9 பிப்., 2020

கவலை அளிப்பவை : உணவில் இரசாயனக் கலவைகள்

ஒரு பல்பொருள் அங்காடியின் வாசலில் நின்றிருந்த  அந்த பிள்ளைக்கு அதிகபட்சம் பத்து வயது இருக்கலாம். அதீத குளிருட்டப்பட்ட அரை லிட்டர் கோலா பாட்டிலை குடித்து கொண்டிருக்கிறார். அருகில் அந்த பிள்ளையுடன் அவர் வீட்டாரும் ஆளுக்கு ஒரு குளிர்பான பாட்டில் வைத்திருக்கிறார்கள். இங்கு அந்த பிள்ளை முதல் முறையாக அதை குடிப்பது போல் இல்லை. வெகு இயல்பாக தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போல் அருந்திகொண்டிருக்கிறான். இது நித்தம் அங்கங்கே  காணும் நிகழ்வு என்பதால்.. எனக்கு அதிர்ச்சியாக தெரியவில்லை... ஆனால்..இது போன்ற காட்சிகளை பார்க்கும் நேரம்..எழும் சில கேள்விகள் என்னை சுற்றி வரும்.    

ஒரு சாரார் (செயற்கை சுவையுடன்) பழரச பானங்களை பருகிறார்கள். இளைஞர்கள் ஆற்றல் தரும் தகர உருளையில் விற்கப்படும் விதவிதமான பானங்களை அருந்துகிறார்கள். பிள்ளைகள் நெகிழி குப்பிகளில் விற்கப்படும் வெவ்வேறு குளிர்பானங்களை அருந்துகிறார்கள். இன்னும் சிறு பிள்ளைகள் வீட்டில் விரைவாக வளர (பிள்ளைகள் என் விரைவாக வளர வேண்டும் ????!!!) இனிப்பு துகள்கள் நிரம்பிய பால் குடிக்கிறார்கள். எல்லாமே ரசாயன கலவைகள். எல்லா சுவைகளும் கிடைக்கின்றன. எல்லா காலநிலைகளிலும் எல்லா பழங்களின் சுவையும் கிடைக்கின்றன. சரி, குடிநீர் - ஒரு நாளைக்கு ஒரு லோட்டா குடித்தாலே பெரிய விஷயம். ஒவ்வொருவருக்கும் அவரவர் நீர் தேவை அறிதல் அவசியம். தாகம் எடுக்கும்போது அறுந்தும் நீர் உடல் ஆற்றலை புதிப்பிக்க உதவுகிறது. அதே நேரம்..உடல் வறண்டுவிடாமல் இருக்க...அவ்வபோது சிறிய அளவில் தேவைக்கேற்ப நீர் அருந்துதல் அவசியம்.  

இது நமது உணவு பழக்க மாற்றத்திலும் அவ்வாறே ஆகிறது.  நம் உடலுக்கு சோறும், வெஞ்சனமும் உகந்தது. அவ்வப்போது கோதுமை, மற்ற தானிய உணவுகளை சேர்த்து கொள்ளலாம். ஆனால் வெளிநாட்டு உணவு மோகம் கொண்டு, அந்த உணவுவகைகளையே நம் பிரதான உணவாக எடுத்து கொள்ள...நமக்குள் இருக்கும் உணவை செரிக்க வைக்கும் சக்தியானது அதற்கு ஏற்றார் போல் இல்லாததால் மிக பெரிய தடுமாற்றம் ஏற்படுகிறது. நாளடைவில் உடல் சார்ந்த சிக்கல்கள் உருவாகிறது. செயற்கையாய் வரும் அத்தனை விஷயங்களையும் நாளடைவில் நம் உடல் ஏற்று கொண்டு..காலம் செல்ல செல்ல...உடலும் (சுவாசம் இருப்பது போல்) செயற்கையாய் சுவாசிக்க பழகிக் கொள்ளும்  என்று தோன்றுகிறது.

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ... !!!!!

நன்றி: கண்ணன் ஜெயராமன்

கருத்துகள் இல்லை: