எழுத்து இலக்கிய அமைப்பு சில ஆண்டுகளுக்கு
முன்னால் கைராட்டை கோபம்
என்ற என் சிறுகதைத்
தொகுப்பிற்கு முதல்பரிசு அளித்து 45000 ரூபாய் ராயல்டியை மேடையில் வழங்கினார் முன்னாள்
நடுவண் அமைச்சரும் இவ்வமைப்பின் தலைவருமான ப.சிதம்பரம்
அவர்கள்.இத் தொகுதிக்கு வண்ணநிலவன் முன்னுரை
பெற விரும்பினேன்.முப்பதாண்டுககால நண்பர்.என்மீது மிகுந்த அன்பு கொண்டவர்.அதற்காக
என் தகுதியை மீறிய பாராட்டை அவரிடம் நான்
எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அவர் தந்த கவருக்குள் இருந்த அணிந்துரையில் எனக்கு
ஒரு அதிர்ச்சி காத்திருந்தது
என் எழுத்து பற்றிய எதிர்மறையான விமர்சனத்தை அதில் முன்
வைத்திருந்தார் வ.நி. நண்பர்கள் அந்த விமர்சன வரிகளை நீக்கிவிட்டு பிரசுரிக்கலாம் எனறனர் நான்
மறுத்து விட்டேன்.வண்ணநிலவன் அபிப்பிராயம் முழுமையாகப்
பிரசுரம் கண்டது.அவர் எனக்கு
அணிவித்த மாலையில் உள்ள முட்கள் உறுத்தவே செய்கின்றன
உண்மையின் உறுத்தல்
பூக்களை விட சுகமாக இருக்கிறது
நன்றி :
தஞ்சாவூர்க்கவிராயர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக