ஒரு போரின் வெற்றி அந்த நாட்டிற்கு பெருமையும், செல்வதையும் சேர்க்கிறது. ஆனால் பெரும்பாலும் அந்தப் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் வேதனையையும், சோகத்தையுமே தருகிறது.
ஹாலிவுட்டிலும் உலக சினிமாக்களிலும் போரை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. வந்து கொண்டும் இருக்கின்றன. ஏனெனில் 2 உலகப் போர்கள் இந்த உலகத்தில் ஏற்படுத்திய வடுக்களும் வலிகளும் நிறைய. அதன் பாதிப்பை இன்னும் சில நாடுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் போர் வேண்டாம் என்ற மனநிலைக்கு எந்த வளர்ந்த, வளர்கிற நாடுகளும் வருவதில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக் ஏன் ஈழ படுகொலைகளும் அதற்கு உதாரணம்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்தால் அந்த குற்றத்திற்கு எல்லா நாடுகளிலும் தண்டனை உண்டு. ஆனால் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் போரின் பெயரில் நடத்தும் வன்முறைகளுக்கும், கொலைகளுக்கும் தண்டனை வழங்கப்படுவதில்லை. அப்படி தண்டனை வழங்குவதானல் யாருக்கு வழங்குவது அந்த நாட்டின் தலைவருக்கா? அந்த தலைவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கா? என்பது எனது நீண்ட நாள் கேள்வி. போரின் உக்கிரத்தையும், இழப்புகளையும், அதில் உள்ள அறமின்மையும் கலையின் மூலம் மக்களுக்கு சொல்வதற்காகத்தான் உலக இலக்கியங்களும் திரைப்படங்களும் விழைகின்றன. அப்படியோரு திரைப்படம் தான் 1917.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக