12 நவ., 2020

கருத்து மேடை : இந்தியர்களிடம் கொரோனா தொற்று குறைவு ஏன்?

இந்தியர்களின் சுகாதாரமற்ற பழக்கவழக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என்றும். இதுவே இந்தியர்களால் கொரோனாவை எளிதாக முறியடிக்கமுடிகின்றது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்களாம். இதை தான்யா நாம் ஆரம்பத்தில் இருந்து கூறுவது. இது புரியாமல் sanitizer sanitizer என்று பைத்தியங்கள் போல் திரிகின்றது ஒரு கூட்டம்.

உடலின் எதிர்ப்பு சக்தி, எவ்வளவுக்கெவ்வளொ கிருமிகளுக்கும் உடலுக்கும் இருக்கும் தொடர்பு அதிகமாகின்றதோ அவ்வளவுக்கெவ்வளொ  அதிகரிக்கும். அதாவது வீட்டில் பாலூட்டி வளர்த்த புலி, பூனையை போல் வீரியம் குறைந்தும், காட்டில் கண்டபடி வாழும் புலி முழு வீரியத்துடனும் இருப்பதை போல். உலகில் இருக்கும் அனைத்து உயிர்கள் மத்தியில் மனிதன் மட்டுமே sanitizer (கிருமி நாசினி) பயன்படுத்துகிறான். ஆனால் மனிதனை தவிர வேறு எந்த மிருகம் மருத்துவமனையை நம்பி வாழுகின்றது?

இது ஒரு Common sense. என்ன செய்வது இன்று common sense கூட ஆராய்ச்சி செய்து தான் இன்று பலர் புரிந்துகொள்ளுகின்றார்கள். இதை தெளிவான புத்தியுடையவர்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். இதற்காக அனைவரும் குப்பையில் போய் வாழ்வோம் என்று நான் கூறவில்லை. ஓரளவிற்கு சுத்தமாக இருந்தால் போதும் அதேசமயம் ஒரேயடியாக சுத்தம் செய்வது ஒரு மன நோய் என்கிறேன். இது தொடர்பாக பல மாதங்கள் முன் ஒரு காணொளி கூட வெளியிட்டிருந்தேன். பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

https://youtu.be/YrACYUp16nQ

அதற்காக இந்த செய்திகளில் கூறப்படுவது போல் இந்தியர்களை சுகாதாரமற்றவர்கள் என்று கூற இயலாது. ஆனால் ஒரேயடியாக சுத்தம் சுத்தம் என்று பித்து பிடித்து திரியும் வெள்ளையர்களை போல் நாம் வாழ்வதில்லை என்று வேண்டுமானால் கூறலாம்.

https://youtu.be/Emc8ZB7FWJs

நன்றி :

கருத்துகள் இல்லை: