17 நவ., 2020

பக்தி உலா : ஆலங்குடி குருபகவான் ஆலயம்


ஆலங்குடி குருபகவான் 
குருபெயர்ச்சி தீபாராதனை..!

குரு பகவானுக்கு என மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் விளங்குகின்றது. 
    
குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோயிலாக ஏலவார் குழலி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர்
கோயில் உள்ளது.

மூலவர் ஆபத்சகாயேஸ்வரர்
சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இவர் குருவின் அம்சமாக பார்க்கப்படுகிறார்.
அம்பிகை இந்த தலத்தில் தவம் இருந்து இறைவனைத் திருமணம் செய்துகொண்டார்.

நாக தோஷம் நீங்க, மனக் குழப்பம், பயம் நீங்குவதற்கு இங்குள்ள விநாயகரையும், திருமணம் தடை, கல்வியில் சிறக்க இந்த ஆலயத்தில் பிரார்த்தித்து வழிபடலாம்.

இந்த திருக்கோயில் குரு பகவானின் சிறப்பு தலமாகப் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.

இந்த கோயிலில் உள்ள குருபகவானுக்கு மாசி மாதம் வரும் வியாழக்கிழமைகளில் மட்டும் தான் அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

குரு பெயர்ச்சி தினத்தை விட இந்த மாசி மாத வியாழக்கிழை வழிபாடு மிகவும் விஷேசமாக இந்த திருத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது.

தட்சிணாமூர்த்தி ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால் இதற்கு ஆலங்குடி என பெயர் வந்தது. இங்கு ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.

மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள், அந்த வகையில் இந்த கோயிலில் நுழைந்ததும் அம்மன் சன்னதி, பின்னர் சுவாமி சன்னதி, பின்னர் குருவின் சன்னதி அமையப்பெற்றுள்ளது.

Guru Payarchi Deeparadhanai Darisanamm Today from Guru Koil,
Arulmigu Abathsahyeswarar Temple, Alangudi, Tamil Nadu.

நன்றி  :

கருத்துகள் இல்லை: