26 ஜூலை, 2020

கருத்து மேடை : விழித்திடுவீர்!


எச்சரிக்கைப்பதிவு....

#கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்...!!!

1 இனிப்பு அதிகமாக சாப்பிடக்கூடாது

2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்

3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்

4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது

5. ஆயில் புல்லிங்

6. காம்பிளான் குடித்தால் வளரலாம்

7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா

9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி

10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்.. 

✍வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் ... உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????

✍நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின ... 

✍அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது...
அதனை தொடர்ந்து பாதாம் , பிஸ்தா என வாங்கி உண்டோம்..

✍அந்த இடைவெளியில் வேர்க்கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்கியது...  இதுதான் சமயம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் வேர்க்கடலையை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது...

✍பின்விளைவு வெளிநாடுகளில்
பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று....

✍சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது ... 

✍அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம் பின்விளைவு
அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது
உண்மையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா தான்.

✍சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்...

✍டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்த வெளிநாட்டுக்காரர்களின்  கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது..

✍இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல்...

✍இன்னும் கொஞ்ச நாட்களில் நம்மையும் இழந்து விடுவோம்.. வெளிநாட்டு தயாரிப்பு உணவு பொருட்களில் மோகம் கொண்டால்...

✍மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல ...
மருத்துவமனைகள் 
அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்  தான் ..

✍படித்தும் இப்படி அறிவிலியாக இருக்கிறோம்...வரும் தலைமுறைகளாவது விழிப்போடு இருக்கட்டும்..

உடல்நலத்திற்கு எவை நல்லது என்பதனை அறிவோம்....வளமோடு உண்டு வாழ்வோம்....


நன்றி : திரு.ஸ்ரீதர் சாமி, நாட்டு மருந்து, முகநூல்.

கருத்துகள் இல்லை: