21 டிச., 2020

தகவல் நேரம் : விவசாயிகள் படும் பாடு

அதிகாலை ஒரு மூணு மணிக்கு
#தென்காசி ஆத்து பாலத்தில நின்னீங்கன்னா காலைல ஏழு மணி வரைக்கும் ஒரே லாரியா போய்ட்டு இருக்கும்...கிட்ட தட்ட சின்னதும் பெருசுமா 300 லாரிக்கு மேல கேரளா போகும்...அதுல பெரும் பகுதி ஆலங்குளம் , பாவூர்ச்சத்திரம் சுரண்டை பகுதிகள் ல இருந்து மட்டும் தினமும் போகும்....

எல்லாமே காய்கறி வண்டி தான்...#ஆலங்குளம்_பாவூர்சத்திரம்_மார்கெட்ல இருந்து மட்டும் இவ்ளோ வண்டிகள் ல காய்கறிங்க கேரளா போகுது...

இந்த காய்கறிகள் எல்லாம் ஆலங்குளம் பகுதிகள் முதல் களக்காடு வரையிலான விவசாயிகள் தாங்கள் விளைய வைத்த காய் கறிகள்...

ஒரு உதாரணத்துக்கு களக்காடு ல ஒரு பத்து விவசாயிகளோட தோட்டங்களில் எல்லாம் சேர்த்து அங்க ஒரு லோடு காய்கறி உற்பத்தி ஆயிருக்கு னா அங்க உள்ளூர் ல லாரி வச்சிருக்குற ஒரு வியாபாரி அந்த விவசாயிகள் கிட்ட  மொத்தமா வாங்குவார்(ஆனால் விலையை தீர்மானிப்பது ஏலம் தான்)....வயல் லேயே பொருளை வாங்கினாலும் காசு உடனே குடுக்க மாட்டார்...வித்த பின்னாடி தான் கொடுப்பார்..அதாவது முதல் போடாத முதலாளி...அங்க அவருக்கு ஒரு லாபம் வைப்பார்...

அப்புறம் அவரு அங்க இருந்து ஆலங்குளம் மார்க்கெட்டுக்கு கொண்டு வருவார்...மார்க்கெட் ல ஒரே பொருள் அதிகமான அளவில் வருகை இருந்தால் நிச்சயமாக விலை வீழ்ச்சி அடையும்...அப்போது ஏலம் விடப்படும்...இந்த ஏல கமிஷன் மண்டிக்கு ஒரு லாபம்...

ஏலம் முறை ல வித்த காய்கறிக்கு கமிஷன் மண்டிக்கு ஒரு கமிஷன் , கொண்டு வந்த வியாபரிக்கு ஒரு லாபம் , வண்டி வாடகை போக விவசாயிக்கு போய் சேருவது மிக மிக சொற்ப தொகை தான்...இதோட அந்த விவசாயியோட ஸீன் முடிஞ்சு போகுதுங்க...

ஆனா இனிமே தான் வியாபாரியோட ஸீன் ஆரம்பமாகுது....பெரிய வியாபாரிகள் இப்படி மார்க்கெட்டில் ஏலம் விடுற காய்கறிகளை எல்லாம் மொத்தமா ஏலம் எடுத்து ஸ்டாக் பண்ணி வச்சி கிட்டு தமிழகத்தின் பிற மார்க்கெட் களில் அந்தந்த பொருள்கள் என்ன விலைக்கு போகுது னு விசாரிப்பங்க...உதாரணத்துக்கு இங்க கிலோ 3 ரூபாய்க்கு தக்காளி விக்கிற அதே நேரம் விழுப்புரம் மார்க்கெட் ல 13 ரூபாய்க்கு போகும்...அந்த மாதிரி விசாரிச்சு எங்க மூணு மடங்கு நாலு மடங்கு லாபம் கிடைக்குமோ அங்க அனுப்புவாங்க... எல்லா பக்கமும் சமமா தான் விலை இருக்கு ன்னா மொத்தமா
#கேரளா_அனுப்புவாங்க...அதாவது இங்க 3 ரூபாய்க்கு வாங்குற தக்காளி கேரளா மார்க்கெட் போகும் போது 15 ரூபாய்க்கு போகும்...அங்க உள்ள வாடிக்கையாளர்களிடம் அது போகும் போது 20 ரூபாய்க்கு போகும்...

அதாவது கேரளாவில் கிலோ 20 க்கு விற்ற  ஒரு கிலோ தக்காளி ல இருந்து களக்காடு ல (உதாரணம் தோராயமாக) கஷ்ட பட்டு விவசாயம் செஞ்சு விளைய வச்ச ஒரு விவசாயிக்கு கிடைப்பது 3 ரூபாயில ஏலக்கமிஷண் வண்டி வாடகை புரோக்கர் கமிஷன் எல்லாம் போக 2 ரூபாய்....மீதம் 18 ரூபாயை சாப்பிடுவது எல்லாம் இடையில் உள்ள புரோக்கர்களும் விவசாயிகளும்....

ஆலங்குளம் பாவூர்ச்சத்திரம் சுரண்டை பகுதிகள் ல மெயின் ரோட்டை சுற்றி வாரா வாரம் ஒரு இடம் வாங்கி பத்திரம் முடிப்பது எல்லாம் யாருன்னு நெனச்சீங்க...எல்லாம் கேரளாவுக்கு காய்கறி அனுப்புற வியாபாரிகள் தான்...ஆனா விவசாயியோ இத்தனை பேரையும் வாழ வச்சு தன்னோட மகளுக்கு கல்யாணம் பண்ணனும் னா கூட தன்னோட விளை நிலங்களில் ஒரு பகுதியை விற்று தான் அதை நடத்த வேண்டிய நிலை...

இப்படி வியாபாரம் பண்ணி இன்னைக்கு பெரும் கோடீஸ்வரர்களா ஆன வியாபாரிகள் யாருக்காச்சும் விவசாயம் பண்ண தெரியுமா னு கேளுங்க...ஊஹூம்... ஒருதருக்கும் விவசாயம் தெரியாது...தெரிஞ்சாலும் செய்ய மாட்டாங்க...அவங்களை பொறுத்த வரை விவசாயி என்பவன் லாயக்கற்றவன்...ரெண்டு மூட்ட சுரைக்காய வச்சிக்கிட்டு இன்னைக்கு விலை போகுமோ போகாதோ ன்னு ஏல கடை முன்னாடி அப்பாவியா உக்காந்திருக்குற அடிமைகள்...

கருத்துகள் இல்லை: