20 நவ., 2021

இன்றைய திருமந்திரம் - பாடல் #1314

திருமந்திரம் - பாடல் #1314: நான்காம் தந்திரம் - 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யடைவே குரோங்சுரோங் கென்றிட்டுத்
தாவிலீறீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.

விளக்கம்:

பாடல் #1313 இல் உள்ளபடி வரையப்பட்ட இறைவனது கோயிலாக இருக்கும் புவனாபதி சக்கரத்தைச் சுற்றி அடைத்து இருக்கும் படி நான்கு வாசல்கள் வைத்து இரண்டு வரிகள் கொண்ட ஒரு கட்டத்தை வரைந்து அதில் வலது புறத்திலும் இடது புறத்திலும் 'க்ரோம்' 'ஸ்ரோம்' எனும் பீஜங்களை எழுதி விட்டுத் தாமரைப் பூ போன்று இருக்கின்ற வடிவத்தில் 'ஹ்ரீம்' எனும் பீஜ எழுத்தை மறுபடியும் மறுபடியும் சக்கரத்தை முழுவதுமாக சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும். பாடல் #1311 இலிருந்து பாடல் #1314 வரை கொடுக்கப்பட முறைகளின்படி வரையப்பட்ட பிறகு தாமரைப் பூ போல இருக்கின்ற உலகங்களுக்கு அதிபதியாக சேர்ந்து இருக்கின்ற இறைவன் இறைவியின் புவனாபதி சக்கரத்தை பூஜை செய்ய வேண்டும்.

இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://kvnthirumoolar.com/song-1314/

நன்றி :

கருத்துகள் இல்லை: