பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்போம்!
1960-1970 களில் 6000 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணைச் சதுப்புநிலம் தற்போது 570 ஹெக்டேராகச் சுருக்கப்பட்டு, பலவிதச் சுற்றுசூழல் சீர்கேடுகளைச் சந்தித்து வரும் சூழ்நிலையில் இந்த நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
ஏரிக்கும் சதுப்பு நிலங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் கூட இன்னும் நமக்குத் தெரியாமல் இருப்பது பெரிதும் கவலையளிக்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவேரி, பாலாறு சென்னை வழியாகப் பாய்ந்து ஓடி கடலில் கலந்தது எனப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்த்த திரு ராமசாமி, ஜே. சரவணவேல், ஜி.யாதவா மற்றும் ர.ரமேஷ் அவர்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூவம், அடையாறு மற்றும் கொற்றலை ஆறுகள், காவேரி,பாலாறு பாய்ந்து ஓடிய தொன்மையான வழித் தடங்கள். அதனால் தான் சென்னையைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஏரிகள், கழிமுகங்கள் (Deltas) மற்றும் சதுப்பு நிலங்கள் உள்ளன. நில அமைப்பு மற்றும் பல காரணங்களால் காவேரி மற்றும் பாலாறு தன்னுடைய ஓடும் பாதையை மாற்றித் கொண்டு தற்போது பூம்புகார் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் சென்று கடலில் கலக்கிறது. இந்த ஆறுகள் உருவாக்கிய கழிமுகங்ளையும், அதன் சுற்றி வாழும் மக்களுக்கும் வேலியாக/அரணாக இருக்கும் சதுப்பு நிலங்களைத் நம் முன்னோர்கள் கழிவேலி எனப் பெயர் வைத்தனர்.
பல ஆயிர வருடமாகப் காவேரி மற்றும் பாலாற்றின் உபரிநீர் ஓடி, இந்த இடத்தில் சேர்ந்ததால் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி உருவானது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி என்பது கடல், ஆறு, ஏரிகள், மலைகள் மற்றும் காடுகள் தொடர்புடைய ஒரு சதுப்பு நிலப் பகுதியாகும். கார்பன் டேட்டிங் முறைப்படிப் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தோராயமாக 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆறுகள் கொண்டு வந்து சேர்த்த மண் கனிம ஊட்டச்சத்துக்களால் நிறைந்திருக்கும். தொடர்ந்து நீர் இருப்பதால், மண் முழுமையாக நனைத்து (saturated), ஆக்ஸிஜ்ன் மிகவும் குறைத்துக் காணப்படும், அதனை Hydric Soil எனக் குறிப்பிடுவர். அதனால் இங்கு இருக்கும் தாவரங்கள் தனித்துவமாக இருக்கும்.
மழைக்காலங்களில் பள்ளிக்கரணைச் சுற்றியுள்ள உள்ள ஏரிகளில் இருந்து வரும் தண்ணீர் பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் வழியாகத் தான் கடலைச் சென்றடையும். இந்தச் சதுப்பு நிலம் தேவையான தண்ணீர்த் தேக்கிக் கொண்டு மற்றதை சீராகக் காரப்பாக்கம் மற்றும் துரைப்பாக்கம் இடேயேயுள்ள ஒக்கியம் மடுவு வழியாக வெளியேற்றிவிடும்.
வறட்சிக் காலங்களில் தேக்கிய நீரைச் சீராக வெளியேற்றி இந்தப் பகுதிகளை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும். அதனால் தான் இந்தப் பகுதித் தாவரங்கள்,பறவைகள் மற்றும் பல உயிரினங்கள் இருக்கின்ற தனிச் சுற்றுச்சூழல் அமைப்பாக உள்ளது.
இதன் நீர்வழிப் பாதைகள் எல்லாம் ஆக்கிரமிப்பட்டதால் தான், மழைக்காலங்களில் நீர்ச் செல்ல வழியில்லாமல் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனைப் புரிந்துகொள்வது அவசியம்.
அதுமட்டுமல்லாமல் சதுப்பு நிலங்கள் நிலத்தடி நீரை மருவூட்டம் செய்து அந்தப் பகுதி மக்களின் நீர்த் தேவையைப் பூர்த்திச் செய்கின்றது. சதுப்பு நிலங்கள் இயற்கையான மாசு வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன. நீரிலுள்ள மாசுபடுத்திகள் மற்றும் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளைத் தடுத்து, நீரைத் தூய்மை படுத்துகின்றன. சதுப்பு நிலங்கள் தாவரப் பொருள்களை விடுவித்து, அங்கு இருக்கும் ஊயிரின்ங்களுக்கும் மட்டும்மல்லாமல், கடலில் கலக்கும் கால்வாய் வரை உள்ள ஊயிரினங்களுக்கு உணவு அளிக்கிறது.
அதனால்3000 ஆண்டுப் பழமையான பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தைச் சாதாரண ஏரியைப் போல் வெறும் நீர்த் தேங்கியிருக்கும் நீர்நிலையாக நினைத்து, ஆழப்படுத்தினால் நிறைய நீர்த் தேக்கிப் பயன்படுத்தலாம் என எண்ணுவது மிகப்பெரிய தவறு.
பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தும் எண்ணத்தைக் கைவிட்டு, பள்ளிக்கரணை மற்றும் சுற்றியிருக்கும் ஏரிகள் உட்பட அனைத்தையும் பாதுகாக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
#stopdredgingpallikaranai #savepallikaranai
முருகேசன்
கிழக்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு(Eastern Ghats Conservation Network)
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக