12 செப்., 2020

கருத்து மேடை : ஊரடங்கு தளர்வுகளால் கேஸ்கள் குவியுமா?

ஊரடங்கு தளர்வுகளால் கேஸ்கள் குவியப் போகின்றன என்று சிலர் பயப்படுகிறார்கள் . எனக்கென்னவோ கேஸ்கள் அப்படிக் கூடாது என நினைக்கிறேன். அப்படியே வந்தாலும் மரணங்கள் பெரிய அளவில் இருக்காது.

காரணங்கள்

1. ஏற்கனவே பலருக்கு வந்திருக்கும். குறைந்தபட்சம் 20-30 % பேருக்கு வந்து போயிருக்கும்

2. கோவிட் 19 அல்லாத வேறு வகை கொரோனா வைரஸ்கள் பல நூற்றாண்டுகளாக மனிதனைத் தாக்குகின்றன. அவற்றுக்கு உருவான எதிர்ப்பு சக்தி இதையும் தடுக்கலாம்.

மரணங்கள் குறைவதற்கு கீழ்கண்ட காரணங்கள் உதவிகின்றன 

3. சிகிச்சை முறைகள் வெகுவாக முன்னேறி உள்ளன. வெண்டிலேட்டர் அல்லாமல் ஆக்ஸிஜன் அளிக்கும் முறைகள், ஸ்டீராய்டு மருந்துகள், ரத்தம் உறையாமல் தடுக்கும் மருந்துகள் எனப் பல சிறந்த சிகிச்சை முறைகள் அறியப்பட்டுள்ளன.

4. ஏற்கனவே எதிர்ப்புசக்தி குறைவாக இருந்த பலரும் மரணமடைந்து விட்டதால் நோய்தொற்றால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை குறையலாம்.

5.வெளியே வந்து காற்று, சூரிய வெளிச்சம் ஆகியவை பட்டு கொஞ்சம் உடலியக்கமும் அதிகரித்து மன அழுத்தமும் குறைவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

6. பரிணாம இயல் தத்துவப்படி வைரஸ் மனிதர்களோடு அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டுமானால் கொஞ்சம் தனது கொடூரத்தன்மையைக் ( virulence) குறைத்து கொள்ளக் கூடும். மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதன் மூலம் இது நடக்கலாம்.

இவையெல்லாமே அனுமானங்கள்தான்.
பார்க்கலாம். எனது  விரல்களைக் குறுக்காக வைத்திருக்கிறேன். 

- டாக்டர் ராமானுஜம்.

கருத்துகள் இல்லை: