19 ஏப்., 2020

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : கவிஞர் பைரன்

   லார்டு பைரன் (Lord Byron) 

22 சனவரி 1788 முதல் 19 ஏப்ரல் 1824 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர். 

 கலை, இலக்கிய, அறிவுசார் புனைவிய இயக்கத்தின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். 

பிரிட்டனின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராக பைரன் மதிக்கப்படுகிறார். இன்றும் இவரது கவிதைகள் பரவலாகப் படிக்கப்படுவனவாகவும், செல்வாக்கு மிக்கனவாகவும் திகழ்கின்றன. 

டான் யுவான் மற்றும் சைல்டி அரால்டின் புனிதப்பயணம் போன்ற நீண்ட விளக்கக் கவிதைகளும், அவள் அழகில் நடக்கிறாள் போன்ற குறுகிய தன்னுணர்ச்சிப் பாடல்களும் பைரனின் நன்கு அறியப்பட்ட ஆக்கங்களில் சிலவாகும்.

இன்று கவிஞர் பைரன் நினைவு நாள்.

நன்றி: தமிழ் விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: