4 நவ., 2014

எனக்குப் பிடித்த இணையதளம்-1: தினமலர் ஆன்மிக இணையதளம்



எனக்குப் பிடித்த இணையதளம்:

பிரமிக்க வைக்கும் அற்புதமான இணையதளம்.  இதை வழங்குவது தினமலர் நாளிதழ்.

மனதிற்கு நிம்மதி தரும் ஆன்மிக இணையதளம் என்று அவர்கள் சொல்வதில் நிறைய உண்மை இருக்கிறது.  இந்த தளத்திற்குள் வெளியே வருவது மிகச் சிரம்ம். அந்த அளவுக்கு ஈர்ப்பாற்றல் கொண்ட்து.  ஒருமுறை சென்றுதான் பாருங்களேன்!

தினமலர் நாளிதழுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
www.temple.dinamalar.com


          38,000 தமிழக கோவில்களின் முகவரிகள்
          3000 கோவில்களின் அபூர்வமான தகவல்கள்
          பகவத் கீதை
          புராணங்கள்
          200க்கும் மேற்பட்ட மகான்களின் வரலாறு
          300 கோணத்தில் கோவில்கள்
          அனைத்து மாவட்ட ஆன்மிக செய்திகள்
          பன்னிரு திருமுறைகள்
          கோவில்களின் வீடியோ
          பஞ்சாங்கம்
          2000 மந்திரங்கள்
          200 வருட காலண்டர்
          வழிபாட்டு முறைகள்

பாரதி கவிதைகள்-23: அச்சமில்லை அச்சமில்லை



அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

திருமந்திரம்-17: ஐந்து கரத்தனை யானை முகத்தனை...



ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

எனக்குப் பிடித்த கவிதை-76: வலை - பிரமிள்



வலை - பிரமிள்



மாலைக் கதிர் வாள் வெட்டு
பரிதிப் புறாத் துடிப்பு
நெஞ்சின் பால் வெளiயில்
பாலைத் தகட்டுப்
படபடப்பு.
நடை தளர்ந்தது.
இது எல்லை?
ஊத்ந்த தொடர்ந்த நிழலின்
விரல் விளiம்பு.
எதிரே
நில விரிப்பு - வாழ்வு
வலை விரிப்பா? - வாழ்வா?
திரும்பிப் பார்த்தேன்.
தசைத்திரள் உருகி வழிந்து
தார் பாறையாக நீண்டு
வான் கடல் படுகைத்
தொடுவான் வரை கிடந்த
நிழலின் இழிப்பு.
கால் விரல் கண்ணியில்
நான்.