TATA #குழுமத்தின் முன்னால் தலைவரும்,
கொடை வள்ளலும் ஆன திரு. #ரத்தன்
டாடா அவர்களின் கருத்துக்கள்.
#கொரோனாவின் விளைவாக பொருளாதாரம்
பெரும் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள்
கணிக்கிறார்கள். எனக்கு அந்த நிபுணர்களைப்
பற்றி அதிகம் தெரியாது.
#ஆனால், மனித உந்துதல் மற்றும் மன உறுதியானமுயற்சிகளின் மதிப்புப் பற்றி இவர்களுக்கு எதுவும்
தெரியாது என்பதை நான் நன்கு அறிவேன்.
#துறை வல்லுனர்களின் கணிப்புகளை ரம்பியேஆகவேண்டும் எனில்,
#இரண்டாம் உலகப் போருக்கு பின் முற்றிலும்அழிந்த ஜப்பானிற்கு எதிர் காலமே இல்லைஎன்றனர். ஆனால், அதே ஜப்பான் முப்பதுஆண்டுகளில், அழிவுக்கு காரணமான அமெரிக்காவையே சந்தையில் கதறச் செய்தது.
#அரேபியர்களால் உலக வரை படத்திலிருந்தே
காணாமல் போயிருக்க வேண்டிய இஸ்ரேலின்
தற்போதைய நிலமையே வேறு.
#அப்போதைய அணித் திறமைகளின் அடிப்படையில்,
வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற கடைசி இடத்
திற்கு கணிக்கப்பட்ட நம் இந்திய அணி, 1983-ல்உலக
கோப்பையை வென்றதை வரலாறு கூறும்.
#கால்கள் துண்டிக்கப் பட்ட நிலையில் ஒரு சாதாரண
வாழ்க்கையே வாழ்வது கடினமென கருதப்பட்ட
#அருனிமா சின்ஹாதான் எவரெஸ்ட் சிகரத்தைஏறினார்.
#இவற்றையெல்லாம் பார்க்கையில்,
கொரோனா நெருக்கடியும் வேறுபட்டதல்ல.அதையும்
நாம் வீழ்த்துவோம். இந்தியப் பொருளாதாரம் ஒரு
சிறந்த முறையில் மீண்டும் வீறு கொண்டெழும்
என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இரத்தன் டாடா
நன்றி: திரு கே ஆர் வி ராஜா, புதிய தகவல்கள், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக