சிறு வயது முதலே எனக்கு map reading மிகப் பிடித்த விசியம். இணையம் இல்லாத 80களில் அட்லாஸ் மேப்களை மணிக்கணக்கில் ஆராய்ந்து, மனப்பாடம் செய்யும் வழக்கம் இருந்தது. உலக நாடுகள் பற்றிய பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடிந்தது. கோவை, சென்னை போன்ற நகரங்களை city maps கொண்டு, பழக்கப்படுத்துக் கொண்டேன். முதன் முதலில் 1992இல் டெல்லி சென்ற போது, பாக்கெட் மேப்பை பையில் வைத்துக் கொண்டு, இந்தி தெரியாமல், மிக எளிதாக டெல்லியை சுற்றினேன். சென்னையில் செட்டில் ஆன போது, பல வருடங்களாக என் பைக் பெட்டியில் சென்னையின் விரிவான மேப் ஒன்று எப்போதும் இருக்கும். மிக எளிதாக நகரை 'அறிந்து' கொள்ள முடிந்தது. இன்று கூகுள் மேப்ஸ் காலம். அற்புதமான வரம் அது. உலகின் எந்த மூலை முடுக்கையும், நம் கைபேசி மூலம் துல்லியமாக ஆராய முடிகிறது. விக்கிபீடியா மேப்புகளையும் பயன்படுத்துகிறேன். புதிதாக எங்கு சென்றாலும் முன் கூட்டியே அந்த இடத்தை பற்றி கூகுள் மேப்ஸில் thorough home work செய்துவிட்டு செல்கிறேன்.. ஏதாவது நாவல் படித்தாலும், அதில் விவரிக்கப்படும் ஊர்கள், நாடுகள் பற்றி உடனே கூகுள் மேப்பில் ஒரு glance பார்த்து விட்டு படிக்கும் வழக்கம் வந்துவிட்டது. தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை மீள்வாசிப்பு செய்யும் போது, கூகுள் மேப்ஸில் கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவை தேடுகிறேன்...
பசங்களுக்கு map reading பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
#Maps are my best friends..
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக