14 ஏப்., 2020

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்!

தனியுடமை கொடுமைகள்
தீர தொண்டு
செய்யடா

தானாயெல்லாம் மாறும்
என்பது பழைய பொய்யடா

என்று புரட்சிதான்
தீர்வு என்று
60ஆண்டுகளுக்கு முன்
தீர்வை திரைப்பாடல்
வழி சொன்ன

மக்கள் கவி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்90ஆம் ஆண்டு நினைவு பிறந்தநாளில்
புரட்சியை கையிலேந்துவோம்.

கீழே எனக்குப் பிடித்து அவரது பாடல்களில் ஒன்று :

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் - பெருங்
கூட்டிருக்குது கோனாரே! - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே!
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
தில்லாலங்கிடி தில்லாலே (இந்த)

கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுதே - அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது - இந்த
பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது (இந்த)

ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங் கண்டு
நேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு

இதைப்-
படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது,
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால்போலத் துடிக்குது

நடக்கும் பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப் பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஒடைக்குது (இந்த)

[ பாசவலை,1956 ]

கருத்துகள் இல்லை: