20 செப்., 2020

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய சித்த மருத்துவர் வீரபாபுவின் 10 ரூபாய் மருத்துமனை !

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய சித்த மருத்துவர் வீரபாபுவின் 10 ரூபாய் மருத்துமனை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துமனை என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சித்த மருத்துவம் மட்டுமல்லாமல் ஆங்கில மருத்துவமும் பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும் என்றும், கட்டணம் வெறும் 10 ரூபாய் எனவும் உழைப்பாளி மருத்துமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  

ஏற்கனவே சாலிகிராமத்தில் 10 ரூபாய்க்கு உழைப்பாளி உணவகம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது உழைப்பாளி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

நன்றி :

கருத்துகள் இல்லை: