ஜனவரி 5 (January 5) கிரிகோரியன் ஆண்டின் ஐந்தாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
2005ல் இந்த நாளில் (ஜனவரி 5) – சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள் ஏரிசு (Aries) கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
1592 – ஷாஜகான், முகலாயப் பேரரசர் (இ. 1666)
1876 – கொன்ராடு அடேனார், மேற்கு செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1967)
1893 – பரமஹம்ச யோகானந்தர், இந்திய-அமெரிக்க குரு (இ. 1952)
1928 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (இ. 1979)
1932 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய மெய்யியலாளர் (இ. 2016)
1941 – மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)
இறப்புகள்
1933 – கால்வின் கூலிஜ், அமெரிக்காவின் 30வது அரசுத்தலைவர் (பி. 1872)
1943 – ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், அமெரிக்கத் தாவரவியலாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1864)
1970 – மாக்ஸ் போர்ன், நோபல் பரிசுபெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
1975 – அ. சீனிவாச ராகவன், தமிழறிஞர் (பி. 1905)
1981 – அரால்டு இயூரீ, நோபல் பரிசுபெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1893)
நன்றி: தமிழ் விக்கிப்பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக