24 நவ., 2020

ஆன்மீகம் : கந்த சஷ்டி பிரார்த்தனை (தாமதமான பதிவு)

   கந்த சஷ்டி பிரார்த்தனை
        (தாமதமான பதிவு)

தனித்தது பழனியில்- சினம்
தணிந்தது திருத்தணியில்- அசுரர்
பணிந்தது செந்தூரில் - ஈசன்
பணிந்து பாடம் கேட்டது சுவாமிமலையில்
கனியில் பாடம் கற்றது பழம் உதிர் சோலையில்
மணி அணி தேவயானை மணம் பரங்குன்றத்தில்
இஷ்ட தெய்வம் ஆறுபடையோனே! பணிகிறேன்
சஷ்டித் திரு நாளில் உன் பாதம் பணிந்து! 
தடை தாண்டி வேண்டிய வாழ்வருள அசுரர்
படை அழித்த இந்நாளில் நீயருள் கனிந்து!

கருத்துகள் இல்லை: