நேரம் கிடைக்கும் போது எஸ்.ராமகிருஷ்ணன் U- Tube ல் பேசிய பல உரைகளில் இயன்றதை ஓரளவு கேட்டிருக்கிறேன்.
அப்படி கேட்கும் போது - அவர் சொல்கின்ற இலக்கிய பிரதியோ, எழுத்தாளர்களோ நமக்கு புதிதாய் அறிமுகமாகிறார்கள்.
நாம் ஏற்கனவே அறிந்ததாகவே இருக்கும் - வாசித்த நூல் மனதில் எங்காவது கொஞ்சமாய் தங்கிப் போயிருக்கும் - ஆனால் அவர் பேசப் பேச முழுதாய் நமக்குள் விரியும் - நாம் புரிந்து கொண்டதிலிருந்து வேறு கோணத்தில் புது அனுபவமாய் நமக்குள் இறங்கும் போது புன்னகையோடு மனசும் லேசாகி நெகிழும்.
இலக்கிய ஆசிரியர்களைப் பற்றி அறிந்திருப்போம் - அவர் பேசப் பேச நமக்கு அவரையும் கேட்பது முழுதும்
வேறு மாதிரி, கூடுதல் அறிமுகமாய் இருக்கும் போது சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ளும்.
சில தினங்களுக்கு முன் ஜெயகாந்தன் நினைவு நாளில் ஒரு மணி நேரம் பேசியதில் - அவரின் சில கதைகளை விளக்கினார் - அவைகளை என்றோ வாசித்திருந்தாலும் புதுக்கோணத்தில் கேட்பதாய் பரவசப்படுத்தியது.
இன்று தி.ஜானகிராமனின் ஐப்பான் பயண நூல் "உதயசூரியன்" பற்றி பேசினார்.நல்லவேளை அதையும் நான் வாசித்திருந்தேன் (தி.ஜா வுடையது எது கிடைத்தாலும் விட மாட்டேன்) .
கேட்கும் போது திஜா சொல்லாத விஷயங்களையும் தனது அனுபவங்களோடு சேர்த்து சொல்லக் கேட்பது உண்மையில் நம்மையும் பயணப் படுவதை நோக்கிய ஈர்ப்பாய் இழுக்கும்.
வாசிப்போடு தனக்குள்ள உறவையும் இணைத்து வெளிப்படுத்தும் போதே அது அடுத்த தளத்திற்கு செல்கிறது.எஸ்.ரா அதைக் கட்சிதமாக செய்கிறார்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக