நவீன சிங்கப்பூரின் தந்தை திரு "லீ குவான் யூ" பிறந்தநாள் இன்று..
சிங்கப்பூர் போராடிச் சுதந்திரம் பெற்ற நாடல்ல, உலகிலேயே வலுக்கட்டாயமாகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நாடு. மலேசியாவில் இருந்து பிரிந்த போது சிங்கப்பூர் மிக மோசமான நிலையில் இருந்தது.
நாட்டை உயர்வு நிலைக்குக் கொண்டு வர அனைவருடனும் இணைந்து முயற்சிகளை எடுத்தார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ.
சிங்கப்பூரின் துவக்கத்தில் தமிழர்களுக்கும் மிக முக்கியப் பங்குள்ளது. சிங்கப்பூர் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் தமிழர்களின் உழைப்பும் பங்கும் இருந்ததாலே இன்றும் தமிழர்கள் பாரம்பரியமாகச் சிங்கப்பூரில் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் 10 சதவீத மக்களைக் கொண்ட இந்தியர்களுக்கு மதிப்பு அளித்து ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழுக்கு இடம் கொடுத்தவர் திரு லீ.
நவீன சிங்கப்பூரின் தந்தை
திரு லீயைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு நாட்டை உயர்ந்த இடத்திற்கு 30 வருடங்களில் கொண்டு வருவது எளிதானதல்ல.
இதன் பின்னால் கடுமையான உழைப்பும், விடா முயற்சியும், நம்பிக்கையும் உள்ளது.
மோசமான நிலையில் இருந்த சிங்கப்பூரை முன்னேற்ற மென்மையான நடவடிக்கைகள் உதவாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ பல கட்டுப்பாடுகளை, சட்டங்களை இயற்றினார்.
மக்களும் சிங்கப்பூரை முன்னேற்றக் கடுமையாக உழைத்தார்கள்.
கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் திரு லீ சர்வாதிகாரி போலவே எண்ணப்பட்டார். இதுகுறித்துப் பல எதிர்மறையான கருத்துகள் உண்டு.
இன்றும் சமூகத் தளங்களில் திரு லீயை திட்டுபவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் கிடையாது.
இது திரு லீ க்கும் பொருந்தும்.
“சிங்கப்பூரை நிறுவனம் போல நடத்துகிறார்கள்” என்பது உட்படப் பல குற்றச்சாட்டுகள் உண்டு என்றாலும் அனைவருக்கும் நல்லவராக இருக்க நினைத்து இருந்தால், சிங்கப்பூரை முன்னேறிய நாடாக நிச்சயம் மாற்றி இருக்க முடியாது.
சிங்கப்பூர் ஜனநாயக நாடாக இருந்தாலும், இந்தியா போல முழுமையான ஜனநாயக நாடாக இல்லாமல் கட்டுப்பாடுள்ள சுதந்திர ஜனநாயக நாடாக இருக்கிறது.
இங்கே அனைத்துமே செய்ய முடியும் ஆனால், கட்டுப்பாடான சுதந்திரத்தோடு.
தான் இறந்த பிறகு தன்னுடைய வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்று கூறி இருந்ததாக நினைவு.
அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்குச் சிரமம் கூடும் என்று.
நினைவுச் சின்னங்களில் திரு லீக்கு உடன்பாடில்லை. வயதான பிறகு அனைவரும் எதிர்கொள்ளும் நிலை தான் மரணம்.
நாட்டை முன்னேற்றி, மற்ற நாடுகளுக்குத் தன் நாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு வந்த திரு லீ, சாதித்த பிறகே தனது 91 வயதில் காலமாகி இருப்பதால் வருத்தம் கொள்ள எதுவுமில்லை.
இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூர் தனது தேசிய தினத்தை (ஆகஸ்ட் 9) கொண்டாடி மகிழ்ந்து இருக்கும் இன் நேரத்தில், அதைக் காணாமலே சென்று விட்டாரே! என்பது மட்டுமே அனைவருக்கும் வருத்தமளிக்கும் விசயம்.
நம்ம வீட்டில் ஒரு தாத்தாவோ பாட்டியோ பேரன் / பேத்தியின் திருமணத்திற்குக் கொஞ்ச மாதங்கள் முன்பு காலமானால் எப்படியொரு வருத்தம் இருக்குமோ அது போன்றது அவரின் மரணம்...
உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் அனைத்தும் திரு லீயின் இறப்பிற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வைத்தே அறியலாம், இவர் எந்த அளவிற்குப் பாகுபாடு இல்லாமல் உலக மக்களைக் கவர்ந்து இருக்கிறார் என்று.
தமிழர்கள் பலர் பட்ட கடன்களை அடைக்க இந்தச் சிங்கப்பூரே உதவியது.
சிங்கப்பூரை உருவாக்கிய திரு லீ, சம்பந்தமே இல்லாத மற்ற நாட்டு மக்களுக்கும் மறைமுகமாக உதவி செய்து இருக்கிறார்.
இந்தியாவின் ஏதோ ஒரு தமிழக கிராமத்தில் திரு லீ க்கு இரங்கல் பேனர் வைக்கிறார்கள் என்றால், அது விளையாட்டல்ல. சிங்கப்பூர் என்ற நாட்டால் வளர்ச்சி அடைந்ததின் நன்றி கடன்.
சிங்கப்பூர் இல்லையென்றால் இன்னொரு நாட்டிற்குப் போய் இருப்போம் என்றாலும், அங்கு நம் ஊர் போல உணர்வு, தமிழ், அருகாமை, பாதுகாப்பு இருந்து இருக்குமா! என்பது சந்தேகமே.
ஒட்டுமொத்த தமிழினமே உங்கள் பிறந்த நாளில் உங்களை வணங்கி🙏🙏 மகிழ்கின்றது..
🌹🙏💐
✍️.. அன்பு
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக