காலநிலை மாற்றத்தை விட எந்த விதத்திலும் குறைவில்லாத மானுடம் சந்திக்கும் மற்றொரு சிக்கல் “பல்லுயிர் அழிப்பு” (biodiversity loss). கடந்த 2019ஆம் ஆண்டு @ipbes வெளியிட்ட அறிக்கையில் இன்னும் சில ஆண்டுகளில் 10லட்சம் உயிரினங்கள் இல்லாமல் போய்விடும் என்று சொல்லப்பட்டிருந்தது. காடுகள் அழிக்கப்படுவது, நிலப்பயன்பாடு மாற்றம், காலநிலை மாற்றம், அதிதீவிரமான கடல் வள பயன்பாடு என பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இவை எல்லாவற்றிற்கும் காரணம் மனிதர்களாகிய நாமே. தாவரங்கள் ஒளிசேர்க்கையின் மூலமாக கார்பன் உள்வாங்கப்பட்டு ஆக்சிஜன் வெளியிடப்படுகிறது. இந்த செயல்பாட்டின் மூலம் மட்டும் வருடத்திற்கு சுமார் 11பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்திலிருந்து அகற்றப்படுகிறது. பெருங்கடல்களும் கார்பனை உள்வாங்கி கொள்கின்றன.
நமக்கு உணவாகும் பயிர்களில் சுமார் 75%தத்தை மகரந்த சேர்க்கை செய்வது விலங்குகளே. காலநிலை மாற்றம் பேசு பொருளாக மாறியிருப்பதற்கு காரணம் அதை இவ்வளவு “கார்பன் உமிழ்வு" என எண்ணிக்கையில் கொண்டுவந்து விட முடியும், ஆனால் பல்லுரியம் வழங்க கூடிய சூழல் சேவைகளை கணக்கிடுவது கிடையாது, ஆனால் காலம் கடந்துகொண்டு வருகிறது. பல்லுரிய அழிப்பு குறித்து நாம் அதிகமாக கவலைப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக