22 டிச., 2020

இன்றைய குறள்

குறள் : 723
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்

மு.வ உரை :
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்  கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

கலைஞர் உரை :
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

சாலமன் பாப்பையா உரை :
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

Kural 723
Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar
Avaiyakaththu Anjaa Thavar

Explanation :
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

கருத்துகள் இல்லை: