திருவெம்பாவை- பாடல் 6- டிசம்பர் 21-2013
நேற்று நீ என்ன சொன்னாய், பெண்ணே.. நீ...
எங்களுக்கு முன் துயிலெழுந்து , நீராடி விரைந்து வந்து, எங்களை எழுப்பி, ஆலயம் அழைத்துச் சென்று ஈசனை பூஜிப்போம் என்று சொன்னாய்!!!!
என்ன இது இன்னமும் இவளைக் காணோம் என்று காத்திருந்து வந்து பார்த்தால், நீ இன்னமும் உறக்கம் கலையாமல் இருக்கிறாய்.. உனக்கு இன்னமும் பொழுது புலரவில்லை போலிருக்கிறது
ஈசனைப் பாடி வந்த எங்களுக்கு நீ பதில் சொல்லம்மா.. ஈசனை தொழுது பேறு பெருவோம்.. உறக்கம் கலைந்து எழுந்து வாடியம்மா
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்
மற்றும் முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக