20 ஜூலை, 2021

நூல் நயம்

இருபது வருஷம் முன்ன எங்க ஊர் library ல வாசிச்ச புத்தகம் இது அன்றைக்கு முதல் பாகம் மட்டுமே வாசிக்க முடிந்தது

அன்றைய மனநிலைக்கும்  இன்று நான் இந்த புத்தகத்தை வாசித்தப்போது என் சிந்தனை எண்ணத்திர்க்கும் எவ்வளவு வித்தியாசம் தெரிகிறது அப்படியானால் அன்று நான் வாசிச்ச எல்லா புத்தகங்களையும் மறுபடிவாசிக்க முடியுமா என்ன ..??

தொடர்ந்து 12 மணி நேரத்தில் இந்த 600 பக்க புத்தகத்தையும் வாசித்துமுடித்துவிட்டேன்   

இந்தியாவில் இதுவரை எழுதப்பட்ட மிகமிக சிறந்த முதல் பத்து  புத்தகங்களில் "" வால்காவிலிருந்து கங்கைவரை "" புத்தகமும் ஒன்று

எங்கோ பிறந்து பிழைப்பிற்காக  இங்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு நாடோடி கூட்டம் இந்த மண்ணை ஆக்கிரமித்து இன்றுவரை ஆளும் சுயநலவாதிகளின் கதையிது 

இதில் ஆரம்ப கதைகளில் சில முரண்பாடுகளும் உண்டு 

ராகுல சங்கிருத்தியாயன் என்றால் கேள்வியே கூடாதா என்ன ???

இந்த புத்தகத்தில் முதல்சில கதைகளில் அசூர தமிழர்களைபற்றி எழுதுகிறார் அதில் ''அசுரர்கள் தான் முதலில் ஜாதிய கட்டமைப்பை உண்டாக்கியதாகவும், அசுரர்களின் ப்ரோகிதர்களே ஜாதிய படிநிலையை வளர்த்தார்கள் என்றும் உளறுகிறார் ஆனால் ஆவரே அசுரர்கள் கல்வியில், நாகரிகத்தில், கலை,இலக்கியத்திலும் உயர்ந்தவர்கள் என்றும் ஆரியர்கள் நாடோடியாய் திரிந்த நாட்களிலேயே மிகப்பெரும் செங்கல் கோட்டைகள் கட்டி வாழ்ந்தார்கள் என்றும் சொல்கிறார்.ஆரிய நாயோடிகள் அரைநிர்வாணமாய் அலைந்த காலத்திலேயே இங்கு அசூர தமிழன் எழுத்துக்களால் பேசத்தொடங்கிவிட்டார்கள் என்கிறார் ஆனாலும் அசூரதமிழர்கள்தான் ப்ரோகித முறையையும்,ஜாதியகட்டமைப்பையும், அடிமை விற்பனையையும் செய்தார்கள் என்று கதை சொல்கிறார் 

ஆரிய பெண்கள் ஒருத்திக்கு பலர் என்று சுதந்திரமாக  நடந்த காலத்திலேயே 
அசூர தமிழன் "" யாதும் ஊரே யாவரும் கேளிர்"" என்றும் 
""யாயும் ஞாயும் யார கியரோ"" னு   உயர்ந்த நாகரிகத்தில் வாழ்ந்து உலகின் வாழும் எல்லோரையும் தனக்கு சமமாய் நினைத்த அசூர தமிழனை   சரியாய் வசிக்கவில்லை 
ராகுல சங்கிருத்தியாயன்  

இந்த புத்தகத்தின் கடைசி பக்கங்கள் காந்தியவர்களின் நிஜ முகத்தையும் ஜாதிய சுயநலத்தையும் மிக சாட்சியோடு மிகவெளிப்படையாய்  எழுதுகிறார் 

கடமைக்கு நானும் படிப்பாளினு பெருமைக்காய் வாசிக்காமல் ஒரு உண்மையான வாசகனுக்கு ஒரு சிறந்த ஆரிய வரலாற்று  புத்தகம் இது

நன்றி :

கருத்துகள் இல்லை: