21 நவ., 2021

இன்றைய திருமந்திரம் : -பாடல் #1315:

திருமந்திரம் -பாடல் #1315: நான்காம் தந்திரம் - 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

பூசிக்கும் போது புவனாபதி தன்னை
யாசற் றகத்தினி லாவாகனம் பண்ணிப்
பேசிப் பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

விளக்கம்:

பாடல் #1314 இல் உள்ளபடி புவனாபதி சக்கரத்தை முறைப்படி வரைந்து அதற்கு பூஜைகள் செய்யும் போது உலகங்களுக்கு அதிபதியாக இருக்கின்ற இறைவனையும் இறைவியையும் சாதகர் தமது மனதினில் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் தூய்மையான மனதிற்குள் மானசீகமாக வெளியில் இருக்கின்ற புவனாபதி சக்கரத்தின் ஆற்றலை உள்ளுக்குள் வரும்படி செய்ய வேண்டும். அதன் பிறகு சக்கரத்திலுள்ள மந்திர பீஜங்களை சத்தமாக உச்சரிக்காமல் அசபையாக மனதிற்குள் செபித்து மூச்சுக் காற்றின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து தமக்குள் வைக்க வேண்டும். அதன் பிறகு இறையின் பேரொளி பொருந்திய ஆற்றலை மனதிற்குள் வைத்த சக்கரத்தோடு ஒன்றாகப் பொருந்தும் படி செய்து முறைப்படி தியானம் செய்ய வேண்டும்.

இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://kvnthirumoolar.com/song-1315/

நன்றி :

கருத்துகள் இல்லை: