...சிரிக்க மட்டும்...
கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி. 👫🏨
திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை.
எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார்.😳😳🚶
பிறகு நடந்தவை:
“குட் ஈவினிங் குமார் சார்!” - இது கேட்கீப்பர்.
உள்ளே வந்த மனைவி: “அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?”🤔
குமார் சார்: “சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.”
பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர்: “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?” 🍾🤔...
குமார் சார் மனைவியிடம்: “வேண்டாம் அப்படிப் பார்க்காதே. நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….”🍺
அடுத்து டான்ஸ் ஆரம்பமானது.💃 முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி: “என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?” 🤔
ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க…. 😡😡
டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது: “என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. வேற யாரும் கிடைக்கலையா?...
😇😇😇😇😇😇😇😇
பி.கு.: குமார் சாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு....
😂😂😂😂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக