21 ஏப்., 2020

வண்ணததுப்பூச்சியும் கடலும்

இன்று கவிஞர் பிரமிள் பிறந்த நாள்......

வண்ணத்துப் பூச்சியும் கடலும்-பிரமிள்

சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களiலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளiரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த  சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

நன்றி: பிரமிளுக்குப் பிறகு பிரமிள், முகநூல்.

கருத்துகள் இல்லை: