#rm222
ஒன்பது வேடிக்கை கதைகள் - அந்தோன் செக்கோவ்
இந்நூலையை தமிழில் வானதி மொழிப்பெயர்த்துள்ளார். அவரது இயற்பெயர் முத்துபிரகாஷ்.
செக்கோவ் என்றாலே சட்டென்று நியாபகம் வருவது நகைச்சுவை தான். சிறுகதைகளை கேளியாகவும் நகைச்சுவை பாணியிலும் கையாளுவதில் செக்கோவுக்கு நிகர் செக்கோவே. ஒரு சிலர் அவரை ஓ ஹென்றியுடன் ஒப்பிடுவீர்கள். ஆனால் அது முற்றிலும் தவறு என்று அழுத்தந்திருத்தமாக சொல்கிறார் ஆசிரியர்.
செக்கோவ் எழுதிய ஒன்பது வேடிக்கை கதைகளை தொகுத்து மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர். அனைத்துமே அப்போது எழுதியிருந்தாலும் இக்காலத்திற்கேற்ற மாதிரியே புதுமையாகவே உள்ளது.
மிகவும் பிடித்தது என்று எதையும் சொல்லவியலாத நிலையில் இப்புத்தகத்திலுள்ள அனைத்து சிறுகதைகளுமே நான் மிகவும் ரசித்தது.
நன்றி🙏💕
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக