23 ஜூலை, 2020

இன்றைய தத்துவம் : Liberalism எனும் தாராளவாதம்

இன்றைய தத்துவம் :
Liberalism என்று அழைக்கப்படும்
தாராளவாதம்

தாராளமயம் (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அடிப்படையான கொள்கையாகும். இக் கொள்கை பரந்த எண்ணக்கருக்களையும், கோட்பாடுகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், பொருளியல் நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது கடமையாகக் கருதப்படுகிறது. தாராளமயத்தின் மூலம் அறிவொளிக் காலத்தில் இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, தலைமுறை உரிமை, அரசு மதம், காப்பாண்மையியம் (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை எடுகோள்கள் பலவற்றைத் தாராளமயம் ஏற்க மறுத்தது.
ஆடம் சிமித் என்பவராலும் பிறராலும் உருவாக்கப்பட்ட பொருளியல் தாராளமயம், அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக கட்டற்ற சந்தை, கட்டற்ற வணிகம் என்பவற்றை ஏற்றுக்கொண்டது. தனியார் சொத்துரிமையும், தனிப்பட்ட ஒப்பந்தங்களுமே பொருளியல் தாராளமயத்தின் அடிப்படைகள்.
பண்பாட்டுத் தாராளமயம் என்பது, பாலியல் சுதந்திரம், மத சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், தனிப்பட்ட வாழ்வில் அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு என்பவை உள்ளிட்ட தனியார் சுதந்திரங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளது.
வெவ்வேறு வடிவங்களிலான தாராளமயங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், பல அடிப்படையான கொள்கைகளில் அவை ஒன்றுபட்டுள்ளன. சிந்தனைச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமாக எண்ணங்களைப் பகிர்தல், தனியார் சொத்துரிமை, கட்டற்ற சந்தை, வெளிப்படையான அரசு முறைமை என்பன இவற்றுள் அடங்கும்.

தாராளமயம் என்னும் உணர்வு மேல்நாட்டுச் சிந்தனைகளில், பண்டைய கிரேக்கரர்களிடையே தனித்தனியெ தோன்ற ஆரம்பித்தது. 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு சிந்தனையாளர்களிடையே, அறிவொளி காலகட்டத்தில், பெரிய அளவில் தோன்றியது. ஆங்காங்கே பல இடங்களில், தாராளமயம் பற்றிய சிந்தனைகளை சேகரித்து, அதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர், ஆங்கில தத்துவவாதி 'சான் லாக்கே' ஆவார்
சான் லாக்கே, 'அரசாங்கம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள்' என்னும் தலைப்பில் ஒரு படைப்பை 1689ம் ஆண்டில் எழுதினார். இந்த கட்டுரைகள் நிலைநாட்டிய இரண்டு முக்கிய கருத்துகள், பொருளாதார தாராளமயம் (அதாவது செல்வம் சேர்ப்பதுக்கான உரிமை) மற்றும் அறிவொளிச் சுதந்திரம். அவரது கோட்பாடான இயற்கை உரிமைகள், நவீன தாராளமயத்திற்கு அடிப்படையாக திகழ்ந்தது. அமெரிக்க புரட்சியிலும், பிரெஞ்சு புரட்சியிலும் இந்த இயற்கை உரிமையின் தாக்கமே அதன் தாராளமயத்தை வளரச் செய்தது. லாக்கே ஜனநாயகத்துக்கு எதிரானவர், தனிமனிதனின் செல்வம் சேர்க்கும் உரிமையே முக்கியம் எனக் கருதியவர்.
பிராஞ்சு நாட்டை சேர்ந்த பாரன் தி மாண்டிஸ்கே (1689 - 1755) புதிய சட்டத் திட்டங்களை பரிந்துரைத்தார். இந்த சட்டத் திட்டங்கள், அரசு குடுமபத்தினற்கு எதிராக அமைந்தது. பல பிராஞ்சு அறிஞர்கள் சேர்ந்து 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்என்னும் பொருளாதார அமைப்பை வடிவமைத்தனர்.

அறிவொளி காலகட்டத்தின், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளரான ஜீன் ஜாக்ஸ் ரோஸ்ஸே (1712 - 1778) , சில முக்கிய தாராளமயம் கொள்கைகளை வடிவமைத்தார். மக்கள் தங்களது சிறு உரிமைகளை விட்டுத்தர வேண்டும், அப்போது தான் சமூக ஒழுங்கு இருக்கும்.
ஸ்காட்டீஸ் அறிவொளி காலகட்ட சிந்தனையாளர்கள், டேவிட் ஹ்யூம்(1711 - 1776), ஆடம் ஸ்மித் (1723 - 1790) தாராளமயத்தின் சித்தாந்தத்திற்கு பங்களித்தனர். ஹ்யூமைப் பொருத்த வரையில், மனிதனின் அடிப்படை குணங்கள் கட்டுப்பாடுகளை இறுதியில் உடைத்து எரியும். தனிமனிதனால் தனது அறநெறிகளையும், பொருளாதாரத்தையும் தானே வடிவமைத்துக் கொள்ள முடியும் என ஆடம் ஸ்மித் விவரித்தார். தனி மனிதன் தனது முயற்சிகளை சுதந்திரமாக, அரசாங்கத்தின் கட்டுப்பாடின்றி மேற்கொண்டால் தான், நாட்டின் பொருளாதரம் வளரும். இயற்கையாகவோ அல்லது தேவையின் பொருட்டோ, தனிமனிதன் தன் வாழ்வாதாரத்தை தேர்ந்தெடுக்கும் போது தான், சமுதாயத்திற்கு நன்மை கிட்டும். 1776ம் ஆண்டில் படைத்த நாட்டின் வளமை என்னும் இவரது படைப்பு வலியுறுத்துவது, கட்டுப்பாடின்றி திகழும் சந்தைக்கு தாமாகவே தன்னைச் சீர் திருத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.
அமெரிக்க புரட்சியின் (1775 - 1783), அடிப்படைகளை கட்டமைத்தவர்கள், தாமஸ் பேயின் (1737 - 1809), தாமஸ் ஜெப்பர்சன் (1743 -1826) மற்றும் சான் ஆடம்ஸ் (1735 - 1826). இவர்கள் வாழ்க்கை தாராளமயத்தின் போராட்டம் பெயரில் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டனர். முக்கியமாக பேயினின் துண்டுப்பிரசுரங்களான 'பொது அறிவு' மற்றும் 'மனிதனின் உரிமை' மக்களிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது.[1]
தாராளமயம் கொள்கைகளின் வரலாற்றில் மற்றொரு முக்கிய தாக்க, பிரஞ்சு புரட்சி (1789 - 1799). இதில் அமெரிக்க புரட்சியைக் காட்டிலும் கிளர்ச்சி மேலோங்கித் தென்ப்பட்டது.
19ம் நூற்றாண்டில், தனது படைப்பு தாராளமயம் (1859) மற்றும் பல படைப்புகள் மூலம், சான் சுடூவர்ட் மில்(1806-1873) பிரபலமாக்கினார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு பிரிவுகள் தென்பபட்டன. ஓரு பிரிவு அரசாங்கத்தை முற்றிலும் எதிர்த்து, மற்றொரு பிரிவின் கருத்து, பொருளாதாரம் பொருத்த வரையில் அரசாங்கத்தில் தலையீடு சிறிதளவில் தேவைப்பட்டது.
20ம் நூற்றாண்டில், வளர்ந்து வரும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக சமூக(நவீன) தாராளமயம் உருவானது. இதனை ஆதரித்த பிரபலங்கள், சான் மேய்நார்ட்' (1883 - 1946), பிராங்கலின் ரூஸவெல்ட் (1882 - 1945) மற்றும் சான் கென்னத் கால்பிரேத் (1908 - 2006)

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு

கருத்துகள் இல்லை: