8 செப்., 2021

நூல் நயம் : கணிதத்தின் கதை

RM170
#நான்காம்_ஆண்டு_வாசிப்பு_திருவிழா
 வரலாறு
(இரண்டாம் வாரம்)
புத்தகம் :கணிதத்தின் கதை
ஆசிரியர் :ஆயிஷா இரா நடராசன்

நான் கணிதத்தின் காதலி. பள்ளியில் பிடிக்காத பாடமாக இருந்த கணிதம் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மிகவும் பிடித்து போனது.அடிக்கடி கணிதத்தை எண்ணி வியந்து கொள்வேன். ஏனெனில் கணிதத்தின் முடிவுகள் ஒரு போதும் தவறாக போவதில்லை. மற்ற துறைகளில் இன்று கண்டுபிடித்தது நாளை மாறி  போக வாய்ப்புள்ளது. ஆனால் கணிதத்தின் முடிவுகள் நிலையானவை.அப்படிப்பட்ட கணிதத்திற்கு வரலாறா என விரும்பி படித்த புத்தகம் இது.

ஆதிகாலத்தில் குறைவான எண்களே இருந்தன. ஏனெனில் அப்போதைய மனிதர்களிடம் குறைவான பொருட்களே இருந்ததாகவும் சொல்லும் வரலாறை பார்க்கும் போது இன்று முடிவிலா எண் தொடர் ஏன் உருவானது என மனிதர்களாகிய நாமே அறிவோம்.

எண்களின் ராஜாக்கள் இந்தியர்கள், சூரியன் கிரகண தேதியை சரியாக கணித்த தாலஸ், எண்களை கடவுளாக எண்ணி பூஜித் த கணித மேதை பித்தாகரஸ், எகிப்திய பிரமிடுகளின் உயர்த்த துல்லியமாக அளக்க கருவிகள் இல்லாத போது 10 நாட்களில் அதற்கான விடையை கண்ட யூக்ளிட், தனது கல்லறையில் ஒரு கோளமும், உருளையும் வரைய சொன்ன தத்துவ மேதை ஆர்கிமிடீஸ், மனித வரலாற்றின் முதல் இயற்கணித கணக்கு,இயற்கைணிதத்தை முதலில் பயன்படுத்திய கிரேக்கர்கள், சமன்பாட்டின் நிரூபணத்தை விற்கததால் சகோதரியால் விஷம் வைத்து கொல்லப்பட்ட லோடுவிகோ பெராரி, விலை கொடுத்து வாங்கிய பிரிசம் கண்ணாடியை கொண்டு நிறப்பிரிகையை கண்டுபிடித்த நியூட்டன், நியூட்டனுக்கும், லிப்னிட்ஸ்க்கும் இடையே நிகழ்ந்த கணிதப் போர், நிகழ் தகவு 
கோட்பாடு கண்டுபிடிப்புக்கு காரணமாக அமைந்த ரயில் பயணம் என பல ஸ்வாரஷ்யமான தகவல்கள் புத்தகத்தில் உள்ளன.

எண்களின் ராஜாக்கள் யார் என துவங்கும் புத்தகம் கணித மேதை இராமானுஜரின் கணித வரலாற்றோடு நிறைவு பெறுகிறது.

உண்மையில் கணிதம் களிப்பு மிக்க பாடம். அதை கற்பிக்கும் முறைகளே ஐயோ கணிதமா என நம்மில் பலரை வெறுக்க செய்தது.

எதற்காக கணிதம் படிக்க வேண்டும்.
கணிதத்தின் எந்தெந்த பகுதிகள் வாழ்வில் எப்படி உபயோகமாகின்றன என கூடுதல் தகவல்களையும் ஆசிரியர் தந்துள்ளார்.

கணிதம் கற்பிக்கும் போது இது போன்ற கூடுதல் தகவல்களை 
மாணவர்களுக்கு தருவது கணிதத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: