நூல் : காதுகள்
வகை : புனைவு
ஆசிரியர்: எம்.வி. வெங்கட்ராம்
என்றாவது உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறீர்களா? 'அது' சொல்லி (நல்லதோ/கெட்டதோ) எதையாவது செய்து இருக்கிறீர்களா? ஆம் என்றால், வாழ்த்துக்கள்! இது உங்களுக்கான புத்தகம்.
நமது எண்ணங்களுக்கு குரல் இருந்து அவை நம் காதுகளுக்கு கேட்டு கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை மகாலிங்கம் (எ) மாலி என்னும் படைப்பின் மூலம் விவரிக்கிறார் ஆசிரியர்.
மாலி - கூச்ச சுபாவம், நல்ல வேலை, பிறகு தொழில். நலமான வாழ்க்கை. ஒரு கட்டத்தில் செல்வமிழந்து நடுத்தெருவுக்கு தள்ளப்படுகிறான். நாட்கள் செல்ல செல்ல அவனது காதுகளில் விசித்திரமான பல ஒலிகளை கேட்கிறது. ஆபாச சொற்கள், காமப்பேச்சுக்கள் என்று அவனை சிந்திக்கவிடாமல் வதைக்கிறது. 'முருகன்' அவனை நெறிதவறாமல் நடக்கசொன்னாலும், 'காளி' அவனை நிலைகுலைய செய்கிறது. மாலியினுள் நடக்கும் இந்த போராட்டமும் அது அவனது இயல்பு வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றது என்பதுமே "காதுகள்".
ஆசிரியர், மகாலிங்கம் என்கிற கதாபாத்திரம் தான்தான் என்றும், தன் 20 வருட வாழ்க்கையின் அனுபவம் தான் 'காதுகள்' என்கிறார்.
இது ஒரு அசாத்திய படைப்பு என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் மகாலிங்கத்தை போல் புறம் & அகச்சூழலை எதிர்கொள்ளும் போராட்டத்தை கடந்து வந்திருப்பான். ஒரு வேலை இந்த நாவல் அசாத்திய படைப்பு என்று கருதுகிறீர்கள் என்றால், நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அசாத்தியமானது தான்!
"வாழ்க்கையை என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும், உயிரற்ற சடப்பொருள்களையும் நான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்த சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பி வைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சி தான் என்னுடைய இலக்கியப் படைப்பு. என்னை தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் "
- எம்.வி. வெங்கட்ராம்
சாஹித்திய அகாதெமி விருது பெற்ற இந்த நாவல் ஒரு MUST READ
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக