#பிரசாந்த்பூஷன் விசயத்தில் உச்ச நீதிமன்றம் அதிகப்படியாக, மிகை உணர்ச்சியுடன் செயல்பட்டுள்ளது.
நீதிமன்றம் கொஞ்சம் பொறுமை காத்தால் எதுவும் குடிமுழுகிப் போகுமா?
கொஞ்சம் காலம் தாமதித்திருந்தால் எல்லாம் முடிந்து, மடிந்து போயிருக்குமா?
இந்தியாவின் தலைமை சட்ட அதிகாரியிடம் #Attorney_General கலந்து ஆலோசிக்காமல் நீதிமன்றம் அவசரம் காட்டி விட்டது!!!
தரவுகளின் அடிப்படையில் நீதித்துறையை விமர்சிப்பது எப்படி நீதிமன்ற அவமதிப்பாகும்?
நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று ஒருவர் சொன்னால், அதனை நிரூபிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும்!!!
அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால் அப்போது அவருக்கு தண்டனை வழங்குங்கள்!!!
நீதித்துறை மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு தவறு என்று நீதிபதிகள் தாங்களாக நினைத்துக் கொண்டு, குற்றம்சாட்டுபவருக்கு வாய்ப்பை மறுக்கக்கூடாது!!
மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து நடப்பதன் மூலம் தான் நீதித்துறையின் மாண்பும், பெருமையும் பாதுகாக்கப்படும், மாறாக நீதிமன்ற அவமதிப்பு மூலம் அவர்களை முடக்குவது உகந்தது அல்ல!!!
ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு நம்பிக்கை, அபிப்பிராயங்கள் இருக்கும், உச்சநீதிமன்றத்திற்கு பிடிக்காத அபிப்பிராயங்களை மக்கள் வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்காக அவர்களை தண்டிப்பீர்களா???
என்று ஆழமான, அழுத்தமான கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நோக்கி கேட்டிருக்கிறார் முன்னாள் அட்டார்னி ஜெனரல், சட்ட நிபுணர் #SoliSorabjee
இந்தக் கேள்விகளுக்கு நீதிபதிகள் என்ன பதில் சொல்லுவார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக