18 செப்., 2020

தஸ்தாயேவ்ஸ்கி நினைவுகள்

தஸ்தாயெவ்ஸ்கின் உடல் நிலை அவரது கடைசி நாவலான 'கரமசேவ் சகோதரர்கள்' எழுதிக் கொண்டிருந்த போதே மிக மோசமான நிலையிலிருந்தது. வலிப்பு நோயும், சுவாச குழல் அழற்சி நோயும் தீவிரமடைந்திருந்து.

இந்த நாவலை எழுதி முடித்துவிட்டால் சந்தோஷமாக மரணமடைவேன் என்கிறார் தஸ்தாயேவ்ஸ்கி.

நாவல் எழுதி முடித்தபின்பு மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடக்கும் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரின் உரையை கேட்டுவிட்டு கண்ணீர் விட்டு அழுகிறார்கள். அவரை மேடையிலிருந்து இலக்கிய நண்பர்கள் காப்பாற்றி கூட்டி போகிறார்கள். குற்றமும் தண்டனையும் நாவல் தங்கள் வாழ்வை எப்படி மாற்றிவிட்டது என்று சில பேர் அவரிடம் ஓடி வந்து சொல்கிறார்கள்.

கடைசியாக அந்த இரவு வருகிறது தஸ்தாயேவ்ஸ்கி வீட்டில் இரவு விருந்து நடக்கிறது அதில் தஸ்தாயேவ்ஸ்கின் குடும்பம் மற்றும் அவரின் சகோதரி ஒருவர் கலந்து கொள்கிறார். மகிழ்ச்சியாக போய் கொண்டிருக்கும் விருந்து தஸ்தாயேவ்ஸ்கி சகோதரியால் சீர்கெடுகிறது. சொத்து சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகள் வருகிறது. மனமுடைந்த தஸ்தாயேவ்ஸ்கி படுக்கைக்கு போகிறார் பின்பு ரத்த வாந்தி எடுக்கிறார். அவர் மனைவி அன்னா வுக்கு தெரிந்துவிட்டது. அவர் உயிர் பிரிந்தது கொண்டிருக்கிறது என்பது 

தஸ்தயேவ்ஸ்கி சைபீரியா சிறையிலிருந்து தன்னுடன் வைத்திருந்த விவிலியப் புத்தகத்தை தனது மகனிடம் கொண்டு வர சொல்கிறார். எப்போதும் போல தனது மனைவி அன்னாவிடம் அதன் முதல் பக்கத்தை வாசிக்க சொல்கிறார்.

அன்னா வாசித்த பின்பு தஸ்தாயேவ்ஸ்கி சொல்கிறார் "எனது நேரம் வந்திருக்கிறது. நான் மரணமடைய வேண்டும். "

தனது இளைய மகன் மற்றும் மகளிடம் இதை சொல்கிறார்.

"ஒரு குற்றம் செய்யத்தக்க ரீதியில் உங்களுடைய வாழ்நாளில் நீங்கள் சந்தோஷமற்றவர்களானாலும் கூட... தெய்வத்தைப்பற்றி நினைத்து நிராசைப்பாடதீர்கள். நீங்கள் அவரது குழந்தைகள். சொந்த தந்தைக்கு முன்பிலிருப்பதைப் போன்று அவருக்கு முன்பாக பணிவுடன் இருங்கள். அவரிடம் மன்னிப்பை கோருங்கள். நீங்கள் உங்கள் தவறுக்காக வருத்தினால் அவர் சந்தோஷமேயடைவார். எல்லாவற்றையும் தொலைத்த புதல்வனின் மனவருத்ததால் அவனது தந்தை மகிழ்வதைப்போல. "

கடைசியாக இறுதி பிரார்த்தனை செய்துவிட்டு நிரந்தரமாக கண்களை மூடினார்.

அவரது இறுதி சடங்குகளில் 30,000 மேற்பட்ட மனிதர்கள் கலந்துக் கொண்டார்கள். பீட்டர்ஸ்பர்க் மட்டுமல்ல மொத்த ரஷ்யாவும் கண்ணீர் வடித்தது. 

மனிதன் ரகசியமானவன். விடுகதை போன்றவன். அந்த விடுகதையை கண்டுபிடிப்பது தான் தன் வாழ்நாளின் லட்சியம் என்று தனது இளைமகாலத்தில் சொன்ன தஸ்தாயேவ்ஸ்கி தான் எழுதிய நாவல்களின் வழியே உண்மையில் மனிதனின் உள்மனம் சார்ந்த அத்தனை ரகசியங்களையும் திறந்து காட்டியுள்ளார்.

#தஸ்தயேவ்ஸ்கி_மாஸ்டர் ❤️

நன்றி :

கருத்துகள் இல்லை: