29 ஜூலை, 2026

ஆன்மீக சிந்தனை

இலக்கிய வட்டம்

இன்றைய புத்தகங்கள்

கோவை புத்தகக் காட்சி 2026 

காலச்சுவடு புதிய நூல்கள் வெளியீட்டு விழா
கோவை புத்தகக் கண்காட்சியில், காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக 5 புதிய நூல்கள் வெளியீடு காண்கின்றன! 

இலக்கிய ஆளுமைகளின் சிறப்பான பங்கேற்புடன் நடைபெறவுள்ள இவ்விழாவில், காலச்சுவடு அரங்கில் புதிய நூல்களை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்கள், எழுத்தாளர்கள், தமிழ் இலக்கிய நண்பர்கள் அனைவரும் வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்! 

இடம்: காலச்சுவடு அரங்கு (எண்: 369, 370, 371, 390, 391, 392) 

நாள்: இன்று, ஜூலை 25, 2026 (சனிக்கிழமை) 

நேரம்: மாலை 5:00 - 7:00 மணி வரை

அனைவரும் வருக!

@followers Kannan Sundaram Gopalakrishnan Murugesan Ramachandra Guha Theodore Baskaran Prem Kumar

26 ஜூலை, 2026

அறிவியலும் ஆன்மீகமும்: மரணத்திற்குப் பின் மனிதர் வாழ்க்கை


 அறிவியலும் ஆன்மீகமும் 

​மரணத்திற்குப் பின் வாழ்வு: குவாண்டம் இயற்பியலும் முடிவில்லா மெய்உணர்வும் சங்கமிக்கும் இடம்!

​நூற்றாண்டுகளாக மனிதகுலம் பேரண்டத்தின் விண்மீன்களைப் பார்த்துத் தொடர்ச்சியாகக் கேட்கும் மிக ஆழமான கேள்வி ஒன்று உண்டு: "நமது உடலின் இயக்கம் நிற்கும் போது, இந்த ஆன்மப் பயணம் என்னவாகிறது?"

​வரலாற்றுரீதியாக, அறிவியலும் ஆன்மீகமும் இக்கேள்வியை இரு வேறு கோணங்களில் அணுகின. அறிவியல் பருப்பொருளான உடலைக் கவனித்தது; ஆன்மீகம் அழியாத ஆன்மாவைக் கவனித்தது. ஆனால் இன்று, நவீன இயற்பியல், நரம்பியல் மற்றும் தத்துவத்தின் உச்சக்கட்டத்தில், இவ்விரு சிந்தனை வழிகளும் இணைந்து ஒரு நம்பிக்கையூட்டும் உண்மையை உணர்த்துகின்றன: வாழ்க்கை என்பது அதன் ஆழமான தளத்தில் என்றும் அழியாத ஆற்றலின் மற்றும் உணர்வின் தொடர்ச்சியான ஓட்டமே!

​அறிவியல் கோணம்: ஆற்றல், தகவல் மற்றும் குவாண்டம் உண்மை

​இயற்கையில் எதுவும் வீணாகப் போவதில்லை; எதுவும் வெறுமையிலிருந்து தோன்றுவதுமில்லை, வெறுமையில் மறைந்துவிடுவதுமில்லை என்பதை அறிவியல் நமக்குக் கற்பிக்கிறது.

  • ஆற்றல் அழியாமை விதி (Law of Conservation of Energy): இயற்பியலின் அடிப்படை விதிப்படி, ஆற்றலை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது; அதை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்ற மட்டுமே முடியும். மனித உடலை இயக்கும் உயிரியல்-மின் ஆற்றலும் வெப்பமும் மரணத்தின் போது மறைந்துவிடுவதில்லை—அவை பேரண்டத்தின் பரந்த சூழலில் மீண்டும் கலக்கின்றன.
  • குவாண்டம் தளத்தில் விழிப்புணர்வு: மூளையின் வேதியியல் மாற்றங்களால் மட்டுமே விழிப்புணர்வு (Consciousness) ஏற்படுவதில்லை என்று நவீன குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகள் கூறுகின்றன. காலம், வெளி (Space), ஈர்ப்பு விசை போல விழிப்புணர்வும் இந்த அகிலத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று. நமது மனம் இந்த பேரண்டக் குவாண்டம் களத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், உடலின் மரணம் என்பது பெருங்கடலில் மீண்டும் கலக்கும் சிறு அலையைப் போன்றதே!
  • மரணத்தின் விளிம்பு அனுபவங்கள் (Near-Death Experiences - NDEs): உலகம் முழுவதும் மருத்துவ நிறுவனங்களால் நடத்தப்பட்ட ஆய்வுகளில், மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டவர்கள் பொதுவான சில அனுபவங்களை வெளிப்படுத்துகின்றனர். அமைதி, எல்லையற்ற அன்பு, பேரொளி மற்றும் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களுடனும் உள்ள பிணைப்பை அவர்கள் உணர்ந்ததாகக் கூறுகின்றனர்.

​ஆன்மீகக் கோணம்: காலத்தைக் கடந்த பயணி

​அறிவியல் ஆற்றலையும் குவாண்டம் தளத்தையும் விளக்கும் வேளையில், ஆன்மீகம் அதற்கு அன்பையும் ஆழமான அர்த்தத்தையும் அளிக்கிறது.

  • ஒரு தொடக்கம், முடிவல்ல: புழு உருமாறி வண்ணத்துப்பூச்சியாவதைப் போல, ஆன்மீக மரபுகள் உடலின் விடைபெறுதலை ஆன்மாவின் விரிவிற்கான ஒரு நிலையாகவே பார்க்கின்றன.
  • பேரன்பும் பேரொளியும்: பேரண்டத்தின் அடிப்படையே அன்பு, ஒளி மற்றும் அறிவால் நெய்யப்பட்டது என்பதை அனைத்து ஆன்மீகப் பாதைகளும் வலியுறுத்துகின்றன. உடலின் பயணத்திற்குப் பிந்தைய நிலை என்பது அந்தத் தூய, அமைதியான மூலத்திற்கே திரும்பும் ஒரு நிகழ்வு.
  • நன்மைகளின் தொடர்ச்சி: நமது விழிப்புணர்வு தொடர்கிறது என்பதை உணரும் போது, நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலும் உயரிய மதிப்பைப் பெறுகிறது. நாம் விதைக்கும் அன்பு, இரக்கம், அறிவு மற்றும் நற்செயல்கள் ஒருபோதும் வீணாவதில்லை; அவை பிரபஞ்சத்தில் என்றென்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

​அறிவியல் - ஆன்மீகம்: ஒத்திசைவான பேரொளி

​அறிவியலின் கண்டுபிடிப்புகளையும் ஆன்மீகத்தின் நுண்ணறிவையும் இணைத்துப் பார்க்கும் போது ஒரு மகத்தான உண்மை புலப்படுகிறது: ஆற்றல் அழியாதது என்று அறிவியல் கூறுகிறது; அன்பும் விழிப்புணர்வும் காலத்தைக் கடந்தது என்று ஆன்மீகம் உறுதிப்படுத்துகிறது.

​மரணத்திற்குப் பின் வாழ்வு என்பது பயணத்தின் முடிவல்ல—அது நமது இருப்பின் அடுத்த, ஒளிமயமான அத்தியாயத்தின் தொடக்கம். ஒவ்வொரு மூச்சையும் போற்றவும், பிறருக்கு அன்பைப் பரப்பவும், பேரண்டத்தின் பெருவடிவில் நாம் பாதுகாப்பாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்ற அமைதியோடு வாழவும் இது நம்மை ஊக்கப்படுத்துகிறது.

"பருப்பொருள் வடிவம் மாறலாம், ஆற்றல் உருமாறலாம்; ஆனால் நமக்குள் இருக்கும் தெய்வீகச் சுடர் என்றும் பிரகாசமாகவும், என்றென்றும் அமைதியாகவும் நிலைத்திருக்கும்."

கூகுள் ஜெமினைக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏

24 ஜூலை, 2026

இன்று ஒரு தகவல்

பயனுள்ள தகவல்கள்

இன்றைய சிந்தனைக்கு

வாழ்த்துக்கள்!

ஆன்மீக மஞ்சரி

அருள்வாக்கு

23 ஜூலை, 2026

இன்றைய புத்தகங்கள்

வாசகர் பரிந்துரை

காலச்சுவடு பதிப்பகத்தின் காலத்தால் அழியாத ‘6’  நாவல்கள்! 

”வாசித்து முடித்த பிறகும் நீண்ட காலம் மனதை விட்டு நீங்காத கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்ட நூல்கள் இவை.”

பட்டியலில் இடம்பிடித்துள்ள காலச்சுவடு வெளியீடான 6 முக்கிய நாவல்கள்:

  சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/sila-nerankalil-sila-manitharkal_113/ 

மின் நூலைப்பெற:

https://books.kalachuvadu.com/catalogue/SilaNerankalilSilaManitharkal_1650/ 

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B0H2VNCPZ4 

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B08RW8WXCK/ 

 மோக முள் - தி. ஜானகிராமன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/mohamul_29/ 

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07NL7YRQY

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Z4Z5HC7/ 

 மாதொருபாகன் - பெருமாள் முருகன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/maathorubagan_54/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07PGPT1P3

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y661Q3Z

 கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/gopalla-gramam_61/

மின் நூலைப்பெற:

https://books.kalachuvadu.com/catalogue/gopalla-gramam_1364/

அமேசானில் வாங்க:
 
https://www.amazon.in/dp/B0BSBX7J4T

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y64WLWH/ 

 மரப்பசு - தி. ஜானகிராமன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/marappasu_159/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07PY7P5Y1

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y66MGV8/ 

 18-வது அட்சக்கோடு – அசோகமித்திரன்
நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/18vathu-atchakkodu_115/ 

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07NL7XKZX  

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y65RBCR 

நன்றி: பாரதி (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

முழுப்பதிவையும் வாசிக்க:

https://www.instagram.com/reels/Daaiwddhsqa/

ஆன்மீக மஞ்சரி

இன்று ஒரு தகவல்

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

20 ஜூலை, 2026

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

இன்று ஒரு தகவல்

ஆன்மீக சிந்தனை

அருள்வாக்கு

மேன்மக்கள்

*சுவாமி விபுலானந்தர்*
(நினைவு தினம் ஜூலை 19, காலமான ஆண்டு 1947.)
.....................................................
  1892 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழறிஞர் விபுலானந்தர். இயற்பெயர் மயில்வாகனம், பல்துறை சார்ந்த பேரறிஞர். கவிஞர். விஞ்ஞானப் பட்டதாரி. 

   பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியர். ஆராய்ச்சியாளர். மொழிபெயர்ப்பாளர். துறவி.
  
   அடிகளார் 1931இல் தமிழ் நாடு வந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். 

  பின் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியரானார். 
  
  1922 இல் சென்னை ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு ராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமம் பெற்றார். 

   அங்கு "ராமகிருஷ்ண விஜயம்" என்ற தமிழ் இதழுக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில இதழுக்கும் ஆசிரியராக இருந்தார். "செந்தமிழ்" என்னும் பத்திரிகையிலும் கட்டுரைகள் எழுதினார். 

    ஆசிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலானந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தர். 
  
   அதன் பின் இலங்கை திரும்பினார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். 

   மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்யாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைத் தீவு சாரதா வித்யாலயம் என்பன அவர் நிறுவியவையே. 
  
   தலைநகர் கொழும்பில் தமிழ்ப் பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்யாலயத்தைத் தொடங்கினார். 

  அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் ராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார். விபுலானந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார்.
  
   சாதி, மத, மொழி, இன ஏற்றத் தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். 
   
   1924இல் மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் "நாடகத் தமிழ்" என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்ச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி. சீனிவாஸ ஐயங்க¡ரின் வேண்டுகோளுக்கிணங்க "மதங்க சூளாமணி" என்ற நூலை எழுதினார்.

     இவர் எழுதிய நூல்களில் யாழ் நூல் மிகவும் புகழ்பெற்றது. 1937இல் இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆசிரமத்தில் தங்கினார். 

   அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கில இதழுக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

  கனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனார் (க.தா. செல்வராசகோபால்) என்ற கவிஞர் 1983இல் விபுலானந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் "விபுலானந்தர் பிள்ளைத் தமிழ்" என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருக்கிறார். 
 
   சிவானந்த வித்யாலய முகப்பில் உள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட பின்வரும் கவிதை வரிகள் பொறிக்கப் பட்டுள்ளன:

  "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
   வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
   வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
   உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

.....................................................
திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏🙏🙏

15 ஜூலை, 2026

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

பெருந்தலைவர் நினைவஞ்சலி 🙏🙏🙏

ஜூலை 15: காமராஜ் பிறந்த தினம்.
.............................................
*பெருந்தலைவரும் நானும்....*
*திருப்பூர் கிருஷ்ணன்.*
..............................................
 *பெருந்தலைவர் காமராஜரை நான் முதன்முதலில் பார்த்தது, திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நான் தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்.... 

  தேர்தல் பிரசாரத்திற்காக, திருப்பூருக்கு காமராஜ் வருகை புரிந்தார். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே கிருஷ்ணன் கோயிலை ஒட்டியிருந்த மைதானத்தில் பொதுக்கூட்டம். 

  கூட்டம் தொடங்கிவிட்டது. `பெருந்தலைவர் வந்துகொண்டிருக்கிறார்!` என்ற அறிவிப்பு மட்டும் அடிக்கடி ஒலிபெருக்கியில் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. 

  அப்போது காமராஜ் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தவர் மிகச் சிறந்த பேச்சாளரான குமரி அனந்தன். 

   (ஏற்கெனவே முன்னொரு முறை கல்லூரி முத்தமிழ் மன்றத்திற்காக குமரி அனந்தனைப் பேசக் கூப்பிட்டிருந்தோம்.  திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி அரங்கிற்குக் `குமரன் கூடம்` என்று பெயர். `குமரன் கூடத்தில் இந்தக் குமரி பேசுவது பொருத்தம்தானே?` என்று பேச ஆரம்பித்து மாணவர்களைக் கவர்ந்தவர் அவர்.) 

  அவர் பேசப் பேச காமராஜ் மேடைக்கு வந்துசேர்ந்தார்.  

  `ஏழைகளின் இல்லம் நோக்கி நடக்கும் கால்கள் எவருடைய கால்கள்? அவை பெருந்தலைவரின் கால்கள். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் கைகள் எவருடைய கைகள்? அவை பெருந்தலைவரின் கைகள்!` என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் குமரி அனந்தன் பேசிக் கொண்டிருந்தார். 

  அப்போது, அந்தப் புகழ்ச்சியை விரும்பாத பெருந்தலைவரிடமிருந்து `போதும்ணேன்!` என்று ஒரு குரல் வந்தது. அடுத்த கணம் சடக்கென்று தன் பேச்சை முடித்துக் கொண்டு குமரி அனந்தன் உட்கார்ந்துவிட்டார். 

  தன் புகழ்ச்சியை விரும்பாத காமராஜையும் இன்றைக்கு ஆள்வைத்துத் தங்களைப் புகழ்ந்துகொள்ளும் சில தலைவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், மனத்தில் கடந்த பொற்காலத்தை எண்ணி ஏக்கப் பெருமூச்சு எழுகிறது. 

   காமராஜ் பேச எழுந்தார். நல்ல உயரம். கறுப்பு நிறம். விழிகளில் ஓர் இனந்தெரியாத ஒளி. முழங்கால் வரை நீண்ட கரங்கள். கிராமியப் பேச்சு. 

  `ஸ்தாபன காங்கிரசுக்கு வாக்களியுங்கள்!` என்று அவர் ஒருபோதும் கேட்கவில்லை. 

   `இந்தக் கட்சியின் அறிக்கை இவற்றையெல்லாம் வாக்குறுதியாகத் தருகிறது. எதிர்க்கட்சிகளும் வேறு சிலவற்றைச் சொல்கின்றன. மக்கள் சீர்தூக்கிப் பார்த்து நல்ல கட்சி என்று தோன்றும் கட்சிக்கு அவரவர் மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்!` இப்படித்தான் அவர் பேசினார். 

  அடுக்குமொழி இல்லை. ஆரவாரம் இல்லை. நகைச்சுவை இல்லை. இலக்கணத் தமிழைக் கூடப் பயன்படுத்தவில்லை. ஆனால் நெஞ்சைத் தொடும் பனியன்களைத் தயாரிக்கும் திருப்பூர் நகர மக்களின் நெஞ்சைத் தொட்ட பேச்சு அது. 

   காரணம் அவர் பேச்சில் சத்தியம் இருந்தது. `நான் உங்களில் ஒருவன்` என்கிற தொனி இருந்தது. உதட்டிலிருந்து பேசாமல் உள்ளத்திலிருந்து பேசினார் அவர். அன்றுமுதல் நான் காமராஜின் தீவிர ரசிகனானேன். 

   (சிறிதுகாலம் முன்னர் சென்னையில் என் இல்லத்திற்குக் குமரி அனந்தன் வருகை தந்தபோது அவரிடம் இந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தினேன். காமராஜ் பற்றிய தூய நினைவுகளில் தோய்ந்த குமரி அனந்தன் உண்மையிலேயே விம்மி விம்மி அழலானார். 

   என் மனைவி தானும் கலங்கியவாறே அவரை மோர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறியது அண்மைக்காலச் சம்பவம்.).....
  
  *திருப்பூரில் தாயம்மாள் என்ற சகோதரி, ஸ்தாபன காங்கிரஸ் தலைவியாக இருந்தார். அவர் கல்லூரி மாணவர்களுக்காக காமராஜ் பிறந்த தினத்தை ஒட்டி `தேச பக்தி` என்ற தலைப்பில் ஒரு கவிதைப் போட்டி நடத்தினார்.   

  நான் அந்தப் போட்டியில் கலந்துகொண்டு என் கவிதைக்காக முதல் பரிசு பெற்றேன். வாணிஜெயராம் பாடிய காமராஜ் குறித்த பாடல்கள் அடங்கிய இசைத் தட்டுத் தான் பரிசு. 

  (அந்த இசைத்தட்டில் ஒலித்த `இருக்க இடமும் வரும் எல்லோருக்கும் வாழ்வு வரும்! காமராஜ் ஆளவந்தால் கட்டாயம் வாழ்வு வரும்! காலம் வரும் கண்ணே! நீ கண்துயில்வாய் முன்னே!` என்ற தாலாட்டுப் பாடல் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தது.) 

  அப்படி நான் பரிசுபெற்றதில் என் தாயாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. காரணம் காமராஜ் என் குடும்பத்தினர் அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்தார். சுதந்திரப் போராட்டச் சிந்தனைகளைத் தாங்கிய குடும்பம் என் குடும்பம். 

  கதர் மட்டுமே கட்டியவர்களும் கட்டுபவர்களும் என் குடும்பத்தில் பலர் உண்டு. என் தந்தை பி.எஸ். சுப்பிரமணியம், கோழிக்கோட்டில் இருந்தபோது, காந்தி அங்கு வருகை தந்து வழங்கிய ஆங்கில உரையை காந்தி பேசப் பேச மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்....

  *நான் சென்னை வந்ததும், பெருந்தலைவரின் அணியில் பேச்சாளராக இயங்கிக் கொண்டிருந்த தீபம் நா. பார்த்தசாரதியின் சீடனாக தீபத்திலேயே பணிக்குச் சேர்ந்ததும் என் வாழ்வில் பின்னர் நடந்தவை.  

  நா.பா. அந்தக் காலகட்டத்தில் கல்கியில் `சத்திய வெள்ளம்` என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினார். அதில் பெருந்தலைவர் காமராஜே `ராமராஜ்` என்ற தலைப்பில் ஒரு பாத்திரமாக வருவார். 

   கல்லூரிப் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட முற்றிலும் அரசியல் சார்ந்த ஒரு துணிச்சலான நாவல் அது. காமராஜின் பெருமையைப் பேசும் நாவல். 

  காமராஜ் அணியில் இணைந்து ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர்களாக நா.பா., ஜெயகாந்தன், சோ, கண்ணதாசன் போன்றோரெல்லாம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது. 

 ஒருமுறை காமராஜைப் பார்க்க நா.பா. சென்றபோது நானும் உடன்சென்றேன். `தம்பியும் எழுத்தாளரா?` என்று நா.பா.விடம் கேட்டார் காமராஜ். `ஆமாம், தீபத்தில்தான் பணிபுரிகிறார்` என்றார் நா.பா.  

  `தம்பீ. இவரு மாதிரி நாட்டுக்கு நல்லது செய்யற சங்கதிகளைத்தான் எழுதணும். தெரியுதா?` 

  காமராஜுக்கு மிக அருகில் நான் அமர்ந்திருந்தேன். அன்பு மயமாக என் கரங்களைப் பற்றிக் கொண்டு ஒளிவீசும் விழிகளால் கூர்மையாக என்னைப் பார்த்தவாறு இதைச் சொன்னார் அவர். 

   நயன தீட்சையும் ஸ்பரிச தீட்சையும் ஒருங்கே நடந்த மாதிரி எனக்கு இனந்தெரியாத பரவசம். 

  ஆன்மீகத் துறவிகள்தான் துறவிகளா! தேசத்திற்காக சகலத்தையும் துறந்த இவர் தேசத் துறவி அல்லவோ! சொந்தத் தாய்க்குக் கூடத் தன் அரசியல் அந்தஸ்து காரணமாக ஒரு சலுகையும் காட்டாத மாமனிதர். சொத்தே சேர்க்காத அரசியல்வாதி.... 

  *நா.பா. விறுவிறுவென்று அரசியல் பேச்சுத் துறையில் பெரும்புகழ் பெற்றுக் கொண்டிருந்தார். ஸ்தாபன காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளராக மாறினார். தொடர்ந்து வெளியூர்க் கூட்டங்கள். ஒருமுறை என்னிடம் அந்தரங்கமாகப் பேசும்போது நா.பா. சொன்னார்:

  `என்னுடைய பொருளாதாரப் பிரச்னைகள் பிறர் அதிகம் அறியாதவை. ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பம். நான் ஒருவன்தான் சம்பாதிக்கும் நபர். அரசியல் மேடைகளில் பேசுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஓரளவு பிரச்னையை சமாளிக்க உதவுகிறது. 

  என்றாலும் தீபம் இதழுக்கும் அளவு கடந்து செலவாகிறது. என்ன செய்வது! அரசியல் பேச்சுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக சன்மானம் கிடைத்தால் நன்றாயிருக்கும். ஆனால் பெருந்தலைவரிடம் இதை நேரில் எப்படிச் சொல்வது?`

 நான் தயக்கத்தோடு என் ஆலோசனையைச் சொன்னேன்:

 `பெருந்தலைவருக்கும் உங்களுக்கும் ஒருசேர நெருக்கமான ஒரு நண்பர் மூலமாக இந்த விஷயத்தை அவர் காதுக்கு எட்டச் செய்யலாமே?`

  அதுவும் சரிதான் என்ற நா.பா., `காதல் தூங்குகிறது` நாவலை எழுதிய எழுத்தாளரும் காமராஜுக்கு நெருக்கமானவருமான கு. ராஜவேலுவிடம் சென்று தன் வேண்டுகோளைச் சொன்னார். 

  சில நாட்களில் நா.பா.வின் பேச்சுக்கான தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்ட நா.பா. மகிழ்ச்சியிலும் மனநிறைவிலும் ஆழ்ந்தார். 

  பின்னொரு சந்தர்ப்பத்தில் எனக்கும் நன்கு அறிமுகமான கு. ராஜவேலுவை நான் தனியே சந்தித்தபோது ராஜவேலு என்னிடம் சொன்னார்:

  ``நா.பா.வின் பொருளாதாரப் பிரச்னையையும் தீபம் இதழின் சிரமங்களையும் பெருந்தலைவரிடம் சொன்னேன். உடனே நா.பா.வின் மேடைப் பேச்சுக்கு எவ்வளவு தொகை கொடுக்கிறார்கள் என்று உதவியாளரை அழைத்து விசாரித்தார். 

 `என்னய்யா, இவ்வளவு குறைவான தொகையா? நமக்காக மேடைல பேசறவங்களுக்குக் குழந்தை குட்டி எல்லாம் இல்லையா? அந்தக் குழந்தைகளுக்குப் படிப்புச் செலவு இல்லையா? உடனே அந்தத் தொகையை இரண்டு மடங்கு ஆக்குங்கள்!` என்று உத்தரவு போட்டார். 

  உதவியாளர் `அப்படியானால் அவருக்கு இணையான மற்ற பேச்சாளர்களுக்கும் உயர்த்த வேண்டியிருக்கும்` என்று சொல்லித் தயங்கினார். 

  `எல்லோருக்குமே உயர்த்துங்கள். எல்லோரும் குடும்பம் உடையவர்கள் இல்லையா? என்னை மாதிரித் தனிக்கட்டையா என்ன? அப்படி நமக்காக உழைப்பவர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் கட்சி எதற்கு?` என்று சத்தம் போட்டார் காமராஜ்!`

  இதைச் சொல்லிவிட்டு ராஜவேலு நெகிழ்ந்தபோது என் கண்களும் பனித்தன. திருமணமே செய்துகொள்ளாத ஒருவர், குடும்பஸ்தர்களின் சிரமங்களை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என எண்ணி நான் வியந்தேன்...... 

   *மறக்க முடியாத அந்த அக்டோபர் இரண்டாம் தேதிக்குச் சில நாட்கள் முன்பு என் தாயாரைக் காணச் சென்னையிலிருந்து திருப்பூர் சென்றேன். 

  ஏதோ ஒரு பொருளை அலமாரியிலிருந்து எடுத்தேன். அப்போது, என் அம்மா பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டிருந்ததும் காமராஜ் பிறந்த நாள் கவிதைப் போட்டியில் எனக்குப் பரிசாகக் கிடைத்ததுமான அந்த வாணிஜெயராம் பாடிய இசைத்தட்டு தற்செயலாகக் கீழே விழுந்து இரண்டாக உடைந்துவிட்டது. 

  ஓடி வந்த என் தாயார் திடீரென அளவற்ற சோகத்தில் ஆழ்ந்தார். `அதே இசைத்தட்டு வேறு ஒன்று வாங்கிக் கொள்ளலாம்! இது உடைந்ததைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்!` என்று என் அம்மாவிடம் ஆறுதல் சொன்னேன். 

  ஆனால் சகுனங்களில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த என் அம்மாவை என்னால் சரிவர ஆறுதல் படுத்த இயலவில்லை. உடைந்தது இசைத்தட்டு மட்டுமல்ல, என் அம்மாவின் மனமும்தான்.

  `இது ஏதோ கெட்டது நடக்கப்போவதன் முன்கூட்டிய சூசகம்` என்று சொல்லிக் கவலையில் ஆழ்ந்தார் அவர். 

  அந்தக் கெட்டது நடந்தே விட்டது. பெருந்தலைவர் காலமான விவரமும் `விளக்கை அணைத்துவிடு!` என்று அவர் இறுதியாகப் பேசிய வாசகங்களும் நாளிதழ்களில் மிகச் சில நாட்களில் செய்தியாக வந்தன. 

  தன்னலம் கருதாத அந்தக் காந்தியவாதி, காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள் காற்றில் கலந்துவிட்டார்.... 

  *காமராஜ் என்ற அந்தத் தியாக தீபத்தின் மறைவு குறித்து மீளாத் துயரில் ஆழ்ந்த நா.பா., தீபம் இதழில் அட்டைப்படத்தில் காமராஜ் திருவுருவை வெளியிட்டு அஞ்சலி செலுத்தினார். காமராஜ் குறித்த அட்டைப்படக் கவிதை ஒன்றை நான் அதே தீபத்தில் எழுதினேன். 

  அப்போது நா.பா.விடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டார், `இலக்கியப் பத்திரிகையான தீபத்தில் காமராஜ் படத்தை எப்படி அட்டையில் வெளியிடலாம்?` என்று. அதற்கு நா.பா. சொன்ன பதில்: 

  `ஏனென்றால் காமராஜே ஓர் இலக்கியம்தான்!`  

(மீள்பதிவு.) 
..............................................

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏🙏🙏

14 ஜூலை, 2026

இன்று ஒரு தகவல்

கரிச்சான்குஞ்சு நினைவுகள்

அஞ்சலி 🙏🙏🙏

🕯️ கண்ணீர் அஞ்சலி 🕯️

இசையரசி எஸ். ஜானகி
(1938 – 2026)

தென்னிந்திய இசை உலகின் ஒப்பற்ற குரலாக விளங்கிய இசையரசி எஸ். ஜானகி அவர்களின் மறைவு இசை ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில், 17 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தலைமுறைகள் பலரின் இதயங்களில் அழியாத இடத்தைப் பெற்றவர்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கும் GTR – ஜெர்மன் தமிழ் வானொலியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🕊️ "உங்கள் குரல் என்றும் எங்கள் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்."

GTR – ஜெர்மன் தமிழ் வானொலி
🌐 www.gtamilradio.com
📱 German Tamil Radio | Facebook: GTamilRadio

அஞ்சலி 🙏🙏🙏

நவீனத் தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரும் சாகித்திய அகாதெமி விருதாளருமான பூமணி மறைந்தார்.

கி. ராஜநாராயணன் அறிமுகப்படுத்திய கரிசல் இலக்கியத்தின் தொடர்ச்சியாக எழுத்துலகில் புகுந்தவர் பூமணி. எனினும் அந்தக் களத்தில் முன்னத்தி ஏர் என்று அவரே குறிப்பிட்ட கி.ரா.வைக் கடந்து கரிசல் மண்ணின் அறியப்படாத மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாகவும் உயிர்ப்போடும் சித்தரித்தார். அவரது சிறுகதைகளும் நாவல்களும் அந்தக் கருமண் நிலத்தின் ஆன்மாவை நவீனத் தமிழுக்குக் கொடையாக அளித்தன. தமிழில் தலித் இலக்கியத்தின் ஆரம்பப் படைப்புகள் பூமணியுடையவை. அவற்றைத் தலித் எழுத்து என்று வகைப்படுத்த முடியாத விதத்தில் மானுடச் சிக்கல்களைப் பேசும்  இலக்கிய ஆவணமாக மாற்றியவர் அவர். 'பிறகு' நாவலின் அழகிரிப் பகடையும் 'வெக்கை' நாவலின் செலம்பரமும் அவர் தமிழ்ப் புனைவிலக்கியத்துக்கு வழங்கிய ஜீவனுள்ள கதைமாந்தர்கள். அந்தப் பாத்திரங்கள் அழியாதவை. அவர்களை உருவாக்கிய பூமணியும் அழிவற்ற கலைஞர்.

பூமணிக்குக் காலச்சுவடின் புகழ் அஞ்சலி.

#பூமணி #Poomani #பூமணிமறைவு #எழுத்தாளர்பூமணி #PoomaniWriter #கரிசல்இலக்கியம் #வெக்கை #பிறகு #Asuran #தமிழ்இலக்கியம் #தமிழ்ப்புனைவிலக்கியம் #தலித்இலக்கியம் #கரிசல்மண் #தமிழ்எழுத்தாளர் #சாகித்தியஅகாதெமி #காலச்சுவடு #கண்ணீர்அஞ்சலி #rippoomani 

@followers @highlight Kannan Sundaram TopFans

ஆன்மீக மஞ்சரி

அருள்வாக்கு

13 ஜூலை, 2026

​பயணங்கள் முடிவதில்லை: இப்னு பதூதாவின் நெடிய முப்பதாண்டுப் பயணம்!


​பயணங்கள் முடிவதில்லை: இப்னு பதூதாவின் நெடிய முப்பதாண்டுப் பயணம்!

​ஒரு சிறிய பயணப் பையை மட்டும் எடுத்துக்கொண்டு, பெற்றோரிடம் விடைபெற்று, ஒரு சாதாரண விடுமுறைப் பயணமாக உங்களது 21-ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறுவதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களோ? இப்போது, முப்பது ஆண்டுகள் வரை நீங்கள் வீட்டிற்குத் திரும்பவில்லை என்றும், அதற்குள் சுமார் 73,000 மைல்கள் தூரத்தைக் கடந்து, நாற்பதுக்கும் மேற்பட்ட நவீன நாடுகளுக்குச் சென்று, கடல் கொள்ளையர்களின் தாக்குதல்கள் முதல் கடுமையான வெப்பமண்டல புயல்கள் வரை அனைத்தையும் கடந்து உயிர் பிழைத்திருக்கிறீர்கள் என்றும் கற்பனை செய்து பாருங்கள்.

​இது ஏதோ ஒரு சாகசத் திரைப்படத்தின் கற்பனைக் கதை அல்ல. இது இடைக்கால உலகின் மிகச்சிறந்த பயணியான அபு அப்துல்லா முகமது இப்னு பதூதாவின் உண்மையான வாழ்க்கை வரலாறு!

​உலகப் பயணங்கள் என்று கூறினாலே நம் நினைவுக்கு வரும் மார்கோ போலோவை விட, வரலாற்றில் மிக நீண்ட தூரம் பயணித்த பெருமை இப்னு பதூதாவையே சாரும். நவீன விமானங்கள், ஜிபிஎஸ் (GPS) வரைபடங்கள் அல்லது ஹோட்டல் முன்பதிவு வசதிகள் எதுவும் இல்லாத அந்தத் தூரத்துக் காலத்தில், மனிதனின் தேடல் உணர்வே அவனுக்கான சிறந்த வழிகாட்டி என்பதை அவர் நிரூபித்தார்.

​முற்றுப்பெறாத ஒரு புனிதப் பயணம்

​கி.பி. 1325-ஆம் ஆண்டில், மொராக்கோவின் டான்ஜியர் (Tangier) நகரிலிருந்த தனது வீட்டிலிருந்து ஒரு இளம் சட்ட மாணவர் வெளியேறினார். அவரது ஆரம்பக்கால இலக்கு மிகவும் எளிமையானது மற்றும் ஆன்மீகம் சார்ந்தது: மெக்காவிற்குச் சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவது மட்டுமே.

​அந்தப் பயணம் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அவரது கால்கள் அந்த திறந்தவெளிச் சாலையில் நடக்கத் தொடங்கியதும், ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தது. பயணத்தின் மீதான ஆர்வம் அவரை முழுமையாக ஆட்கொண்டது.

​தனது புனிதப் பயணத்தை முடித்த பிறகும் அவர் மொராக்கோவிற்கு நேரே திரும்பிச் செல்லவில்லை. மாறாக, பரந்து விரிந்திருந்த அந்தத் தொடுவானத்தைப் பார்த்து, "இந்த எல்லைக்கு அப்பால் என்ன இருக்கிறது?" என்ற எளிமையான கேள்வியைக் கேட்டார். அந்த ஒற்றைக் கேள்விதான் அடுத்த முப்பது ஆண்டுகள் அவரை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை நோக்கி ஓட வைத்தது.

​அசாத்திய துணிச்சலுக்கு ஒரு சோதனை

​14-ஆம் நூற்றாண்டில் பயணம் செய்வது என்பது அசாத்திய துணிச்சல் இல்லாதவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இன்றைய நவீன நெடுஞ்சாலைகளோ அல்லது தங்குமிட வசதிகளோ இல்லாத அக்காலத்தில், ஒவ்வொரு மைலையும் அவர் தனது அசாத்திய சகிப்புத்தன்மையால் மட்டுமே கடந்தார்.

​திறந்தவெளிப் பயணம்: இப்னு பதூதா கடுமையான பாலைவனங்களைக் கடந்தார், அங்கு பகல் நேரத்தில் வெப்பம் மிக அதிகமாக இருந்ததால், பயணிகள் இரவில் மட்டுமே விண்மீன்களின் நிலையை வைத்து திசையறிந்து பயணிக்க முடிந்தது.

​கடல் கொள்ளையர்கள்: இந்தியப் பெருங்கடலில் பயணம் செய்யும்போது, அவரது கப்பல் கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. அவர் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்த போதிலும், அவரது புத்திசாலித்தனமும் விடாமுயற்சியும் அவரை உயிர் பிழைக்க வைத்து பயணத்தைத் தொடரச் செய்தது.

​அரசவைப்பணி: ஒரு சிறந்த அறிஞராக அவருக்கு இருந்த நற்பெயர் அவர் பயணிக்கும் வேகத்தை விட வேகமாகப் பரவியது. அவர் இந்தியாவை அடைந்தபோது, டெல்லி சுல்தான் அவரது திறமையைக் கண்டு வியந்து, அவரை ஒரு நீதிபதியாக நியமித்தார். பின்னர் அவரைத் தனது அதிகாரப்பூர்வ தூதராக சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.

​மனித நேயத்தைக் கண்டறிதல்

​இப்னு பதூதாவின் பயணக் குறிப்பேடான 'ரிஹ்லா' (Rihla - அதாவது "தி ஜர்னி") என்பதை இவ்வளவு அழகானதாக மாற்றுவது எதுவென்றால், மனிதர்களுடனான அவரது ஆழமான பிணைப்புதான்.

​அவர் சென்ற இடங்களிலெல்லாம் மனித நேயத்தையும், கலாச்சாரப் பகிர்வையும் தேடினார். சட்டம் மற்றும் கலாச்சாரத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவின் காரணமாக, அவர் அரச அரண்மனைகள், எளிய பாலைவனக் கூடாரங்கள் மற்றும் பரபரப்பான சந்தைகள் என அனைத்து இடங்களிலும் அன்போடு வரவேற்கப்பட்டார். இந்தியாவின் நறுமணப் பொருட்கள், சீனாவின் மாபெரும் துறைமுகங்கள் மற்றும் தன்னிடம் எதுவும் இல்லாதபோதும் தனக்கு உணவும் தங்குமிடமும் தந்து உதவிய அந்நிய மனிதர்களின் எல்லையற்ற தாராள மனப்பான்மை ஆகியவற்றை அவர் தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.

​உலகப் பயணிகள் அனைவரும் ஒரு நாள் கண்டறியும் ஒரு உன்னத உண்மையை அவரும் நிரூபித்தார்: நாம் எவ்வளவு தூரம் சென்றாலும், உள்ளூர் பழக்கவழக்கங்கள் எவ்வளவு வித்தியாசமாகத் தோன்றினாலும், மனித அன்பு என்பது உலகளாவிய ஒரு பொதுவான மொழி மட்டுமே.

​முப்பது ஆண்டுகால பயணத்தின் முடிவு

​இப்னு பதூதா இறுதியாக 1354-இல் மொராக்கோவிற்குத் திரும்பியபோது, அவர் முற்றிலும் ஒரு புதிய மனிதராக மாறியிருந்தார். ஒரு சிறிய பையுடன் கிளம்பிய அந்த 21 வயது இளைஞன், முப்பது ஆண்டுகால உலக வரலாற்றைத் தனது மனதில் சுமந்து வந்த ஒரு ஞானமிக்க முதியவராகத் திரும்பினார்.

​"பயணங்கள் முதலில் உங்களை வார்த்தைகளின்றி மௌனமாக்கும், பின்னர் உங்களை ஒரு சிறந்த கதையாசிரியராக மாற்றும்" என்று அவர் தனது குறிப்பில் எழுதியுள்ளார்.
​உலகம் என்பது பயந்து நடுங்குவதற்கான இடமல்ல, அது அனுபவிப்பதற்கான ஒரு களம் என்பதை அவரது காலடிச் சுவடுகள் நமக்கு நினைவூட்டுகின்றன. பயணத்தில் ஏற்படும் ஒவ்வொரு தடங்கலும் ஒரு சிறந்த கதைக்கான தொடக்கமே, மேலும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு புதிய மனிதரும் நம்முடன் அன்பைப் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கும் ஒரு நண்பரே!

​நீங்கள் மேற்கொண்டதிலேயே மிக நீண்ட பயணம் எது? நவீன ஸ்மார்ட்போன்கள் எதுவும் இல்லாமல் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து உங்களால் பயணம் செய்ய முடியுமா? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!


கூகுள் ஜெமினைக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏

11 ஜூலை, 2026

நலக்குறிப்புகள்

இன்றைய புத்தகம்

புதிய வெளியீடு
 
குரங்கிலிருந்து சிதாருக்கு (கவிதை) 

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/kurangilirundhusitharukku_2008/

மின் நூலைப்பெற:
https://books.kalachuvadu.com/catalogue/kurangilirunthusitharukku_2017/

அமேசானில் வாங்க: 
https://www.amazon.in/dp/B0H7MG4G4N

மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0H7JMXVN3

#Kalachuvadu #TamilBooks #TamilLiterature #ReadTamil #TamilReaders #Bookstagram #BookLovers #MustRead #IndianBooks #Books #Ebook #KindleBooks #ReadingCommunity #SupportTamilPublishing #காலச்சுவடு #தமிழ்நூல்கள் #தமிழ்புத்தகம் #தமிழ்இலக்கியம் #வாசிப்பு #நூல்வாசிப்பு #புத்தகஅன்பர்கள் #தமிழ்வாசகர்கள் #புத்தகபரிந்துரை #மின்னூல்

அருள்வாக்கு

இன்றைய சிந்தனைக்கு