991-1000
குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: குடியியல்.
அதிகாரம்:99 பண்புடைமை.
குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
எம் எஸ் கே சாமி விளக்கம்:-
இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் முகத்தைத் தவிர மற்ற உறுப்புகள் எல்லாம் ஒரே மாதிரியாக தான் உள்ளது.
ஆனால் அந்த மனிதர்களுடைய குணம் மட்டும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சூழ்ச்சி வஞ்சம் கள்ளம் கபடம் பொய் போன்ற குணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். சிறந்த பண்பாகிய இரக்கம் கருணை அன்பு பாசம் உதவும் மனப்பான்மையுடனும்,
இருக்கும் மனிதர்களுடன் மனிதர்களாக ஒத்து இருப்பதே சிறந்த பண்பாகும்
1.உறுப்பொத்தல்:- இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் ஒரே வகையான உடலமைப்பில் பொதுவான உறுப்புக்களான ஐம்புலன்களனுடன் உடலமைப்பை பெற்றுள்ளனர். இயற்கையின் படைப்பில் மனிதன் என்றால் இந்த அங்கங்களுடன் உறுப்புகளுடன் இருப்பவன் தான் மனிதன் என படைத்துள்ளார்.
2.மக்களொப்பு:- மனித உடலின் உள்ள அங்க அமைப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்து இவன் மனிதன் என அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது
3.அன்றால் வெறுத்தக்க:- அதுமட்டுமில்லாமல் மனிதனுக்கு மனம் என்னும் குரங்கு உண்டு. அது ஒரே இடத்திலும் ஒரே மாதிரியாக மனிதர்களை படைக்கவில்லை. ஆனால் மனிதர்கள் மற்றவர்களுடன் நல்ல விஷயங்களை ஒப்பிடாமல் கெட்ட விஷயங்களுடன் ஒப்பிட்டு தானும் அதுபோல மாறிவிடுகிறான். வெறுக்கத்தக்க ராட்ச குணங்களையும் உடையவனாக படைக்கவில்லை.
4.பண்பொத்தல் :-உருவமைப்பு ஒரே மாதிரி உள்ள மனிதர்களின் பண்புகள் எப்பொழுது ஒரே மாதிரியாக குணநலன்களையும் கொண்டுள்ள மனிதர்களே சிறந்த பண்பாளர்கள் என்கிறார்.
5.ஒப்பதாம் ஒப்பு.:- உலகில் அன்பு கருணை இரக்கம் கொண்ட சாதாரண மனிதனாக பிறந்து உலகம் போற்றும் மனிதனாகவும் இறைவன் படைத்துள்ளார் அத்தகைய மனிதர்கள் குணங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதுதான் சிறந்த ஒப்பாகும் என்கிறார்.
உதாரணமாக *தெய்வப்புலவர் திருவள்ளுவர், வள்ளல் பெருமான் வல்லளார்*
சிறந்த மென்மையான குணங்களை கொண்ட இவர்களைப் போல மனிதர்கள் மீண்டும் பிறப்பது மிகவும் அரிதாகும்.
அதனால்தான் மேற்கூறிய மகான்களளைப் போல இருந்து மனிதனும் தெய்வமாகலாம் என்பதையும் தெரிந்து கொள்ளும் வகையில் இவர்களைப் படைத்துள்ளார் என்பதே உண்மையாகும் என்றால் மிகையாகாது.
உட்கருத்து:-
*மனிதநேயமே சிறந்த பண்பாகும்*
நன்றி : தினம் ஒரு திருக்குறள், முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக