14 நவ., 2021

நூல் நயம் : கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்

சினிமா தொழிலாளர்களின் அன்றாட வாழ்கையை சினிமா நிறுவனங்களின் பின்புலத்தில் எந்த வகையிலும் பெரிதாக ரொமாண்டிசைஸ் செய்யாமல் மிகவும் கச்சிதமான சொற்களை கொண்டு இந்த கரைந்த நிழல்கள் நாவலில் பதிவு செய்திருக்கிறார் அசோகமித்திரன். நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வருகிறார்கள் ஆனால் பக்கங்களோ மிகவும் குறைவு இருந்தாலுமே அவர்கள் எல்லோரது பின்புலம் சூழ்நிலைகளையும் அசோகமித்திரன் தனது எழுத்தாளுமையால் நேர்த்தியாக பதிவு செய்துவிடுகிறார். நாவல் பத்து அத்தியாயமாக பிரிக்கப்பட்டு Nonlinear முறையில் கதை சொல்லப்படுகிறது இருந்தாலும் அதை புரிந்துகொள்வதில் நமக்கு எந்த சிரமமும் இருப்பதில்லை. இதை எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எந்த ஒரு அத்தியாயத்தை படித்துக்கொண்டு சென்றாலும் இந்த நாவலை யாரும் விளங்கிக்கொள்ளலாம் அப்படிப்பட்ட இலக்கிய உத்திகளை தான் அசோகமித்திரன் இதில் கையாண்டிருக்கிறார்.
📚♥️✒️

Check out Murugan k : 👇👇
Follow Insta : @murugan_dir for more updates

______புத்தக அறிமுகம்_____

#tamilcinema #bookworm #bookstagram #books #booklover #writing #storytelling #tamil

நன்றி :

திரு கலை ரசிகன், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல் 

கருத்துகள் இல்லை: