந்த அவமானம் இன்னொருவருக்கு நடக்கக்கூடாது என்ற அந்த வைராக்கியம்தான் அவரை மகாத்மா என்று போற்றுமளவுக்கு உயர்த்தியது.

உயர்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட சாதியில் பிறந்த பெண்களுக்குக் கூட கல்வி மறுக்கப்பட்டக் காலம் அது. ஆனால் அன்று தாழ்த்தப்பட்டப் பெண்களின் கல்வி ஜோதிராவ் மற்றும் அவர் மனைவி சாவித்ரிபாய் மூலம் சாத்தியமானது. விதவைகள் மறுவாழ்வு, விதவைகள் மறுமணம், சாதிமறுப்புத் திருமணம் என்று ஜோதிராவ் மற்றும் அவர் மனைவி சாவித்ரிபாய் செய்த சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட செயல்கள் கணக்கிலடங்காது. வித்தல்ராவ் கிருஷ்ணாஜி வன்டேகர் (Vithalrao Krishnaji Vandekar) அவர்கள் 1888ம் ஆண்டு மே மாதம் 11ம் நாள் நடந்த ஒரு கூட்டத்தில் ஜோதிராவ் பூலே அவர்களை மகாத்மா என்று முதலில் அழைத்தார். மகாத்மா காந்திக்கு முந்தைய மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்கள். வித்தல்ராவ், ஜோதிராவ் பூலேவுக்கு மட்டும் மகாத்மா பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தினார். நம்மைப் பொறுத்தவரை ஜோதிராவ் பூலே மற்றும் அவர் மனைவி சாவித்ரிபாய் பூலே இருவருமே மகாத்மாக்கள்தான்.

நன்றி :

இன்றைய குறள்

இன்று சில தகவல்கள்

சிரித்து வாழவேண்டும்!

ஆன்மீக சிந்தனை

திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

இயற்கையின் அழகை ரசிப்போம்!


நன்றி :

இந்த நாள் இனிய நாள்!

28 நவ., 2020

இனிய இரவு வணக்கம்

அமைதியான,  ஆழ்ந்த நித்திரை அமையட்டும்! 

நாளை நல்ல,  இனிய செய்திகளுடன் சந்திப்போம்!! 

பக்திப் பாமாலை : உருக வைக்கும் தேவார பாடல் - சிவன் பாடல்

 


உருக வைக்கும் தேவார பாடல் - சிவன் பாடல்

Thevaram Song/shivanSong/தேவாரம் பாடல்/thevaram song in tamil/

296,510 views•Feb 2, 2020

ANNIYAN TV

6.62K subscribers

 

#shivasong #ThevaramSong  #தேவாரம்பாடல் #ThevaramSongsinTamil

#Thevarampadalkal

#ThillaivaazhSong

#Thillaivaalthevaramsong

#TamilThevaramsong

 

தில்லைவாழ் தேவார இசை பாடல்

நம்மை கரைய வைக்கும் தேவார இசை பாடல், தமிழர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு இப்பாடலை சொல்லி கொடுங்கள் ,8 நிமிட பாடலில் 63 நாயன்மார்களின் பெயர்களையும் ,அவர்களின் குணங்களையும் எளிமையாக சொல்லும் இந்த பாடல் மனதை கரைக்கிறது ,பாடலை கடைசி வரை கேளுங்கள் ,63 நாயன்மார்கள் பெயர்களும் அழகு பெற இடம்பெறுகிறது

 

Grateful thanks to ANNIYAN TV and YouTube and all the others who made this video possible


பக்தி மஞ்சரி : கந்தபுராணம் பகுதி-1 சுகி சிவம்


கந்தபுராணம் பகுதி-1 சுகி சிவம்

KANTHA PURANAM PART -1 SUKI SIVAM

48,148 views•Jul 8, 2020

SUKI SIVAM EXPRESSIONS

 

*பலித்தது தவம் கிடைத்தது சிவம்

*நீரில் பூத்த நெருப்பு

*தூது பலித்ததா?

*ஒரு குரு சீடர் ஆகிறார்

*வள்ளிக்கு வாய்த்த வள்ளல்

https://www.youtube.com/playlist?list...

#sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019 # kanthapuranam #sukisivamspeech #சுகிசிவம்

 

Grateful thanks to சுகி சிவம், SUKI SIVAM EXPRESSIONS and YouTube and all the others who made this video possible