உழைக்காமல் பிழைக்கும் சுயநலமுடையவர்கள் அறிவில் தெளிவு பெறாத மக்களிடம் மயக்கு வார்த்தைகள் கூறி, மக்களுக்கு ஏற்றவகையில் பேசி நடித்து வாழ்கிறார்கள். அவர்கள் புகழ்பெற வேண்டும், பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்கிறார்கள். உலக விபரங்கள் அனைத்தும் தங்களுக்கு தெரிந்திருப்பது போல பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றுவது என்பதும் தற்காலத்தில் ஒரு கலையாக ஆகிவிட்டது, அதுதான் ஏமாற்றுக்கலை ஆகும். தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மக்களிடம் இனவெறியை ஏற்படுத்துகிறார்கள். இவர்களின் ஏமாற்றும் செயலால், அறிவில் தெளிவு பெறாதவர்கள், உணர்ச்சி வயமானால் நாடு குழப்பமடையும். உணர்ச்சிவயப்படுபவர்களுக்கு, சிந்திக்கும் ஆற்றல் உயர்வடைவதில்லை. உண்மைகளைத் தெரிந்து கொண்டவர்கள் எடுத்துக்கூறி விளக்கினாலும், அதனை நுட்பமாகக் கேட்டுக் கொள்ளும் திறமையும் பொறுமையும் இருக்காது. மக்களுக்கிடையில் பகை, பிணக்கு, அச்சம் நிலவி சமுதாய வளமும் நலமும் கெடும்.
Courtesy:
ஞானக் களஞ்சியம் கவிகள் வேதாத்திரிய தத்துவ விளக்க உரைகள் - 1
நன்றி :
தொகுப்பாசிரியர்: இரா. மாரியம்மாள் மோகன்தாஸ், M.A.,M.Phil.
https://m.facebook.com/story.php?story_fbid=4153464827997053&id=100000007312496
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக