19 நவ., 2021

இன்றைய திருமந்திரம் - பாடல் #1313

திருமந்திரம் - பாடல் #1313: நான்காம் தந்திரம் - 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

இட்ட விதழ்க ளிடையந் தரத்திலே
யட்ட வாவிட்டதின் மேலே யுவ்விட்டுக்
கிட்ட விதழ்களின் மேலே குரோஞ்சுரோம்
விட்ட வாமாத்தாங் குரோங்கென்று மேவிடே.

விளக்கம்:

பாடல் #1312 இல் உள்ளபடி வரைந்த பதினாறு அட்சர எழுத்துக்களைக் கொண்ட வட்டத்தைச் சுற்றி எட்டு இதழ்களை வரைந்து அந்த இதழ்களின் நடுவில் இருக்கும் வெற்று இடத்தில் எட்டு முறை 'ஹா' எனும் எழுத்தை வரைந்து அதற்கு உச்சியில் 'உ' எழுத்தை சேர்த்து எழுத வேண்டும். இப்படி நெருக்கமாக வரையப்பட்ட எட்டு இதழ்களுக்குள் அவை அமர்ந்திருக்கும் வட்டத்திற்கு மேல் இதழ்களை ஒட்டியவாறு 'க்ரோம்' 'ஸ்ரோம்' என்ற பீஜங்களை எழுதி விட்டு அந்த இதழ்களுக்கு மேலே 'ஹாம் ஹாத்' மற்றும் 'ஹாம் க்ரோம்' ஆகிய பீஜங்களை எழுத வேண்டும்.

இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://kvnthirumoolar.com/song-1313/

நன்றி :

கருத்துகள் இல்லை: