குறள் : 627
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்
மு.வ உரை :
மேலோர் உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.
கலைஞர் உரை :
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.
Kural 627 Explanation :
The great will not regard trouble as trouble knowing that the body is the butt of trouble.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக