உலகெங்கிலுமுள்ள ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தர்கள் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் கருணையை முன்னிட்டு அவர் மீது பேரன்பு கொண்டவர்கள்.
ஒருசமயம் தன் மகளுக்கு அம்மா என்றழைக்க ஒரு குழந்தைகூட இல்லையேயென வருந்தியிருக்கிறார் அன்னை சாரதாதேவியின் அன்னை சந்திரமணி தேவி.
இதையறிந்த ஸ்ரீஇராமகிருஷ்ணர் கூறினார்: "வரும் காலத்தில் பக்தர்கள் அவரை காது வலிக்கும் அளவிற்கு அம்மா! அம்மா!! என்று அழைப்பார்கள்."
இன்றும் உலக முழுவதிலுமிருந்து பல லட்சம் பேர் அம்மா, அம்மா என்று அவரை நினைந்து மனமுருகப் பிரார்த்தனை செய்கின்றனர்.
இந்த நாளில் அன்னையின் திருவடிகளைப் போற்றி மகிழ்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக